Don't Miss!
- Sports
தோனியிடம் இனி கற்க ஒன்றுமே இல்லை.. ஹோட்டல் விட்டு ஹோட்டல் அழைகிறோம்.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- News
"எப்படி இத சாப்பிடறாங்க.." சைவம் சாப்பிடறவங்கள பார்த்தாலே எனக்கு பாவமா இருக்கும்.. ரஜினிகாந்த் கலகல
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கூகுள் குட்டப்பா ரோபோவை இவர் வீட்டுக்கு அனுப்புங்கள்... தர்ஷன் யாரை சொல்கிறார் ?
சென்னை: இயக்குனர் ரவிக்குமார் தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் & லாஸ்லியா நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள கூகுள் குட்டப்பா திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மலையாளத்தில் வெளியாகிய இப்படம், தற்போது தமிழிலும் வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் எனது நடிப்பு நன்றாக இருந்தாக கூறினார்கள் என்றும், டான்ஸ் மாஸ்டர் சாண்டி என்னை தனிப்பட்ட முறையில் பாராட்டியதாகவும் இப்படத்தில் நடித்த தர்ஷன் கூறினார்.
இது குறித்து பிக்பாஸ் புகழ் தர்ஷன், நமது பிலிம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
விக்னேஷ் சிவனோட எழுத்துக்கு நான் அடிமை.. விஜய் சேதுபதியே மயங்கிட்டாராம்!

ரோபோ தான் முதல் ஹீரோ
கேள்வி: கூகுள் குட்டப்பா படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
பதில்: கூகுள் குட்டப்பா படமானது குழந்தைகளை கவருவதற்காகவே எடுக்கப்பட்ட படம். குழந்தைகளுக்கு பிடித்தால் பெற்றோர்களும் வருவார்கள். படத்தில் ரோபோ தான் முதல் ஹீரோ. எனது முதல்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய சந்தோஷம். இந்த படத்தில் ஆதி என்ற கேரக்டரில் இன்ஜினியராக நடித்துள்ளேன். இயக்குனரும், நடிகருமாகிய ரவிக்குமார் அவர்களின் நடிப்புக்கு இணையாக நடிப்பது தான் கஷ்டமாக இருந்தது.இயக்குனர்கள் சபரி, சரவணன் ஆகியோர் எனக்கு நிறைய ரிகர்சல் கொடுத்தனர்.

குற்றாலத்தை மறக்க முடியாது
கேள்வி: படப்பிடிப்பில் உங்களுக்கு மறக்க முடியாத பகுதி எது?
பதில்: குற்றாலத்தில் 25 நாட்கள் நடந்த படப்பிடிப்பை என்னால் மறக்க முடியாது. அங்குள்ள மலைகள், தட்பவெப்பநிலை போன்றவை அழகாக இருந்தது. காலை 4.30 மணிக்கு தொடங்கும் ஷூட்டிங், மாலை தான் நிறைவடையும். நடிகர் யோகிபாபு, ரவிக்குமார் போன்ற அனைவரும் இந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டனர். மற்ற ஷூட்டிங்கின்போது நானும், லாஸ்லியாவும் மட்டும் தான் இருப்போம் என்றார்.

குட்டப்பா பகுதி 2 விலும் நான்
கேள்வி: கூகுள் குட்டப்பா பகுதி 2 வெளிவருமா?
பதில்: இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது இயக்குனர் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும்போது, ரோபோ துடிப்பது போன்ற ஒரு சீன் வைப்போம். அப்பொழுது தான் பகுதி 2 எடுக்க முடியும் என்றார். நான் அவரிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், பகுதி 2 விலும் என்னையே கதாநாயகனாக நடிக்க வைக்கவேண்டும் என்பது தான்.

உண்மையான ரோபோ
கேள்வி: கூகுள் குட்டப்பாவை தமிழ் சினிமாத்துறையில் யார் வீட்டுக்கு அனுப்ப ஆசைப்படுவீர்கள்?
பதில்: இந்த படத்தில் நடித்தது உண்மையான ரோபோ. அதன் விலை சராசரியாக ரூ.50 லட்சம். Program Feeding சரியாக இருந்தால் போதும், மற்றபடி அனைத்தும் சிறப்பாக செய்யும். இதை உருவாக்குவதற்காக 3 மாதங்கள் சிரமப்பட்டார்கள். ரோபோ நடிக்கும்போது பேசுவது மட்டும் எங்களுக்கு கேட்காது. சபரீஷ் மட்டும் அந்த சமயங்களில் உதவி செய்வார். இந்த ரோபோவை நடிகர் ரஜினிகாந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அவருக்கு ரொம்ப உதவியாக இருக்கும். அடுத்தப்படியாக இயக்குனர் ரவிக்குமார் அவர்களின் ஆபீசில் வேலை பார்க்க அனுப்ப வேண்டும். ரோபோ என் வீட்டுக்கு வந்தால், எனக்கு நன்றாக சமைத்துக் கொடுக்கும் என்று சிரித்த படி கூறினார் .
காதல் குறைவு
கேள்வி: படத்தில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையே. ஏன்?
பதில்: படத்தின் மையக்கருவானது, ரோபா மற்றும் தந்தை- மகன் ஆகியோர்களுக்கிடையே நடைபெறும் பாசப்போராட்டம் தான். இதில் எனக்கும், லாஸ்லியாவுக்கு இருக்கும் காதல் என்பது குறைவாக இருக்கும். ஏனென்றால் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மற்றவை எடுபடாது என்பதால் தான்.
படப்பிடிப்பின்போது எங்களுக்கு எமோஷன் தெரியவில்லை. ஏனென்றால் கொஞ்சம், கொஞ்சமாக படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் டப்பிங் பேசும்போது எமோஷன் தெரிந்தது . பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் என்னை பாராட்டினார்கள். சாண்டி முதல் படம் நல்ல செய்திருக்கிறாய் என்று கூறினார்.
இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/Or499oKJBc4 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் பிக்பாஸ் புகழ் தர்ஷன் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.