»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

சோனியா அகர்வால் எனக்கு நல்ல பிரெண்ட், அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று இயக்குநர்செல்வராகவன் சத்தியம் பண்ணாத குறையாகக் கூறுகிறார்.

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் பலரது திட்டையும், காதல் கொண்டேன் படத்தின் மூலம் பலரதுபாராட்டையும் பெற்றவர் இயக்குநர் செல்வராகவன். தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய இயக்குனர்களில் தற்போதுஇவருக்கு முதலிடம்.

சோனியா அகர்வாலைக் காதலிக்கிறார், சோனியாவுடன் சேர்ந்து ஹோட்டல், ஹோட்டலாய் போய் இரவுநேரங்களில் தண்ணி அடிக்கிறார் என்று கிசுகிசு மயமாகவே இருக்கிறார்.

இந் நிலையில் 7ஜி ரெயின்போ காலனி படம் தொடங்கப்பட்டது. காதல் கொண்டேன் படத்தை அடுத்து இதிலும்சோனியாதான் கதாநாயகி என்றதும் பலரது முகத்தில் அர்த்தத்துடன் சிரிப்பு வந்தது.

இதற்கிடையே செல்வராகவன்தந்தை கஸ்தூரிராஜா திறந்த மனதுடன் பேட்டியளிக்கிறேன் என்று சோனியாவுக்கு ஆதரவாக கொடி பிடித்தார்.

சோனியா மட்டுமல்ல, வேறு யாரை காதலிக்கிறேன் என்று செல்வராகவன் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளநானும், எனது மனைவியும் தயாராக இருக்கிறோம்.

சினிமாவை நம்பிதான் எங்க குடும்பம் இருக்கிறது.அப்படியிருக்கும்போது சினிமாவைச் சேர்ந்த ஒரு பெண் மருமகளாக வருவதில் என்ன தப்பு என்றார்.

இதையடுத்து சோனியா, செல்வராகவன் பற்றி வரும் கிசுகிசுக்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. உச்சகட்டமாகசோனியா கர்ப்பமாகிவிட்டார் என்றும், அதை செல்வராகவனின் டாக்டர் தங்கை தான் அபார்ஷன் செய்துகலைத்தார் என்றும் ஒரு கிசுகிசு கிளம்ப செல்வராகவன் நொந்தே போய்விட்டார்.

யூ ஸீ! எனக்கும் அம்மா, அப்பா, பாட்டி, தம்பி, தங்கச்சி எல்லாம் இருக்காங்க. டாக்டரா இருக்கிற தங்கச்சியை ஒருஇடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கோம். அவ சோனியாவுக்கு அபார்ஷன் பண்ணினானு எல்லாம்பேசினா, அவங்க வீட்டில் எங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க.

சர்வதேச அளவில் பேசப்படுகிற இயக்குனராக ஆக வேண்டும் என்பதே எனது ஆசை. எனக்கு கல்யாணம், காதல்இதிலெல்லாம் பெரிசா ஈடுபாடு கிடையாது. சோனியாவுடன் எனக்கு இருப்பது, ஜஸ்ட் எ பிரெண்ட்ஷிப்.

என்னை மட்டுமல்ல, எங்க குடும்பத்தையே இந்தக் கிசுகிசுக்கள் அவஸ்தைப்பட வைக்குது. தனுஷ் பாட்டுக்குஜாலியா கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தான்.

அவனைப் பிடிச்சு வந்து கேமராவுக்கு முன் நிறுத்தினோம். படம்ஹிட் ஆக தனுஷ் ஸ்டார் ஆகிவிட்டான்.

இப்போது அவனுக்கு நிம்மதியே இல்லை. அவன் சின்னப் பையன்.இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு ஹார்ட் அட்டாக் வர அவன்தான் காரணம் என்று கூறுவதை எல்லாம் அவனால்தாங்க முடியவில்லை.

காதல் கொண்டேன் படத்தைப் பார்த்துவிட்டு எங்களை வரிக்கு வரி பாராட்டியவர் பாலுமகேந்திரா. எவ்வளவுபெரிய டைரக்டர் அவர்.

அவருடைய படத்தில் தனுஷ் நடிப்பதே பெருமை எனும்போது அவன் ஏன் பிரச்சினைகொடுக்கிறான்.

கடந்த ஒரு வருடமாக கோலிவுட்டில் தினமும் அவஸ்தைப்படுகிற குடும்பம் எங்களுடையதாகத்தான் இருக்கும் என்று நிஜமாகவே பீல் பண்ணினார் செல்வராகவன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil