»   »  திட்டித் தீர்த்த ராணி முகர்ஜி

திட்டித் தீர்த்த ராணி முகர்ஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷாருக் கானை நீங்க ரகசியமாக கல்யாணம் செய்து கொண்டு வாழ்கிறீர்களா என்றுசெய்தியாளர்கள் கேட்கப் போக டென்ஷன் ஆன ராணி முகர்ஜி காச் மூச்சென்று கத்தித்தீர்த்துவிட்டார்.

இந்தித் திரையுலகின் அழகு ராணியான வங்கத்து குல்கந்து ராணி முகர்ஜி நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் வாரணாசியில் நடந்து வருகிறது. அப்போது ராணியைசெய்தியாளர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் ராணியும், அவருடன் நடிக்கும் வங்காள நடிகை கொங்கனா சென்னும் கலந்துகொண்டனர். பேட்டி நடந்தது 20 நிமிடங்கள்தான். ஆனால் பேட்டியில் கேட்கப்பட்டபல கேள்விகளுக்கு ராணி பதிலே சொல்லாமல் கடுப்பாக இருந்தார்.செய்தியாளர்களிடம் கோபத்தைக் காட்டி எரிந்து விழுந்தார்.

போதும், இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என கூறியபடியே இருந்தார். ராணியின்இந்த டென்ஷனுக்கு காரணம், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து செய்தியாளர்கள்கேட்ட சரமாரி கேள்விகள்தான்.

ஷாருக் கானுக்கும் உங்களுக்கும் ரகசிய கல்யாணம் நடந்து விட்டதாமே, இருவரும்ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்களாமே என்று ஒரு நிருபர் கேட்டது தான்தாமதம்,

டென்ஷன் ஆகிப் போனார் ராணி, எனது திருமண வாழ்க்கை குறித்து உங்களுக்குஎன்ன கவலை? அது உங்களுக்குத் தேவையில்லாதது. அதை எனது பெற்றோர்கள்பார்த்துக் கொள்வார்கள் என்று படு டென்ஷனாக எகிறினார்.

விடாத செய்தியாளர்கள், மகாபாரதம் திரைப்படமாக வளரப் போகிறது. அதில் நீங்கள்திரெளபதியாக நடிக்கப் போகிறீர்களாமே என்று கேட்க, பதிலே சொல்லாமல் முகத்தைஉர்ரென்று வைத்துக் கொண்டிருந்தார் ராணி.

படு சூடாகப் போய்க் கொண்டிருந்த பேட்டியால் நிலைமை அனணலென தகித்தது.இதை உணர்ந்தாரோ என்னவோ, டிராக்கை மாற்றி வாரணாசியைப் புகழ்ந்து நாலுவார்த்தைகளை சொல்லிக் கொண்டு பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டுஎழுந்து போய்விட்டார்.

மகாபாரதத்தில் ராணி முகர்ஜி:

ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் நீண்ட தொடராக வந்தது மகாபாரதம். பலமொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது மகாபாரதம் தொடர். கிட்டத்தட்ட120 இந்திய மொழிகளிலும், 88 வெளிநாட்டு மொழிகளிலும் இந்தத் தொடர் டப்செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொடரை இப்போது திரைப்படமாக்க உள்ளனர். அமிதாப்பச்சனை பீஷ்மர்வேடத்திலும், ராணி முகர்ஜியை திரெளபதி வேடத்திலும் நடிக்க வைக்க பேச்சு நடந்துவருகிறது.

கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு ஓடும் வகையில் மிக நீண்ட படமாக உருவாக்கத்திட்டமிட்டுள்ளனராம். பட்ஜெட் ரூ. 150 கோடி என்கிறார்கள். இதை நம்பவும்முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

Read more about: rani mukerjee in mahabharath

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil