»   »  இரண்டு ஆன ரெண்டு!

இரண்டு ஆன ரெண்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுந்தர். சி. இயக்கம், மனைவி குஷ்புவின் தயாரிப்பில் உருவான ரெண்டு படம்,இரண்டு என பெயர் மாறி தியேட்டர்களை கலக்க ஆரம்பித்துள்ளது.

தலைநகரம் படத்தின் மூலம் ஹீரோவான சுந்தர். சி. நடிப்புக்கு கொஞ்சம் பிரேக் விட்டுஇயக்கிய படம்தான் ரெண்டு. மாதவன், அனுஷ்கா, ரீமா சென் ஜோடியில்,வடிவேலுவின் காமெடி அதிரடியில் தியேட்டர்களை பட்டையைக் கிளப்பஆரம்பித்துள்ளது.

படம் வெளியாகி 3 நாட்கள் கழித்து படப் பெயரை இரண்டு என மாற்றியுள்ளனர். வரிவிலக்குக்காக இந்த பெயர் மாற்றமா என்று சுந்தர்.சி.யிடம் கேட்டால், அதற்காகமட்டும் இல்லை. ரொம்ப காலோக்கியலாக இருக்கிறது என பலரும் அபிப்பிராயம்சொன்னதால் நல்ல தமிழில் இரண்டு என மாற்றி விட்டோம் என்றார்.

படத்தில் ரீமாவும் அனுஷ்காவும் கிளாமர் போட்டியில் பின்னியிருக்கிறார்களே என்றுசுந்தர்.சி.யிடம் கேட்டால் நமுட்டாக சிரித்தபடி அது மட்டும் இல்லை, நல்லநடிப்பையும் அள்ளித் தந்துள்ளார்களே என்கிறார்.

எப்போ மறுபடியும் ஹீரோ வேஷம் என்றால், தலைநகரம் மூலம் என்னைநடிகராகவும் மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். சிலர் என்னை அணுகிஉங்களுக்காகவே கேரக்டர்கள் வைத்துள்ளதாக கூறுகிறார்கள். அதில் 3 படங்களைநான் பரிசீலனைக்கு எடுத்துள்ளேன். அதில் தான் அடுத்தடுத்து நடிக்கப் போகிறேன்.

அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்கவுள்ளதால் இப்போதைக்கு இயக்கத்திற்கு பிரேக்விட்டுள்ளேன் என்கிறார் சுந்தர்.சி. அத்தோடு மனைவி தயாரிப்பில் ஒரு படத்தில்ஹீரோவாக வேஷம் கட்டப் போகிறாராம் சுந்தர்.சி.

மனைவி இருக்க பயமேன்!

Read more about: rendu title changed

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil