»   »  சிவாஜி பெரும் வெற்றி பெறும்-ரஜினி

சிவாஜி பெரும் வெற்றி பெறும்-ரஜினி

Subscribe to Oneindia Tamil

சிவாஜி மிகச் சிறப்பாக வந்துள்ளது. இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் படு ஆவலாக எதிர்பார்த்து வந்த சிவாஜி ஒரு வழியாக வெளியாகி விட்டது. திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் திருவிழாக் கூட்டமாக உள்ளது.

நேற்று இரவு முதலே பெரும்பாலான தியேட்டர்களில் சிவாஜியைத் தொடங்கி விட்டனர். விடிய விடிய பல தியேட்டர்களில் சிவாஜி ஓடிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் சிவாஜி படம் ரிலீஸாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரஜினிகாந்த் சிறப்புப் பேட்டி அளித்தார்.

அதில், சிவாஜி சிறப்பாக வந்துள்ளது. இப்படம் பெரும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். மீடியாக்கள் உருவாக்கி விட்ட பரபரப்பு ஒருபக்கம் இருந்தாலும் கூட படம் மிகச் சிறப்பாகவே வந்துள்ளது.

ஷங்கர் மிகச் சிறந்த இயக்குநர். கூடவே ஏவி.எம். நிறுவனமும் சேர்ந்துள்ளால் சிவாஜி மிகச் சிறந்த படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் நான் மிகவும் இளமையானவனாக தோன்றுகிறேன். அந்தப் பெருமை ஷங்கருக்கே போய்ச் சேர வேண்டும். என்னை மாற்றியது ஷங்கர்தான். அதுதான் ஷங்கரின் ஸ்பெஷாலிட்டி.

சிவாஜி பெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது ரசிகர்கள் பலவித வேண்டுதல்களில் ஈடுபட்டுள்ளதாக அறிந்து நெகிழ்ந்தேன். என் மீது பாசத்தையும், அன்பையும் வைத்துள்ளவர்கள் அவர்கள். மண் சோறு சாப்பிட்டுக் கூட சிலர் வேண்டுதல் செய்துள்ளனர். இவையெல்லாம் என்னை நெகிழ வைத்து விட்டது.

சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் என்னை ஒப்பிட்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது என்னைப் பாதித்து விட்டது. அவர் எங்கே, நான் எங்கே. உண்மையில் அவர்தான் எனக்கு குரு, இன்ஸ்பிரேஷன். அவருடன் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை என்றார் ரஜினிகாந்த்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil