மனசுல அந்த காதல் எப்படியோ இருக்கு.. ஜிவி பிரகாஷ் குறித்து மனம் திறந்து பேசிய சைந்தவி!

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகனும், இசையமைப்பாளர், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது பள்ளி கால தோழியான சைந்தவியை பல வருடங்கள் காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 11 வருடம் இணைபிரியாமல் வாழ்ந்த இவர்கள், கடந்த ஆண்டு பிரிந்தனர். இவர்களுக்கு அன்வி என்ற 5 வயது மகள் உள்ளார். பிரிவின்போது, இருவரும் ஒருவரையொருவர் குறை சொல்லவோ அல்லது சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக்கொள்வது என எதுவுமே இல்லாமல் அமைதியாக இருந்தனர். தற்போது, சைந்தவி தனது விவாகரத்து முடிவு பற்றியும், மகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில் நான் பிரிந்தாலும், ஒருவரையொருவர் மதிப்பதையும், திருமண உறவு முறிந்தாலும் எங்களின் நட்பு தொடர்ந்து நீடித்துக்கொண்டு இருக்கிறது. இருவரும் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
மகள் அன்வியின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதில் இருவருமே உறுதியாக இருக்கிறோம். திருமண உறவில் உள்ளவர்களுக்கு மட்டுமே எது நல்லது, எது கெட்டது என்று தெரியும். வெளியில் இருந்து வரும் ஆலோசனைகள், அட்வைஸ் எப்போதுமே பலன் தராது. நானும் ஜிவியும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தோம். அதன் பிறகே திருமணம் செய்து கொண்டோம். விவகாரத்திற்கு பிறகும் எங்கள் நட்பு ஒருபோதும் மறைந்துவிடாது.

gv prakash saindhavi interview
Photo Credit:

பாடகி சைந்தவி: விவாகரத்து முடிவெடுத்த பின்னரும், என் முன்னாள் துணையைப் பற்றி மோசமாக பேசத் தோன்றவில்லை, எங்களுக்குள் பரஸ்பர மரியாதை உள்ளது. நானும் ஜிவியும் இப்போதும் நண்பர்கள். இணைந்து பணியாற்றியும் வருகிறோம். வாழ்க்கை மிகவும் குறுகியது, எந்த நேரத்தில் யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இப்படி இருக்கும் இந்த வாழ்க்கையில் எதிர்மறை உணர்வுகளைச் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. எது நல்லது என்று மனதிற்கு தோன்றுகிறதோ, அதைப் பின்பற்றி வாழ்கிறோம். இருவரும் சேர்ந்து தான் மகளை வளர்க்கிறோம். அவள் என்னுடனும், ஜிவியுடனும் மாறி மாறி இருப்பாள். எங்களுடைய பிரிவுக்குப் பிறகு, மகளின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. அவளுக்கு, அப்பா, அம்மா சேர்ந்து வாழவில்லை, தனித்தனியாகத்தான் வாழ்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். இருப்பினும், அவளுடைய வாழ்க்கை எளிதாக இருக்கும்படி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்,

அன்பு குறையல: வெளியில் இருந்து வரும் பலர் இப்படி செய்து இருக்கலாம், அப்படி செய்து இருக்கலாம் என பல ஆலோசனைகள் கூறுவார்கள். ஆனால், இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே உண்மை நிலை தெரியும். மகளுக்குத்தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம், அவளுக்காக எங்கள் அன்பில் எந்தக் குறையும் இல்லை, அவளுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் என சைந்தவி அந்த பேட்டியில் மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X