»   »  சானியா ஆன ஷர்மிளா

சானியா ஆன ஷர்மிளா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ், மலையாளப் படங்களில் ஒரு காலத்தில் திறமை காட்டி வந்த ஷர்மிளா,இப்போது சானியா என்று பெயரை மாற்றிக் கொண்டு டைரக்ஷனில் குதித்துள்ளார்.

கிழக்கே வரும் பாட்டு என்ற படம்தான் ஷர்மிளாவுக்கு தல் படம். அதன்பிறகுஒயிலாட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ், மலையாளத்தில் 50க்கும்மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளாராம் (ஏம்மா, சொல்லவே இல்லை!).

நெட்டையழகியான ஷர்மிளாவுக்கு பெருமை சேர்த்தது அவரது குண்டு கண்கள்தான்.நல்ல அழகும், திறமையும் நிறைந்த அவருக்கு தமிழில் பெரிய அளவில் படங்கள்அமையவில்லை. கோலிவுட்டை திடிரென தாக்கிய மும்பை புயலில் சிக்கி நல்ல பலநடிகைகளைப் போல ஷர்மிளாவும் அடிபட்டுப் போனார்.

கொஞ்ச காலத்திற்கு முன் உடன் நடித்த வில்லன் நடிகர் பாபு ஆண்டனியைகாதலித்தார். ஆனால், ஆண்டனி கை கழுவி விடவே தற்கொலைக்கு முயன்றார்ஷர்மிளா.

அப்போது காப்பற்றப்பட்டுவிட்ட ஷர்மிளா இடையில் காணாமலே போனார். இந்நிலையில் இப்போது மீண்டும் திரையுலகுக்குத் திரும்பியுள்ளார். ஆனால் இம்முறைநடிகையாக மட்டுமல்ல, இயக்குனராகவும் புது அவதாரம் எடுக்கிறார்.

அத்தோடு தனது பெயரையும் ராசி கருதி சானியா என மாற்றிக் கொண்டுள்ளார்.சானியாவின் இயக்கத்தில் வெளியாகப் போகும் படத்தின் பெயர் திசை. தமிழ் மற்றும்தெலுங்கில் தயாராகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் சானியாதான்.

என்ன திடீர்னு இயக்கம் என்று சானியாவிடம் கேட்டபோது, இப்போதும் நான்பிசியாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். கண்ணம்மா பேட்டை, டேட்டிங், மனசேமவுனமா, வதம், விண்ணைத் தாண்டி வருவாயா என நிறையப் படங்களில் நடித்துக்கொண்டுதான் உள்ளேன்.

ஆனால் இயக்கமும் எனது மனதில் நீண்ட காலமாகவே ஒளிந்திருந்தது. இப்போதுஅதை செயல்படுத்தியுள்ளேன். இடையில் சில விளம்பரப் படங்கைள இயக்கினேன்.அந்த அனுபவம் கொடுத்த தைரியத்தில் முழுப் படத்தையும் இயக்க முடிவுசெய்தேன்.

இந்தப் படத்தில மலையாள நடிகர் விஷ்ணு, பெங்களூர் நடிகர் தேஜா, ஹேமந்த் குமார்ஆகியோர் நடிக்கிறார்கள். நான்தான் நாயகி. தை மாதம் படப்பிடிப்பைதொடங்குகிறோம் என்றார் பூரிப்பாக.

இந்தப் படத்திற்கு கேமராமேன் கார்த்திக். இவர் மறைந்த பழம்பெரும் காமெடி நடிகர்ஏ.கருணாநிதியின் மகனாம்.

நடிப்பில் சாதிக்க முடியாததை இயக்கத்தில் சமாளிப்பாரா சானியா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil