உலக மகா கோழை.. பைத்தியக்கார கூட்டம்.. விஜய்யை கடுமையாக விமர்சித்த சத்யன் ராமசாமி!
சென்னை: ரஜினிகாந்தின் ரசிகராகவும் அரசியல் விமர்சகராகவும் உள்ள சத்யன் ராமசாமி தமிழ் பிலிமிபீட் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தவெக தலைவர் விஜய்யை உலக மகா கோழை என கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விஜய்யை சந்திக்க மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக 41 பேர் பரிதாபமாக பலியானது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியும் இரங்கல் தெரிவித்தும் விஜய் ட்வீட் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், ஒரு வாரம் ஆகப் போகிறது இன்னமும் விஜய் வீட்டுக்குள்ளேயே ஒளிந்திருக்கிறாரே அவர் ஒரு உலக மகா கோழை என சத்யன் ராமசாமி பேசியுள்ளார்.
பைத்தியக்கார கூட்டத்தை உருவாக்கியுள்ளார்: ரசிகர்கள் என்கிற பேரில் கட்டுப்பாடு கொண்ட கூட்டத்தை உருவாக்காமல் விஜய் பைத்தியக்கார கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். தியேட்டரில் டீசர் மற்றும் டிரைலர் வெளியிட்டால் கூட அனைத்து நாற்காலிகளையும் சேதப்படுத்திவிட்டு விஜய் பணம் கொடுப்பார் என காலரை தூக்கி சென்ற கும்பல் தான் தற்போது கரூரில் 41 பேர் பலியாக காரணமாக இருந்து தனது தலைவன் விஜய்யையும் அதில் கோர்த்துவிட்ட பைத்தியக்கார கூட்டம் என சத்யன் ராமசாமி கடுமையாக தாக்கி பேசியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏன் லேட்டா வரணும்: காலையில் 8.15க்கு நாமக்கல் கூட்டத்துக்கு வருகிறேன் என விஜய் சொல்லிவிட்டு சென்னையில் இருந்தே அப்போது தான் கிளம்புகிறார் என்றால் அது எவ்வளவு ஒரு அலட்சியமான செயல். விஜய் கரூரில் நண்பகல் வர வேண்டும். ஆனால், அவர் இரவு வருகிறார். இதனால், தான் கூட்டம் அதிகரித்து இபடியொரு பெருந்துயர் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு முழு காரணமும் விஜய் தான் என்றும் அவரது ரசிகர்கள் மட்டுமே என காட்டமாக பேசியுள்ளார் சத்யன் ராமசாமி.
குவியும் கண்டனங்கள்: விஜய் மற்றும் அவரது கட்சியினர் தொடர்ந்து மக்களை நேரில் சென்று சந்திக்காமல் ட்வீட் போடுவதும், வீடியோ போட்டு விளையாடுவதுமாகவே உள்ளனர் என்றும் பொறுப்பான தலைவராக விஜய் ஒரு சதவீதம் கூட நடந்து கொள்ளாதது தான் அனைத்துக்கும் காரணம் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











