»   »  கவர்ச்சியா? நோ சான்ஸ்: ஸ்ரீதேவிகா

கவர்ச்சியா? நோ சான்ஸ்: ஸ்ரீதேவிகா

Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடிக்க மாட்டேன் என்கிறார் ராமகிருஷ்ணா பட நாயகி ஸ்ரீதேவிகா.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இவர், சினிமாவில் நடிக்க வந்ததால் பி.ஏ. படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். ஆனாலும் பி.ஏவைஒரு கை பார்க்காமல் விடப்போவதில்லை என்பதில் இவர் உறுதியாக இருப்பதால் தற்போது தபால் மூலம் படித்து வருகிறார்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது இவர் கேரளாவின் சிறந்த மாடலாக தேர்வு செய்யப்பட்டாராம். இந்தப்படம் சிலபத்திரிக்கைகளில் வெளிவர, அதுவே ராமகிருஷ்ணா படத்தில் வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது.

இனி அவர் கூறுவதைக் கேட்போம்...

கேரளாவின் சிறந்த மாடலாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய போட்டோவைப் பார்த்துவிட்டுசென்னையிலிருந்து பழனிகுமார் என்பவர் போன் செய்தார்.

சிவசக்தி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அகத்தியன் இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க விருப்பமா ? என்று கேட்டார்.

ஆங்கில இலக்கியம் படித்து கல்லூரி பேராசிரியையாக வேண்டும் என்று நினைத்திருந்தேன். சினிமாவில் நடிப்பேன் என்று நினைத்துக்கூடப்பார்த்தது கிடையாது.

அப்படிப்பட்ட எனக்கு சினிமா வாய்ப்பா ? எனக்கு ஒரே ஆச்சரியமாக போய் விட்டது. பிரபல தயாரிப்ாளர் தயாரிக்கும் படம், தேசியவிருது பெற்ற டைரக்டர் அகத்தியன் இயக்குகிறார் என்றால் சும்மாவா ? என்னுடைய அப்பாவிடம் கேட்டேன்.

அவரும் ஓ.கே. சொன்னார். நடிக்க வந்துவிட்டேன்.

பொதுவாக மாடர்ன் கெட்டப்பில் கலக்கும் நான், ராமகிருஷ்ணா படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்ததைப் பார்த்து என்னுடையதோழிகள் அனைவரும் என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டினார்கள்.

அந்தப் படத்தில் டைரக்டர் அகத்தியன் என்னை கிராமத்துப் பெண் பூஞ்சோலையாகவே மாற்றிவிட்டார். தற்போது ரமணாவுடன் அந்தநாள் ஞாபகம் என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

இது தவிர செல்வபாரதி இயக்கும் அன்பே வா என்ற படத்திலும் நடித்து வருகிறேன். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடிக்ககேட்டுள்ளதாக கூறும் இவர், கவர்ச்சியாக நடிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளார்.

நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன். கவர்ச்சிக்கு பல அர்த்தங்கள் உள்ளன. அதற்கு அளவுகோல் உண்டு. கவர்ச்சி என்ற பெயரில்நிச்சயமாக நான் ஆபாசமாக நடிக்க மாட்டேன்.

முதல் படத்தில் கிடைத்த நல்ல பெயரை தக்க வைப்பது தான் எனது குறிக்கோள் என்கிறார். பார்ப்போம், எத்தனை நாளைக்கு இந்தடயலாக்கை பேசுகிறார் என்று.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil