யாரை பத்தியும் யோசிக்கல.. பொத்துனு தேவயானி காலில் விழுந்தேன்.. கணவர் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: பப்ளியான முகம், முல்லைப்பூ நிறம், க்யூட்டான சிரிப்பு, நடிப்பு, நடனம் என 90 கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர் தான் நடிகை தேவயானி. இன்று வரை தேவயானிக்கு என்று ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு, குழந்தைகளுக்காக சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த தேவயானி மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். இவர் குடும்பத்தை எதிர்த்து ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். தற்போது பேட்டி ஒன்றில் ராஜகுமாரன் தனது திருமணம் குறித்து பேசி உள்ளார்.

தொட்டாச்சிணுங்கி திரைப்படத்தின் மூலமாக தமிழில் கால் பதித்தார் தேவயானி. அந்தப் படத்தில் தேவயானி நடித்தது கிளாமல் கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த ரோலை அவருக்கு தேவயானியும் ரசிக்க வில்லை ரசிகர்களும் ரசிக்கவில்லை. அதைத்தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு, அஜித்துடன் இணைந்து 'காதல் கோட்டை' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் நடித்த கமலி கதாபாத்திரம் இன்று வரை தமிழ் ரசிகர்கள் மனதில் நிறைந்து இருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு, தேவயானியைத் தமிழ் மக்கள் தங்கள் வீட்டுப் பொண்ணாக நினைக்க தொடங்கினார்கள்.

Devayani Rajakumaran interview
Photo Credit:

மனசு தான் முக்கியம்: காதல்கோட்டை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யவம்சம், மறுமலர்ச்சி, தொடரும், நீ வருவாய் என, மூவேந்தர், பாட்டாளி, சமஸ்தானம், ஒருவன், தென்காசிப்பட்டணம், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், என் புருஷன் குழந்தை மாதிரி, கோட்டை மாரியம்மன், அழகி, பஞ்சதந்திரம் என நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்த தேவயானி அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில், இயக்குநர் ராஜகுமாரனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இது திரைதுறையினரை மட்டுமில்லை, அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அண்மையில், தனது திருமணம் குறித்து பேசிய தேவயானி, நான் பரபரப்பாக நடித்து கொண்டிருந்த நேரத்தில், திடீர்னு திருமணம் செய்து கொண்டேன். அது இவ்ளோ பெரிய பேசுபொருளாக மாறும் என்று நான் நினைக்கவே இல்லை. அந்த நேரத்தில், பலர் பேர், உன் வாழ்க்கையை இப்படிக் கெடுத்துக்கிட்டியேம்மா என்று சொன்னார்கள். ஆனால், நடித்து பணம் சம்பாதித்து கொண்டே இருந்தா மட்டும் போதுமா? மனசுனு ஒண்ணு இருக்கே. அதனாலதான் என் வாழ்க்கைக்கு எது சரி என்று பட்டதோ அதை செய்தேன். நீ வருவாய் என படத்தில் இவர் எழுதிய காதல் வசனத்தை பார்த்துத்தான் இவர் மீது எனக்கு காதலே வந்தது என்றார்.

காலில் விழுந்தேன்: அதைத்தொடர்ந்து பேசிய ராஜகுமாரன், திருமணத்தின் போது பெண் தான் கணவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள். நான் தேவயானி கழுத்தில் தாலி கட்டியதும், அவர் என் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். உடனே நானும், அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி விட்டேன். எவ்வளவு பெரிய ஹீரோயினை திருமணம் செய்து இருக்கிறோம், பெயர், புகழ், உறவு என அனைத்தையும் விட்டுவிட்டு என்னை திருமணம் செய்து கொண்டார். அதற்காக அவர் காலில் விழுவது தப்பு இல்லை என எனக்கு தோன்றியதால் அவரின் காலில் விழுந்து நான் ஆசீர்வாதம் வாங்கினேன். சுற்றி இருந்த என்னுடைய அசிஸ்டன்ட் எல்லாம் எல்லாம் வியந்து பார்த்தார்கள் என்று அந்த பேட்டியில் ராஜகுமாரன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X