Just In
- 6 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 6 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 8 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 9 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜய் அண்ணாவ ரொம்ப நாளா தெரியும்.. ஆனால், அவர் கூட வொர்க் பண்றது அவ்வளவு ஈஸி இல்லை.. சாந்தனு பளிச்!
சென்னை: விஜய் அண்ணா கூட வொர்க் பண்றது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை என நடிகர் சாந்தனு பளிச்செனக் கூறியுள்ளார்.
வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில் தந்தை பாக்கியராஜ் உடன் அவரது ரியல் மகன் சாந்தனு ரீல் மகனாக சினிமாவில் அறிமுகமானார்.
சக்கரகட்டி படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையுடன் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சாந்தனு தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார்.
நடிகர் ராணாவின் இதயத்தை கொள்ளை கொண்ட அந்த காதலி இவர்தான்.. யார் இந்த மிஹீகா.. பின்னணி என்ன?!

வாழ்நாள் லட்சியம்
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சாந்தனு, கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும், மாஸ்டர் தான் தனது முதல் படம் எனக் கூறியிருந்தார். நடிகர் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தனக்கு வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்றே கருதுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ரொம்ப கஷ்டம்
சிறு வயது முதலே விஜய் அண்ணாவை தனக்கு ரொம்ப நல்லா தெரியும். மாஸ்டர் படத்தில் வாய்ப்பு கிடைத்தவுடன் ஈஸியா நடிச்சிடலாம் என்று தான் முதலில் நினைத்தேன். பின்னர், தான் அவர் அருகில் நின்று நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சாந்தனு கூறியிருக்கிறார்.

மெனக்கெடல்
ஒவ்வொரு சீனுக்கு முன்பாகவும் தன்னை எப்படி அந்த கதாபாத்திரமாக விஜய் அண்ணா கொண்டு வருகிறார் என்பதை அருகில் இருந்து பார்க்கும் போது, நடிப்பது எல்லாம் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. இவ்வளவு பெரிய இடத்துக்கு ஒரு நடிகர் உயருகிறார் என்றால் அதற்கு அவ்வளவு மெனக்கெடல் அவர் போட்டு வருகிறார் என்பதை புரிந்துக் கொண்டேன் என்றார்.

கையில தான் ஸ்க்ரிப்ட் இருக்காது
அதே போல, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பற்றி பேசும் போது, லோகேஷுக்கு கையில தான் ஸ்க்ரிப்ட் இருக்காது. ஆனால், யாருக்கு என்ன டயலாக் கொடுக்க வேண்டும் என்றும், எப்படி நடிக்க வைக்க வேண்டும் என்று அவரது மூளை வேற லெவலில் வேலை செய்து கொண்டிருக்கும். அதையெல்லாம் பார்த்து உண்மையாகவே வியந்தேன்.

சிறப்பான சம்பவம்
மாஸ்டர் படத்தின் ரிலீஸ் இந்த லாக்டவுன் காரணமாக கொஞ்ச காலம் தள்ளிப் போயிருக்கிறது. அவ்வளவு தான். ஆனால், படம் எப்போ வந்தாலும், சிறப்பான சம்பவம் இருக்கும் என்றும், இத்தனை நட்சத்திரங்கள் அந்த படத்திற்கு ஏன் என்றும், ஒருவரை படத்தில் இருந்து எடுத்து விட்டாலும் அந்த 'வாவ் ஃபேக்டர்' குறைவதை ரசிகர்கள் தியேட்டரில் உணர்வார்கள் என சாந்தனு கூறியுள்ளார்.