For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹர்பஜன் சிங் ஒரு நல்ல நடிகர்...மனம் திறந்து பாராட்டிய தயாரிப்பாளர் ஸ்டாலின்

  |

  சென்னை : கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஃபிரண்ட்ஷிப். இதில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுன், சதீஷ், சக்திவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  Producer Stalin praises Harbhajan Singh in his exclusive interview

  ரொமான்டிக், விளையாட்டு, காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் 2018 ல் மலையாளத்தில் வெளிவந்த குவீ ன் படத்தின் ரீமேக் ஆகும். ஃபிரண்ட்ஷிப் படம் இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு, ரிலீஸ் செய்யப்பட உள்ளது. செப்டம்பர் 17 ம் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

  Harbhajan singh ஒரு நல்ல நடிகர் | Friendship Movie | Producer Stalin interview | Filmibeat Tamil

  ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி உள்ள இந்த படத்தை ஜேபிஆர், ஸ்டாலின் தயாரித்துள்ளார். நட்பை மையப்படுத்தி எத்தனையோ தமிழ் சினிமாக்கள் வந்துள்ளன. ஆனால் அதோடு மெசேஜ் சொல்வதாக ஃபிரண்ட்ஷிப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

  இந்த படம் பற்றி தயாரிப்பாளர் ஸ்டாலின் மற்றும் நடிகர் சக்திவேல் முருகன், ஃபிலிமிபீட் நேயர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், ஹர்பஜன் இந்த அளவிற்கு நடிப்பார் என எதிர்பார்க்கவே இல்லை. அந்த அளவிற்கு பிரமாதமாக நடித்துள்ளார். முதல் படம் என்றே சொல்ல முடியாது. அந்த அளவிற்கு அவரின் டான்ஸ், சண்டை என அனைத்தும் நன்றாக இருந்தது.

  இப்போது சமூகத்திற்கு தேவையான ஒரு மெசேஜை டைரக்டர் கொடுத்துள்ளார். நட்பு வட்டத்திற்கு தேவையான கருத்து அது. படமும் நன்றாக வந்துள்ளது. படம் பார்த்து விட்டு நாங்கள் அனைவரும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம்.

  ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் பெண்களும் இந்த படத்தை கண்டிப்பாக பார்ப்பார்கள். ரொம்பவே தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்றே சொல்லலாம். இப்போது வரும் பல படங்களை குடும்பத்துடன் சென்று பார்க்க முடிவதில்லை. ஒரு சில காட்சிகள் பார்க்கவே முடியாது. ஆனால் இந்த படத்தில்அப்படி எதுவும் கிடையாது. குடும்பத்துடன் உட்கார்ந்து இப்படியெல்லாம் சமூகத்தில் நடக்கிறது. இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். படம் பார்த்து விட்டு வரும் போது ஒவ்வொரு மாணவனுக்கும், குடும்பத்தினருக்கும் ஒரு அழுத்தமான உணர்வை கொடுக்கும்.

  இந்த படத்திற்கு பிறகு லாஸ்லியாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும். அவரின் குறும்புத்தனம், சீரியஸ் நடிப்பு என எல்லா உணர்வும் வெளிப்பட்டிருக்கும். அடுத்த பிளாட்ஃபார்ம் அமைப்பதற்கான நல்ல அடித்தளமாக இந்த படம் அவருக்கு இருக்கும்.

  தயாரிப்பாளர்கள் நாங்கள் அனைவரும் ஒரு டீமாக இணைந்து தான் படம் தயாரித்து வருகிறோம். எனது கம்பெனி பெயர் சினிமா ஸ்டூடியோஸ். வேல்முருகன், செந்தில் முருகன், ஜேபிஆர் என நாங்கள் ஒரு டீமாக இருந்து, ஆலோசித்து, நல்ல கதையம்சம் கொண்ட படங்களை வழங்கி வருகிறோம். அடுத்த தலைமுறைக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. அதனால் அவர்களுக்கே தெரியாமல் நல்ல மெசேஜ்ஜை அவர்களுக்குள் புகுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் படம் பண்ணி வருகிறோம்.

  சக்திவேல், படத்தில் ஒரு வாய் பேச முடியாத கேரக்டரில் நடித்துள்ளார். ரொம்ப நல்லா பண்ணிருக்கார். அதுவும் பேசப்படும் ஒரு கேரக்டர். ஹர்பஜன் சிங்கின் நான்கு நண்பர்களில் இவரும் ஒருவர். ஹர்பஜனும் அப்படி தான். எங்களோடு ஒன்றாக கலந்து, நன்றாக ஒத்துழைப்பு அளித்தார். தயாரிப்பாளர்கள் டீம், டைரக்டர்கள் டீமுக்கும் எனது நன்றி.

  இளைஞர்களை கவரும் விதத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்தியும், இரண்டாவது பாதியில் குடும்பங்களை கவரும் வகையிலும் படம் அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் வரும் போது ஒரு திருப்தியான உணர்வை ரசிகர்களுக்கு இந்த படம் கொடுக்கும்.

  இந்த படத்தில் ஹர்பஜன் சிங்கை அரஸ்ட் பண்ணி கூட்டிச் செல்லும் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளேன். அதில் நடிக்க முதலில் தயக்கமாக இருந்தது. ஹர்பஜன் ஏற்கனவே 25 வருட பிரபலமானவர். அவருடன் எப்படி இதை செய்வது என தயங்கினேன். ஆனால் அவர், மச்சான் தைரியமாக பண்ணு என எனக்கு தைரியம் கொடுத்தார். அவர் சட்டையை இறுக்கமாக பிடித்து இழுத்து வர வேண்டும். அதனால் அவருக்கு திருப்தி வரும் அளவிற்கு அந்த படத்தை எடுத்தோம்.

  ரஜினி டயலாக்குடன்.. மட்டமல்லாக்க படுத்திருக்கும் போட்டோவை போட்ட சிம்பு.. பீலாகும் ஃபேன்ஸ்! ரஜினி டயலாக்குடன்.. மட்டமல்லாக்க படுத்திருக்கும் போட்டோவை போட்ட சிம்பு.. பீலாகும் ஃபேன்ஸ்!

  அவர் ஃபிரியாக இருக்கும் சமயத்தில் ஹர்பஜன் தன்னை அவ்வளவு எனர்ஜியாக வைத்துக் கொள்கிறார். பழைய விஷயங்கள், தோனி சாருடன் இருந்தது, கிரிக்கெட் அனுபவங்களை மற்றவர்களுடன் பேசி மகிழ்வார் என்றார்.

  சக்திவேல் முருகன் பேசுகையில், இது தான் எனது முதல் படம். படத்தில் எனது கேரக்டர் பேரும் சக்தி தான். நாங்கள் எல்லோரும் ஃபிரண்ட்சாக, காலேஜில் எப்படி இருந்தோம் என்பது போல் இயல்பாக நடித்துள்ளோம். இந்த படத்தில் வாய் பேச முடியாத கேரக்டர் என்பதால் எனக்கு டயலாக் எதுவும் கிடையாது. இருந்தாலும் எனது முழற்சியையும் போட்டுள்ளேன். இந்த படத்தில் ஸ்டாலின் அசிஸ்டன்ட் கமிஷனர் கேரக்டரில் நடித்துள்ளார் என்றார்.

  English summary
  Stalin who is the producer of Frienship movie praised harbhajan singh's acting. and he shared interesting facts about this film. producer stalin also starring as ACP in this movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X