»   »  நான் செஞ்சா மட்டும் தப்பா? சங்கீதா

நான் செஞ்சா மட்டும் தப்பா? சங்கீதா

Subscribe to Oneindia Tamil

ஹீரோக்கள் மட்டும் வில்லத்தனம் செய்து வித்தியாசமாக நடிக்கலாம். ஹீரோயின்கள்அப்படி வித்தியாசமாக நடித்தால் அதை கடுமையாக விமர்சிப்பது நியாயமா என்றுஉயிர் சங்கீதா குமுறுகிறார்.

உயிர் படத்தில் கொழுந்தனை கொய்யும் காம லட்சியத்துடன் திரியும் அண்ணிவேடத்தில் அசத்தலான நடிப்பை வெளிக்காட்டியவர் சங்கீதா. இந்த வேடம் கடும்சர்ச்சைக்கு உள்ளானது.

இப்படிப்பட்ட படத்தை எடுக்கும் இயக்குனர்களை தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும்என வைகைப் புயல் வடிவேலு கொதித்துப் போய் பேசும் அளவுக்கு அண்ணிபடத்தின் கேரக்டரைசேஷன் சர்ச்சையில் சிக்கியது.

இப்படி சர்ச்சையில் சிக்கினாலும் கூட படம் பட ஓட்டம் ஓடி வசூலை வாரிக் குவித்ததுதனிக் கதை. உயிர் படம் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த சங்கீதா இப்போதுதனம் என்ற மற்றொரு வித்தியாசமான படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. அப்போது அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில், உயிர் படத்திற்காக உயிரைக் கொடுத்து பலரும் விமர்சித்தார்கள்.ஆனால் இப்போது நடிக்கப் போகும் தனம் படம் அதை விட கடுமையான கருத்தைக்கொண்டது. இதை எப்படி விமர்சிக்கப் போகிறார்களோ?

இப்படத்தில் நான் விபச்சாரப் பெண்ணாக வருகிறேன். விபச்சாரப் பெண்கள் இன்று,நேற்று தோன்றியவர்கள் அல்ல. ஆயிரமாயிரம் காலமாக இந்த தொழில் இருந்துவருகிறது. இதை திரைப்படம் மூலம் காட்டினால் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

சமுதாயத்தில் நடப்பதுதான் சினிமாவிலும் காட்டப்படுகிறது. அதை ஏன்விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. கலாச்சாரம் கெட்டு விட்டது,இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்பவர்களிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி,இப்படியெல்லாம் நமது சமூகத்தில் நடக்கவே இல்லையா?

உயிர் படத்தில் நான் நடித்த அருந்ததி கேரக்டர் சரியானது என்று அப்படத்தில்காட்டப்படவில்லையே, அது தவறு என்றுதானே சொன்னோம். ஒரு தவறு என்றால்அதை சொல்லித்தான் இது தவறு என்று கூற முடியும்.

ஹீரோக்கள் மட்டும் வில்லத்தனமாக, வித்தியாசமாக நடித்தால் யாரும் எதுவும்சொல்வதில்லை. அட, வித்தியாசமாக நடித்துள்ளாரே என்று பாராட்டுகிறார்கள்.ஆனால் அதையே பெண்கள், ஹீரோயின்கள் செய்தால்மட்டும் கொடி பிடித்துகொந்தளித்து விடுகிறார்கள். இது என்ன

நான் விளம்பரத்திற்காக இதுபோன்ற கேரக்டர்களில் நடிக்கவில்லை. எனக்கு கதைபிடித்தால்தான் ஒப்புக் கொண்டு நடிக்கிறேன். உயிர் படத்தில் ஒரு காட்சியில் கூடநான் ஆபாசமாக, அசிங்கமாக நடிக்கவில்லை.

இந்திப் படங்களில் இதுபோன்ற கேரக்டர்களில், இதை விட மோசமான கேரக்டர்களில்முன்னணி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இப்படிவிமர்சனங்களில் சிக்குவதில்லை. இங்குதான் கோபப்படுகிறார்கள் என்று பொங்கித்தள்ளி விட்டார் சங்கீதா.

தனம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்துக்கானவிளம்பரத்தில் இளையராஜா சுவாமிகளின் இசையில் என்றுவிளம்பரப்படுத்தப்பட்டிருந்தது (பெரியார் சர்ச்சைக்குப் பதிலோ?) வித்தியாசமாகஇருந்தது.

சங்கீதா தவிர பிரகாஷ் ராஜ், விவேக், மனோபாலா, சித்ரா லட்சுமணன் மயில்சாமிஉள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். படத்தை ஜி.சிவா இயக்குகிறார். ஜீவாகேமராவைக் கையாளுகிறார். எடிட்டிங் லெனின், கலை தோட்டா தரணி.

பெரும் பெரும் புள்ளிகளின் கைவண்ணத்தில் உருவாகப் போகும் தனம் மூலம் எந்தசர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போடப் போகிறாரோ சங்கீதா..

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil