twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாட்டை அடித்து தின்று விடுவோம்...அப்படிப்பட்ட பசி, இயக்குனர் எஸ்.ஏ.சி க்கு என்ன நடந்தது ?

    |

    சென்னை: எஸ்.ஏ.சந்திரசேகர் சமீப காலமாக தனது வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை வீடியோ பேட்டிகள் மூலம் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். மறக்க முடியாத பல நினைவுகளை பிரத்தியேகமாக நமது பில்மிபீட தளத்திற்காக பல பதில்களை சொல்லி உள்ளார் .

    தனது நல்ல நண்பர் விஜய்காந்த் பற்றியும் நிறைய பேசுபவர் எஸ்.ஏ.சி. விஜய்காந்த் ஆக்டிவ் ஆக மட்டும் இருந்திருந்தால், தமிழக அரசியலில் இரண்டு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்பட்டிருக்கும் என்று நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். நடிகர் என்பதை விட விஜயகாந்த் மனிதநேய மிக்கவர், நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் என்பதை ஒரு நாளும் மாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.

    வாயில பீடி... லுங்கியை ஏத்தி கட்டி… புஷ்பா பாணியில் நானி நடிக்கும் 'தசரா'வாயில பீடி... லுங்கியை ஏத்தி கட்டி… புஷ்பா பாணியில் நானி நடிக்கும் 'தசரா'

    கதையை ஆரம்பிப்பது நாமாக இருக்கலாம். ஆனால் திரைக்கதையை அமைப்பதும், படத்திற்கு இடைவேளையை விடுவதும், படத்தின் இறுதிகாட்சியை அதாவது கிளைமாக்ஸ் எப்படி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்வது இறைவன் மட்டுமே என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை அன்றும், இன்றும் எப்படியிருக்கிறது என்பதை குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை ரீவைன்ட் ராஜா நிகழ்ச்சியில் வினோத்துடன் பகிர்ந்து கொண்ட வீடியோ பேட்டியை பற்றி இங்கு பார்க்கலாம் .

    பல பேரின் அறிமுகங்கள்...

    பல பேரின் அறிமுகங்கள்...

    கேள்வி: சென்னையில் உங்களுக்கு மறக்கமுடியாத இடம் எது?

    பதில்:சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலை தான். இந்த சாலை தான் எனது வாழ்க்கையிலும், நான் உதவி இயக்குனராக பணியாற்றும்போதும் கூட பல சாதனைகளுக்கு காரணமாக அமைந்தது. நான் நாடகத்துறையில் இருந்து இந்த சினிமாத்துறைக்கு வந்தவன். இதனால் தான் எனக்கு பல பேரின் அறிமுகங்கள் விரைவாக கிடைத்தது. அப்போது பாலச்சந்தர், விசு, ஜோ, ஒய்.ஜி.பார்த்தசாரதி போன்றவர்கள் நாடகத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அந்த காலக்கட்டத்தில் நான் மாதத்தில் தொடர்ந்து 30 நாட்கள் நாடகத்தில் பணியாற்றினேன்.

    ஏவிஎம் ஸ்டூடியோ வாசலில் ...

    ஏவிஎம் ஸ்டூடியோ வாசலில் ...

    கேள்வி: ஏவிஎம், வாஹினி, பிரசாத் ஸ்டூடியோ குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்:ஏவிஎம், வாஹினி, பிரசாத் ஸ்டூடியோக்களின் வாசலில் தவம் இருக்காத எவரும் சினிமாத்துறைக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. என்னை போன்ற உதவி இயக்குனர்கள் எத்தனையோ பேர் வாய்ப்புக்காக மேற்கண்ட ஸ்டூடியோக்களின் வாசலில் தவம் இருந்துள்ளனர். நான் ஏவிஎம் ஸ்டூடியோ வாசலில் காத்திருக்க காரணம் என்னவென்றால், நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில், கலைஞரின் வசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தை நான் படித்துக் கொண்டிருக்கும்போது 4 முதல் 5 முறை பார்த்தேன். இதற்காக வீட்டில் பல தடவை அடியும் வாங்கி இருக்கிறேன். சிவாஜி கணேசன் நடிப்பில் ஏவிஎம் ஸ்டூடியோ என்கிற இந்த இடம் மிகவும் சக்தி வாய்ந்தது பல விதத்தில் என்று பெருமையாக சொன்னார் எஸ்.ஏ .சி .

