»   »  சிலிர்க்க வைக்கும் சுஹா!

சிலிர்க்க வைக்கும் சுஹா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தமிழ் ரசிகர்களை ஆராதிக்க வந்து இறங்கியுள்ளார்சுஹாசினி. ஆனால் பெயரை சுஹா என்று சுருக்கிக் கொண்டுவிட்டார்.

காமெடி செந்திலின் மகன் நவீன் ஹீரோவாக அறிமுகமாகும் உன்னை எனக்குப்பிடிச்சிருக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர்தான் சுஹா.

18 வயசு இளம் புயலான சுஹா, தெலுங்கில் சாந்திகாடு என்ற படம் மூலம்அறிமுகமானவர். பின்னர் தமிழில் யுகா படத்தில் பேயாக நடித்தார்.

இதன் பின்னர் தமிழில் சினிமா வாய்ப்புக்கள் வராததால் தெலுங்குக்கே போனவர்இப்போது திரும்பி வந்திருக்கிறார்.

நடிகைகளுக்கு சினிமாவில் பெரிய ஸ்கோப் கிடையாது. அழகுப் பதுமைகளாகத்தான்அவர்கள் இருக்கிறார்கள் என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் சுஹா.

கதை என்னன்னு கேட்கிற தைரியம் இங்கே நிறைய ஹீரோயின்களுக்குக் கிடையாது.மிகப் பெரிய நடிகையாக, முன்னணி நடிகையாக இருந்தால் மட்டுமே அது கொஞ்சம்போல சாத்தியம் என ஏக்கத்திலிருந்து எதார்த்தத்திற்குத் தாவுகிறார்.

சாந்திகாடு பெரிய ஓட்டம் ஓடியதால் நிறைய வாய்ப்புகள் சுஹாவைத் தேடிவந்தனவாம். இருந்தாலும் அத்தனையையும் வாரிப் போட்டுக் கொள்ளஅவசரப்படவில்லையாம் சுஹா.

சுஹாவுக்கு பர்த் பிளேஸ் நெல்லூர். இருந்தாலும் மிக அழகாக தமிழ் பேசுகிறார்.

சிறந்த டான்சரான சுஹா நடனத்தில் காதல் கொண்டுதான் ஹைதராபாத்துக்கேவந்தாராம். ஆனால் சினிமா அவரை அரவணைத்துக் கொண்டுவிட்டது.

சுஹா-நவீன் அறிமுகமாகும் உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு படம் யாகம் என்றதெலுங்குப்படத்தின் ரீமேக்தானாம்.

Read more about: another suhasini in tamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil