பிணத்தின் மீது அரசியலா? சினிமானு நினைச்சீங்களா? அசிங்கமா இல்லை விஜய்யை விளாசிய எஸ்.வி.சேகர்!
சென்னை: கரூர் வேலுசாமிபுரத்தில் சனிக்கிழமை நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து பேசிய உள்ள எஸ்.வி.சேகர், பதவி வெறி வந்தால் யார் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு அரசியலில் நீங்கள் தான் ஒரு மோசமான முன் உதாரணம் என கடுமையாக சாடினார்.
மேலும், இந்தியா வரலாற்றிலேயே செப்டம்பர் 27ந் தேதி ஒரு கொடூரமான கருப்பு தினமாக மாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் நடிகர் விஜய். அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம், கூட்டம் கூடுகிறது என்பதற்காக ஆசைப்படலாம். ஆனால், அடுத்தவர்களின் உயிரை வைத்து, அடுத்தவர்களின் உயிரை பலி கொடுத்து அரசியலுக்கு வருவது என்பது பிணத்தின் மீது ஏறி, வெற்றியை கொண்டாடும் ஒரு மனோபாவம். கூட்டம் மட்டுமே ஓட்டாய் மாறாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லை. 12 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு இரவு 7 மணிக்கு வந்தால் எப்படி.

பரிசு இதுதானா: கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் 120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி, உங்களை ஒரு உயர்ந்த இடத்திற்கு அமர வைத்து அழகு பார்த்த குடும்பத்திற்கு நீங்கள் கொடுக்கும் பரிசு இதுதானா? இந்தக் கூட்டம் நெரிசலில் சிக்கி எத்தனை குழந்தைகள் உயிரிழந்து இருக்கிறார்கள். உங்களால் ஒரு உயிரை திருப்பிக் கொடுக்க முடியுமா? இப்படிப்பட்ட ஒரு அரசியலை செய்வதற்கு உங்களுக்கு அசிங்கமாக இல்லையா? கூட்டத்தை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வர முடியும் என நினைக்கிறீர்களா? விஜய் நான் உங்களிடம் இந்த கேள்விகளை நேரடியாக தான் கேட்கிறேன். மக்களை சந்திக்க வேண்டும் என்றால் தெருவில் இறங்கி நடந்து வந்து மக்களை சந்தித்து பேசுங்கள், அதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா. வேனில் ஏறிக்கொண்டு ஏன் பிரச்சாரம் செய்ய வர வேண்டும். இந்த வேலையை சினிமாவில் வைத்துக் கொள்ளுங்கள் விஜய், அரசியலில் செய்யாதீர்கள். 41 பேரின் உயிரை இழந்த குடும்பங்களின் சாபம் உங்களை வாழ்நாள் முழுக்க தூங்க விடாது.
உங்களின் சேர்ச்சை சரியில்லை: பிரச்சனை நடந்து விட்டது, உடனே நீங்கள் மருத்துவமனைக்கு தானே சென்று இருக்க வேண்டும். மருத்துவமனையில் போலீசார் உங்களை தடுத்து, எப்போது நீங்கள் வந்தால் பிரச்சனையாகிவிடும் உள்ளே அனுமதிக்காமல் இருந்தால், நீங்கள் அங்கிருந்து கிளம்பு இருக்கலாம். ஆனால், நீங்கள் உங்களை நம்பி வந்த தொண்டர்களையும், ரசிகர்களையும் தவிக்க விட்டுவிட்டு ஓடலாமா? சினிமாவில் வசனம் பேசுவதை விட வாழ்க்கையில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். நான் உங்கள் அப்பாவின் நண்பன் தான். உங்கள் அப்பா உங்களை இப்படி வளர்த்து இருக்க மாட்டார்... ஆனால், உங்களின் சேர்க்கை சரியில்லை என்று நினைக்கிறேன் .
நீங்கள் ஒரு மோசமான முன் உதாரணம்: பதவி வெறி வந்தால் யார் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு அரசியலில் நீங்கள் தான் ஒரு மோசமான முன் உதாரணம். நீங்கள் செய்த தவறுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் விரைகிறார். சம்பத்தை கேள்விப்பட்டவுடன் அமைச்சர்களை மருத்துவமனைக்கு அனுப்புகிறார். ஆனால், நீங்கள் மக்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல், சனிக்கிழமை சனிக்கிழமை எஸ்கேஷன் போவது போல, மக்களை சந்தித்து பேசினால் அது ஓட்டாக விழுந்து விடுவோமா? ஏதோ ஒரு காலத்தில் நீங்கள் முதலமைச்சரானால் அதைவிட வெட்கப்படக் கூடிய விஷயம் எதுவுமே இல்லை. உங்களை நம்பி, உங்களை நேசித்து வந்த கூட்டத்தை நீங்கள் மிஸ் யூஸ் செய்து விட்டீர்கள் என எஸ்.வீ சேகர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











