நீயா நானாவில் நடந்ததே வேறு.. கோபிநாத் தான் அப்படி பண்ண சொன்னார்.. சுபாஷினி வெங்கட்ராமன் ஓபன் டாக்!
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் தெரு நாய்கள் விவாதத்தில் பங்கேற்ற சுபாஷினி வெங்கட்ராமன், தான் பேச அனுமதிக்கப்படாதது குறித்தும், அதன் பின் எழுந்த விமர்சனங்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார். ஒரு தாயாக தான் எதிர்கொண்ட இக்கட்டான சூழலை விளக்க முயன்றபோது, அதை சொல்லவிடாமல் தடுத்ததாக அவர் வருத்தம் தெரிவித்தார். இந்த சர்ச்சை குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சென்னை: விஜய் டிவியின் 'நீயா நானா’ நிகழ்ச்சியில் தெரு நாய்கள் பற்றிய விவாதத்தில் சுபாஷினி வெங்கட்ராமன் கலந்துகொண்டது பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், நிகழ்ச்சியில் பேச முடியாமல் போனது குறித்தும், அதன்பின் எழுந்த விமர்சனங்கள் பற்றியும் அவர் மனம் திறந்துள்ளார்.
நிகழ்ச்சியில், "நாய் குறுக்கே ஓடி வந்தாலும், குழந்தை குறுக்கே ஓடி வந்தாலும் ஒன்றா?" என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல முற்பட்டபோது, பேசவிடாமல் கோபிநாத் கத்தி தடுத்துவிட்டதாக சுபாஷினி வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும், நிகழ்ச்சியின் ப்ரோமோவில் அந்த பகுதியை பயன்படுத்தியதும் ஏமாற்றம் அளித்ததாக கூறினார்.

சுபாஷினிக்கு இரண்டு முறை விபத்து ஏற்பட்டதுண்டு. அதில் ஒருமுறை, அவரது மகள் பின்னால் அமர்ந்திருக்க, குழந்தை ஒன்று குறுக்கே வந்ததால் வண்டி ஸ்கிட் ஆகி கீழே விழுந்திருக்கிறார். அந்த சமயத்தில், எந்த குழந்தையை முதலில் பார்ப்பது என்ற தர்மசங்கடமான நிலை அவருக்கு ஏற்பட்டதாக கூறினார்.
அந்த இக்கட்டான சூழலில் ஒரு அம்மாவாக அவர் எப்படி உணர்ந்தார் என்பதை விவரிக்கவே அவர் முயன்றிருக்கிறார். ஆனால், அதை சொல்லவிடாமல் தடுத்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட நபர் என்று எதிரில் இருந்தவர்களே அவரது நிலையைப் புரிந்துகொண்டதாகவும் சுபாஷினி குறிப்பிட்டார்.
மேலும் கோபிநாத் தான் நாய் போல கத்த சொன்னதாகவும், ஆனால் எதிரில் இருந்தவர்கள் சிரித்தது ஹர்ட் செய்ததாகவும் அவர் கூறினார். இருப்பினும், தான் பலரை சிரிக்க வைத்தேன் என்பது சந்தோஷம் அளித்ததாகவும் சுபாஷினி கூறினார். சிலர் தன்னை பற்றி தவறாக பேசினாலும், உள்ளே நடந்தது என்னவென்று தெரியாமல் பேசுவது வருத்தம் அளிப்பதாக கூறினார்.
தன்னை பைத்தியக்காரி என்றும் மெண்டலி ரிடார்டட் என்றும் சமூகத்தை குறிப்பிட்டு இழிவாக சித்தரித்துப் பேசுவதும் ரொம்பவே சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஒரு ஷோவுக்கு சென்று எங்களுடைய கருத்துக்களை பேச சொல்லிவிட்டு, எங்களையே பலியாடாக மாற்றிவிட்டார்கள்.
நாயும் குழந்தையும் ஒண்ணா என்ற கேள்வியை கேட்டுவிட்டு என்னை பேச விடாமல் எனக்கு நடந்த விபத்து குறித்தும் கண்டுக் கொள்ளாமல் கோபிநாத் அதட்டும் தொனியில் பேசியதும் எனக்கு என்ன பேச வேண்டுமென்றே தெரியவில்லை என்றும் ஏகப்பட்ட ட்ரோல்கள் தன்னை மனதளவில் பாதித்து வருவதாகவும் சுபாஷினி வெங்கட்ராமன் புலம்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











