மாதம்பட்டி ரங்கராஜை ஜாய் எப்படி கல்யாணம் பண்ணா தெரியுமா?..விஜய்யிடமே வேலை காட்டினா.. சுசித்ரா பகீர்!

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ். இவர், தன்னை 2வதாக திருமணம் செய்து விட்டு ஏமாற்றிவிட்டார் என்று ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். மேலும், அவருடன் எடுத்துக்கொண்ட எடுத்த பழைய புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதுகுறித்து குமுதம் யூடியூப் சேனலுக்கு பாடகி சுசித்ரா பேட்டி அளித்துள்ளார்.

அதில், மாதம்பட்டி ரங்கராஜூக்கும் ஜாய் கிரிஸில்டாவிற்கு நடந்தது தேவதாசி கல்யாணம் என்று தான் சொல்ல வேண்டும் இவை எல்லாம் இருவரும் சேர்த்து எடுத்த முடிவு தான். இதை திருமணமாகவே ஏற்றுக்கொள்ள முடியாது, வேண்டுமானால் ஜாய், பொண்டாட்டி என்கிற அங்கீகாரம் இல்லாமல் வாழலாம். ஏன்னென்றால், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி அவரை விவாகரத்து செய்யமாட்டார். குழந்தை பிறந்த பிறகு ஜாய் குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து, அது ரங்கராஜின் குழந்தை என்பதை நிரூபித்தால் மட்டும் தான் அது, ரங்கராஜின் குழந்தையாக முடியும். அதன்பிறகு தான் அந்த குழந்தையை வளர்ப்பதற்கோ, வாழ்க்கைக்கோ ரங்கராஜ் பணம் தரவாய்ப்பு இருக்கு.

Mathampatti Rangaraj joy crizildaa Suchithra
Photo Credit:

சுசித்ரா பேட்டி: அதுமட்டுமில்லாமல், குழந்தை வேண்டாம், வேண்டுமானால் மனைவியாக இருந்து கொள் என்று திட்டதோடு தான் இருவரும் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், ஜாய் தான் பெரிய திட்டம் போட்டு பிளான் செய்து கர்ப்பமாக இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு womanizer என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அப்படி இருக்கும் போது அவருடன் தான் வாழ்வேன் என்று ஜாய் சொல்வதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது. ஜாய், ரங்கராஜூக்காக முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவதாக ரங்கராஜூடன் வாழ்ந்து இருக்கிறார். இப்படி பட்ட பெண்ணுடன் எப்படி ரங்கராஜ் வாழ்வார்.

விஜய்யிடம் சில்மிஷம்: ஜாய் கிரிஸில்டா அளித்த பேட்டியில் ,இந்த வீட்டில் நான் அவருடன் இப்படி வாழ்ந்தேன், அவருக்காக என் வேலையை விட்டேன் என்று சொல்வது எல்லாமே திட்டமிட்டு செய்த வேலை தான். ஜாய் கிரிஸில்டா யார் என்று தெரியாமல் மாதம்பட்டி ரங்கராஜ் மாட்டிக்கொண்டார். ஜாய், ஆடை வடிவமைப்பாளராக விஜய்க்கு இருந்த போது அவரிடம் ஏதோ சிலுமிஷம் செய்ய அவர் அடித்து துரத்தினார். அதன் பிறகு, எந்த ஒரு டாப் நடிகருக்கும் இவர் ஆடை வடிவமைப்பாளராக செல்லவில்லை. வளர்ந்து வந்த நேரத்தில் தான் அனைவரும், ஜாய்யை அழைத்தார்கள். விஜய்யிடம் சில்மிஷம் செய்த விஷயம் தெரிந்த பிறகு யாரும் ஜாய்யை அழைக்கவில்லை. இந்த செய்தி சினிமாத்துறையில் இருக்கும் பலருக்கும் தெரியும் என சுசித்ரா அந்த பேட்டியில் பேசி உள்ளார். இந்த பேட்டியைப் பார்த்த பலர், அடுத்தவர்களின் வாழ்க்கை பற்றி எந்த ஆதாரம் இல்லாமல் இப்படி பேசுவது தவறு, முதல் உங்க வாழ்க்கை எப்படி இருக்கு என பாருங்கள் என பலர் சுசித்ராவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X