    மாட்டை அடித்து தின்று விடுவோம்

    மாட்டை அடித்து தின்று விடுவோம்

    கேள்வி: உங்களது இளமைப்பருவம் எப்படி இருந்தது?

    பதில்:நான் இராமநாடு மாவட்டத்தில் படித்து கொண்டிருக்கும்போது, வரும் திரைப்படங்களை டூரிங் டாக்கீஸ் சென்று எனது நண்பர்களுடன் சென்று பார்ப்பேன். அப்போது அங்கு கலாட்டாவும் செய்வோம். அந்தந்த வயதில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லையென்றால் அது வாழ்க்கை கிடையாது. 50 வருடம் கழித்து அதை திருப்பி பார்க்கும்பொழுது, ஒரு சந்தோஷம் இன்றும் எனக்கு ஏற்படுகிறது. நான் பள்ளியில் படிக்கும்பொழுது, நானும் எனது நண்பர்களும் சேர்ந்து சிந்துசமவெளி என்ற தலைப்பில் நாடகம் நடத்தினோம். அதில் சாப்பாட்டிற்கு உணவு இல்லாமல் கஷ்டப்படும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும்பொழுது, எதிரே வரும் மாட்டை அடித்து தின்று விடுவோம் என்ற வசனத்தை உச்சரிப்பேன். இதற்கு எனது வகுப்பு ஆசிரியர் மேடை ஏறி என்னை பளார் என்று அடித்து விட்டார் . வரலாறு தானே என்று வாதாட கடைசியில் அவர் என்னை தள்ளி விட நான் அவரை தள்ளி விட ஒரு மிக பெரிய தள்ளுமுள்ளு நடந்தது. அந்த பிரச்னையை இந்த நாள் வரை என்னால் மறக்கவே முடியாது.

    ரயில்வே கேட்டில் நிற்காமல் செல்ல முடியாது

    ரயில்வே கேட்டில் நிற்காமல் செல்ல முடியாது

    கேள்வி: சென்னை அப்பொழுதும், இப்பொழுதும் எப்படியிருக்கிறது உங்கள் பார்வையில்...

    பதில்:நான் உதவி இயக்குனராக இருந்தபோது இருந்த சென்னை வேறு, இப்பொழுது இருக்கின்ற சென்னை வேறு. நான் உதவி இயக்குனராக இருந்தபோது "ஹமீதியா" என்கிற ஹோட்டல் தான் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏனென்றால் நான் எனது காதலை வெளிப்படுத்திய இடம் அது. இதை என்னால் மறக்க முடியாது.அதற்கு அடுத்தபடியாக சென்னை கோடம்பாக்கம் ரயில்வே கேட். அந்த காலக்கட்டத்தில் சினிமாத்துறையில் இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்ற நடிகர், நடிகைகள் இந்த ரயில்வே கேட்டில் நிற்காமல் செல்ல முடியாது.

    1970 முதல் 1990 வரை

    நடிகர்களை பார்ப்பதற்கே இங்கே ஒரு கூட்டம் கூடும். அந்த கூட்டத்தில் நானும் ஒருவன். நான் நடிகர்களை பார்பதற்காக நிற்கவில்லை. இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்பதற்காக நின்று கொண்டிருந்தேன். அதற்கு அடுத்தப்படியாக இன்று மெட்ரோ சிட்டியாக திகழும் பாண்டிபஜார். அன்று இந்த பாண்டிபஜார் பிளாட்பார்மில் எத்தனையோ இரவுகள் படுத்து தூங்கியிருக்கிறேன். 1970 முதல் 1990 வரை சென்னை ஒரு மாதிரியும், 90 முதல் இன்று வரை சென்னை வேறு மாதிரியும் காணப்படுகிறது. இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/BcH6M8h2fv4 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் எஸ்.ஏ.சி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள் .

    English summary
    SA Chandrasekar Shares his Drama Experience in his childhood days
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X