»   »  டன்லப் பாப்பா தமன்னா

டன்லப் பாப்பா தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பார்த்த மாத்திரத்திலேயே இளசுகளின் மனதை டன்லப் டயர் கணக்காக எம்பி எகிற வைக்கிறார் தமன்னா.

சத்யராஜ், விஷால் போன்ற பார்ட்டிகளுக்கு இணையான நெட்ட நெடு உயரம், பளிங்குக் கண்கள், சுண்டிஇழுக்கும் உதடுகள் என படு டாப்பாக இருக்கிறார்.

கேடி மூலம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வந்துள்ள தமன்னா, தமிழ் ரசிகர்களை மடக்காமல் விட மாட்டேன் எனபுன்னகையுடன் கூறுகிறார். அவரது நமட்டுச் சிரிப்பே நச்சுன்னு இருக்குய்யா..

சொல்லுங்க தமன்னா, கேடியில் ரெண்டாவது லேடி (நாயகி) ஆனது எப்படி என்று வெத்தலையில்சுண்ணாம்பைத் தடவி மெல்லலை ஆரம்பித்தோம்.

ஆக்சுவலா நான் விளம்பரப் படங்களில் தான் முதலில் நடிக்க ஆரம்பித்தேன். ஃபேர் அண்ட் லவ்லிவிளம்பரத்தில் நான் நடித்ததைப் பார்த்து சாந்துஷா ரோஷன் ஜெகரா என்ற இந்திப் படத்தில் நடிக்ககூப்பிட்டார்கள். அதைப் பார்த்துவிட்டு தெலுங்கில் ஸ்ரீ படத்தில் கூப்பிட்டார்கள். அதை பார்த்து தமிழில்கூப்பிட்டார்கள் (ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக.. மாதிரி சொல்றீங்களே)

கேடி படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக நிறையப் பாராட்டுக்கள். எனக்கு தமிழில் இந்த அளவுக்குவரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எங்கேயோ மும்பையில் ஜாலியாக இருந்த எனக்குதமிழ் சினிமா ரசிகர்களின் வரவேற்பு திக்குமுக்காட வைத்துவிட்டது. (கொஞ்சம் விட்டா கோவில் கட்டறபார்ட்டிங்கோவ்!)

எங்க அப்பா சந்தோஷ் பாட்டியா, அம்மா ரஜினி பாட்டியா, செல்ல அண்ணன் ஆனந்த் பாட்டியா (தமன்னாபாட்டியாக ரொம்ப நாள் இருக்குது, டோண்ட் ஒர்ரி!) என சின்னக் குடும்பம் என்னோடது என்று குடும்பக்கதையுடன் கொஞ்சம் குந்த வைத்தார் தமன்னா.

மத்தவங்க மாதிரி நீங்களும் கிளாமரில் கில்லி தண்டா ஆடுவீங்க தானே?

தமிழ்நாட்டுப் பெண்கள் சேலையிலேயே படு கிளாமராக தெரிகிறார்கள். பேண்ட், சர்ட்டிலும் கிண்ணென்றுஇருக்கிறார்கள்.சினிமாவிலும் இதேபோல நடிக்க நான் முயற்சிப்பேன் என்கிறார்.

தமன்னா இன்னும் பள்ளிக் கூடத்தைக் கூட தாண்டவில்லையாம். மும்பை பந்த்ராவால் பண்ண்ெடாவது படித்துக்கொண்டிருக்கிறாராம். (கூடப் படிக்கிறவங்க கொடுத்து வச்சவங்க.)

தமன்னாவுக்கு நடிப்பு மட்டும் அல்ல, டான்ஸ், நீச்சல், ஓட்டுதல் (அதாவது டிரைவிங்) என எக்கச்சக்க ஐட்டங்கள்அத்துப்படியாம். எல்லாத்தையும் கத்து முடித்து விட்டுத்தான் மாடலிங்குக்கு வந்தாராம். வந்த வேகத்தில்நடிகையாகி விட்டார்.

இப்போது நடித்து வரும் வியாபாரி படத்தில் தமன்னாவுக்கு கிளாமரில் மிளிர நிறைய வாய்ப்பாம்.

தமன்னாவின் திறமையை ஹீரோ எஸ்.ஜே.சூர்யாவும் இயக்குனர் ஷக்தி சிதம்பரமும் நன்றாகவே யூஸ்செய்கிறார்களாம்.

அடுத்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் தமன்னா. இந்தப் படத்தை தயாரிப்பதுமெகா இயக்குனர் ஷங்கர்.

Read more about: sj suryatamannas viyabari

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil