பணத்திற்காக செய்த திருமணமா? உங்களுக்கு என்ன தெரியும்.. வசி பற்றி ஓபனாக சொன்ன பிரியங்கா தேஷ்பாண்டே!

சென்னை: விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான பிரியங்கா தேஷ்பாண்டே ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ, பாட்டு போட்டி, டான்ஸ் நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளினியாக இருக்கிறார். கடந்த ஆண்டு இவர் வசி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது, பிரியங்கா மனம் திறந்து பேசி உள்ளார்.

விஜய் டிவியில் கலகலப்பாக, காமெடியாகவும் தொகுத்து வழங்கி பெயர் எடுத்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி வரை வீட்டில் இருந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவர், கடந்த ஏப்ரல் வாரம் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரியங்காவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றதால், தன்னுடைய இரண்டாவது திருமணம் பற்றி யாருக்குமே சொல்லாமல் ரகசியமாக வைத்து இருந்தார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

priyanka deshpande vasi insterview
Photo Credit:

பிரியங்கா தேஷ்பாண்டே: பிரியங்காவின் கணவர் வசி, இலங்கை வாழ் தமிழர்களின் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்து மறைந்த இரா சம்பந்தனின் தங்கையின் மகன் என்றும். இவர், இலங்கையில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் இலங்கையில் நிகழ்ச்சிக்காக பிரியங்காவை அழைத்த போது தான் வசியுடன் நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன் பின் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிரியங்காவின் திருமண செய்தி இணையத்தில் வெளியானதும், புடிச்சாலும் புளியங்கொம்பா பிடித்துவிட்டார் என இவர்களின் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் வந்தன.

மனம் திறந்த பிரியங்கா: இந்நிலையில், பிரியங்கா அளித்திருக்கும் பேட்டியில், திருமணம் குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார். அதில், எனக்கு திருமணமானதும், பல யூடியூப் சேனல்களில் பிரியங்காவின் கணவருக்கு தனி தீவு வைத்து இருக்கிறார். ரூ. 200 கோடி சொத்து இருக்கு, அரசியல் குடும்பம் அதற்காகத்தான் பிரியங்கா திருமணம் செய்து கொண்டார் என்று வாய்க்கு வந்ததை சொன்னார்கள். உண்மையில் என் கணவர் வசி ஒரு இலங்கைத் தமிழர், அவரின் பெற்றோர் அனைவரும் லண்டனில் உள்ளனர். அங்கு ஒரு நிறுவனத்தில் வசி பணியாற்றி வருகிறார். பிரிங்காக பணத்துக்காகத்தான் வசியை கல்யாணம் செய்து கொண்டார் என்கிறார்கள். நான் இத்தனை ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கஷ்டப்பட்டு உழைச்சிருக்கேன், அந்த பணம் எல்லாம் எங்கே போச்சு, என்னிடம் பணம் இருக்காதா? என பிரியங்கா தேஷ்பாண்டே அதிரடியாக பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X