16 கோடியே எனக்கு பெரிய பட்ஜெட் தான்.. மனைவி கொடுத்த தைரியம்.. ரிஷப் ஷெட்டி எமோஷனல் பேச்சு!

சென்னை: ஒரு காலத்தில் எம்ஜிஆர் எப்படி நடிகராகவும் இயக்குநராகவும் மாறி சூப்பர் ஹிட் படங்களை தமிழில் கொடுத்தாரோ அதே போல தற்போது ரிஷப் ஷெட்டி மாறி கன்னட சினிமாவை தூக்கி நிறுத்தியுள்ளார். காந்தாரா படத்தின் பட்ஜெட் வெறும் 16 கோடி என்றும் அது சின்ன பட்ஜெட் படம் என்றும் ரசிகர்கள் கூறி வரும் நிலையில், அது தனக்கு மிகப்பெரிய பட்ஜெட் படம் என்றும் அதற்கு முன்பு வரை அப்படியொரு பட்ஜெட்டில் படம் பண்ணவில்லை என்பதை சமீபத்திய பேட்டியில் செம ஓபனாக பேசி ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

இப்படியொரு ஹீரோ மற்றும் இயக்குநர் தமிழ் சினிமாவில் இல்லையே என பலரும் ஃபீல் பண்ணும் அளவுக்கு ஒரு பிரமாண்ட படத்தை கொடுத்து அனைவரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

Rishab Shetty opens up Kantara first part movie 16 budgdet is very big for him
Photo Credit:

வெறும் 16 கோடி பட்ஜெட்டில் அவர் இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் 400 கோடி வசூல் ஈட்டி ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி கன்னட திரையுலகத்தை யஷ்ஷை தொடர்ந்து இவரும் தூக்கி நிறுத்திவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

துணை நிற்கும் பிரபலங்கள்: ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 படத்தை பார்த்த முன்னணி நடிகர்களான யஷ், ரக்‌ஷித் ஷெட்டி உள்ளிட்ட பலரும் காந்தாரா படத்தை கொண்டாடி வருகின்றனர். ராம் கோபால் வர்மா பாராட்டி ஆபாச வார்த்தைகளில் எல்லாம் போட்ட ட்வீட் ரசிகர்களை தலை சுற்ற வைத்துவிட்டது. திறமையான படைப்பை திரையுலகமும் ரசிகர்களும் எப்போதும் கொண்டாடுவார்கள் என்பதை காந்தாரா படத்திலேயே நிரூபித்த ரிஷப் ஷெட்டி காந்தாரா சாப்டர் 1 படத்தை பேருக்காக எடுக்காமல் முதல் பாகத்தை விட கடின உழைப்பைக் கொட்டி எடுத்துள்ளார்.

Rishab Shetty opens up Kantara first part movie 16 budgdet is very big for him
Photo Credit:

16 கோடியே பெருசு: காந்தாரா முதல் பாகம் வெறும் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 400 கோடி வசூல் வந்ததை பலரும் ஆச்சர்யமாக பார்த்தனர். ஆனால், எனக்கு ஆச்சர்யமே அந்த 16 கோடி பட்ஜெட் படம் எனக்கு கிடைத்தது தான்.அதற்கு முன்பு வரை அத்தனை பெரிய பட்ஜெட்டில் பணியாற்றவில்லை. என் மனைவியிடம் 16 கோடி பட்ஜெட் என்றால் 32 கோடியாவது வசூல் செய்தால் தான் லாபம் வரும், இல்லையென்றால் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வேன் என்று பயந்துக் கூறினேன்.

தைரியம் தந்த மனைவி: அதெல்லாம் கவலைப்படாதீங்க, கண்டிப்பாக உங்கள் உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என தைரியம் அளித்து தேற்றினார். படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அந்த பட்ஜெட்டை ரசிகர்கள் சின்ன பட்ஜெட் ஆக்கிவிட்டனர் என்று நீயா நானா கோபிக்கு அளித்த பேட்டியில் ரிஷப் ஷெட்டி கூறியிருந்தார்.

மணிகண்டன் குரல் சூப்பர்: ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இந்தளவுக்கு தமிழ் ரசிகர்களை கவர காரணம் ரிஷப் ஷெட்டிக்கு மணிகண்டன் கொடுத்த டப்பிங் தான் என்றும் பெருமையாக பேசியுள்ளார் ரிஷப் ஷெட்டி. 125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் அதிரடியாக 200 கோடி வசூலை இன்றைக்குள் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X