Roja Roja Song: டிரெண்டிங்கில் 'ரோஜா ரோஜா'.. பாடகர் சத்யனின் மனம் திறந்த பேட்டி!

பின்னணி பாடகர் சத்யன் தனது ரோஜா ரோஜா பாடல் வைரலானது குறித்து பேசுகிறார். இசை உலகில் அவர் சந்தித்த சவால்கள், கமல்ஹாசன், யுவன் ஷங்கர் ராஜாவுடனான அனுபவங்கள், ஏ.ஆர்.ரஹ்மான் மீதான அவரது கனவு ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறார். அங்கீகாரம் கிடைக்காத போதும், இசை மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து நெகிழ்கிறார்.

சென்னை: பின்னணி பாடகர் சத்யன் பாடிய "ரோஜா ரோஜா" சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் இந்த சத்யன் பாடிய பாடல்த்தான் கேட்க முடிகிறது. பல வருடங்களுக்கு முன்பு தீவுத்திடலில் நடந்த ஒரு கச்சேரியில் இந்த பாடலை சத்யன் உள்ளார். அந்த நிகழ்ச்சி முடிஞ்சதும் செய்தித் தாள்களில், இந்த பாட்டைப் பத்தி மட்டும் தான் பேசினாங்க என்று சத்யன் பெருமையோடு பிலிமிபீட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கச்சேரிகளில் பாடி தனது இசை வாழ்க்கையை தொடங்கிய சத்யன், பின் வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்காக 'வசூல் ராஜா எம்பிபிஸ்' பாடலை பாடியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பல பாடல்கள் பாடியுள்ள இவர், இளையராஜாவுடனும் பல கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோ வாசல் பல நாட்கள் நின்னுருக்கேன். எதுக்கு இங்க உட்கார்ந்துருக்கன்னு நிறைய பேர் கேட்டுருக்காங்க என்கிறார் சத்யன். எப்போதே நான் பாடிய ரோஜா ரோஜா பாடல் இப்போது வைரலானதை தொடர்ந்து இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளனர். சந்தோஷ் நாராயணன் அவர் ட்விட்டரில் என்னோட முதல் பாட்டை அவர் தான் பாடினார் என போட்டு இருகிறார். ஏ.ஆர்.ரகுமான் தனது ஆல்டைம் பேவரைட் இசையமைப்பாளர் என்றும், அவரை நேரில் சந்திப்பது ஒரு கனவு என்றும் சத்யன் தெரிவித்துள்ளார்.

Roja Roja Song sathyan tamil music

பின்னணி பாடகர் சத்யன்: எனக்கு இசையின் மீது சிறுவயதில் இருந்தே ஆர்வம் அதிகம், என் அம்மா கோயிலில் தன்னை மறந்து பாடுவதுதான். சின்ன வயசுல கச்சேரி நடந்தா ரோட்டுல உக்காந்து பார்ப்பேன். அந்த ஸ்டேஜ் நமக்கு கிடைச்சா எப்படி இருக்கும்னு நினைப்பேன். ஆனா, ஸ்டேஜ் கிடைக்காம ஸ்பீக்கர் பாக்ஸ் தூக்கிகிட்டு இருந்தேன். பிறகு ஒரு கச்சேரில பாடினதுக்குப் பிறகுதான் வாழ்க்கை மாறியது. பரத்வாஜ் சார் மியூசிக்கில் கலக்கப்போவது யாரு எனக்கு ரொம்ப புடிச்ச பாடல். இப்போ அந்த பாடல் பல்லவியை கமல் சார் கேட்டதுமே, இந்த வாய்ஸ் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாராம்.

திறமை தான் முக்கியம்: இசைத்துறையில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காதது குறித்து பேசிய சத்யன், டேலண்ட் இருந்தா கண்டிப்பா ஜெயிச்சிடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது. சாதி, மதம், அரசியல் என எதுவும் டேலண்டை தடுக்க முடியாது. ஆனால், தற்போது, திரைப்பட வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கு, டெக்னாலஜி வளர்ந்துருச்சு. கம்ப்யூட்டரே பாதி பாட்டு பாடுது இதனால், இந்த காலகட்டத்தில் ஜெயிப்பது என்பது ஒரு சவாலாகத்தான் உள்ளது. பொருளாதார ரீதியாக குடும்பத்தினரும் நண்பர்களும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். என் மனைவி எனக்காக எப்போதும் துணையாக இருக்கிறார். என் மகளுக்கும் என்னைப்போல இசையின் மீது ஆர்வம், எப்பவுமே கார்ல ஏறி உடாந்த உடனே, ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டுதான் போடனும்னு சொல்லுவாங்க. சமீபத்தில் டி.எம்.கேவுக்காக ஒரு பாடல் கம்போஸ் பண்ணிருக்கேன். ஸ்ரீலங்காவில் எனது பாடல் ஒன்று மிகவும் பிரபலமாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக டி.எம்.சௌந்தரராஜன் ஐயா தனது இசையில் பாடியது மிகப்பெரிய பிளஸ்ஸிங். திரைப்படங்களில் இசையமைப்பதை விட சிங்கிங் தான் தனது முழுநேர ஹாப்பினஸ் என்று சத்யன் ஃபிலிமிபீட் சேனல் பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Read more about: sathyan tamil music
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X