சிம்பு - வெற்றிமாறன் படம் தாமதம்.. தனுஷ் தான் காரணம்.. தயாரிப்பாளர் டி.ஆர். ரமேஷ் பேட்டி!

சென்னை: தயாரிப்பாளர் டி.ஆர். ரமேஷ் பிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சிம்பு - வெற்றிமாறன் படம் தாமதமாக காரணமே தனுஷ் தான் என பேசியுள்ளது பரபரப்பை பற்ற வைத்துள்ளது. மேலும், ரஜினிகாந்தின் கூலி படம் ஃபிளாப் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி விஜய் அரசியல் குறித்தும், விஜயகாந்தை அவர் அண்ணன் என பேசியது குறித்தும் பேசியுள்ளார்.

விஜய், விஜயகாந்த் பற்றி மேடையில் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது. "என் அண்ணன் விஜயகாந்த்" என்று அவர் கூறியது விமர்சனங்களுக்கு உள்ளானது. விஜயகாந்த் கஷ்டத்தில் இருந்தபோது பார்க்காத விஜய், இப்போது சுயநலத்திற்காக பேசுகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

Producer TR Ramesh talks about Vijay politics and Simbu - Vetrimaaran movie
Photo Credit:

தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் இதுகுறித்து கூறுகையில், "விஜய், விஜயகாந்தை அண்ணன் என்று உரிமையோடுதான் குறிப்பிட்டார். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவரைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. எஸ்.ஏ.சந்திரசேகரே பலமுறை முயற்சித்தும் பார்க்க முடியவில்லை" என்றார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். விஜயகாந்துடன் 13, 14 படங்கள் வரை அவர் இயக்கியுள்ளார். அந்த குடும்பத்துடன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறார். மணிவண்ணன் எப்படி சத்யராஜுக்கு நெருக்கமோ, அதேபோல் விஜயகாந்த் குடும்பத்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் நெருக்கமானவர்.

Producer TR Ramesh talks about Vijay politics and Simbu - Vetrimaaran movie

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி படம் தாமதமாவதற்கு சிம்பு காரணம் இல்லை என்று ரமேஷ் கூறினார். "வெற்றிமாறன், தனுஷ், தயாரிப்பாளர் ஆகியோர்தான் காரணம். சிம்பு எப்போதுமே ரெடி. அவர் உடல் எடையை குறைத்து தயாராக இருக்கிறார். மற்ற வேலைகளை முடித்துவிட்டு, சிம்பு ஃபாரின்ல இருந்து வந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும்" என்றார்.

விஜய் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறாரா என்ற கேள்விக்கு, "அவருக்கு அந்த எண்ணம் இல்லை. அவர் இப்போது நம்பர் ஒன் ஸ்டார். ரஜினி சூப்பர் ஸ்டார் பட்டத்தை இழந்து பத்து வருடங்கள் ஆகிறது. விஜய் தன்னுடைய படங்களில் வேலை செய்பவர்களுக்கு வீடு கொடுத்து உதவியுள்ளார். நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்கிறார்" என்று ரமேஷ் பதிலளித்தார்.

சமீபத்தில் வெளியான ரஜினியின் "கூலி" திரைப்படம் தோல்வி அடைந்ததாக ரமேஷ் குறிப்பிட்டார். "விஜய் தான் இப்போது தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார். அவருக்கு 250 கோடி சம்பளம். ரஜினிக்கு 300 கோடி சம்பளம் தருவதாக சொல்வது பொய்யான தகவல். கருப்பு பணத்தை வெள்ளையாக்க இப்படி சொல்கிறார்கள்" என்று அவர் கூறினார். சினிமாவையும் நாட்டையும் பலர் அழிக்கும்போது நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரமேஷ் ஆவேசமாக கூறினார்.

More from Filmibeat

Read more about: vijay tamil cinema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X