»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எம்ஜிஆருக்காகவே வாலி எப்படி ஸ்பெஷல் பாடல்கள் எழுதினாரோ, அதேபோல் ரஜினிக்கு பல வெற்றிப் பாடல்கள் எழுதியவர்வைரமுத்து.

வந்தேண்டா பால்காரன், நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன், ஒருவன் ஒருவன் முதலாளி, அதாண்டா இதாண்டாஅருணாச்சாலம் நான்தாண்டா, என்பேரு படையப்பா உட்பட இவர் எழுதிய பல பாடல்கள் ரஜினி ரசிகர்களை மிகவும்கவர்ந்தவை.

இந்தப் படங்களில் எல்லாம் பெரும்பாலான பாடல்களை வைரமுத்துவே எழுதினார். ஆனால் ரஜினி இப்போது நடிக்கும்சந்திரமுகி படத்தில் வைரமுத்து ஒரு பாடல் கூட எழுதவில்லை.

இது குறித்து கல்கியில் வைரமுத்து கூறியிருப்பதாவது:

இந்த மண்ணில், மலைகளில், நதிகளில், மரம் செடி கொடிகளில், பறவைகளில், விலங்குகளில், கண்ணீரில், ரத்தத்தில், கண்படுஉறவுகளில், கண்காணா உறவுகளில், ஒவ்வொரு மைக்ரோ வினாடியிலும் கவிதை உட்கிடையாகவோ, வெளிப்படையாகவோஇருக்கிறது.

கண்ணுள்ளவன் அதைக் காண்கிறான். செவி உள்ளவன் அதைக் கேட்கிறான். மேற்கூறியவற்றில் நகல்களை அல்லது நிழல்களைமொழி என்ற கூட்டுக்குள் அடைத்து வைக்கும் முயற்சியைத்தான் கவிதை என்கிறோம்.

உலகக் கவிதைகள் என்று கூறப்படுபவை எல்லாம், இந்த பிரபஞ்சத்தின் முதல் எழுத்தை உச்சரிக்க எடுக்கப்பட்ட முயற்சிதான்.

தொடக்கத்தில் கவிதை அல்லாததெல்லாம் கவிதை என்று என்று நினைத்திருந்தேன். உணர்ச்சி மட்டுப்பட்டு, அறிவு சமவெளியைஅடைந்திருக்கும் இந்த நடுத்தர வயதில், கவிதை அல்லாததென்று எதுவும் இல்லை என்று முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

சங்க காலத்திற்குப் பின் தமிழ்க் கவிதை தனித்து இயங்கவில்லை. மதங்களின் படையெடுப்பு, அந்நியர்களின் தாக்குதல்,அயல்மொழிகளின் தாக்கம் ஆகியவற்றால் அந்தந்தக் காலத்துக்கேற்ப தமிழ் வளைந்தும் நிமிர்ந்தும் வாழ்ந்து வருகிறது.

தமிழ்க் கவிதைக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு கருத்தியல் தலைமை தாங்கியிருக்கிறது. அத்தகைய நிலை இப்போதுஇல்லை. இன்றைய சூழல் வெறுமையானது. எனவேதான் படைப்பாளிகள் குறைந்திருக்கிறார்கள். மேலும் தொழில்நுட்பக் கல்விஓங்கியிருப்பதால், வாசகர்கள் குறைந்திருக்கிறார்கள்.

நுகர்வுக் கலாச்சாரத்தினால் தரைக்குப் போக முடியாமலும், தண்ணீருக்கு மேலே வரமுடியாமலும் தவிக்கும் பாசியைப் போலஇருக்கிறது வாழ்க்கை.

வாழ்வு பற்றிய பார்வை ஒன்றாக இல்லாமல் ஐந்தாறு தளங்களில் இயங்குவதால், கவிதையும் அதே தளங்களில் இயங்கவேண்டியிருக்கிறது. இதனால் குழுக்களும் குழு மனப்பான்மையும் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன.

இன்று பாடலாசிரியர்கள் எல்லோருமே நல்ல வரிகள் என்று சொல்லும்படி சில வரிகள் எழுதியிருக்கிறார்கள். யாராவது ஒருவர்பெயரைச் சொன்னால் மற்றவர்கள் முகம் வாடிவிடும். குறுக்கீடுகள் இல்லாமலிருந்தால் அவர்கள் பிரகாசிக்க வாய்ப்பிருக்கிறது.அவர்களை விமர்சிக்கவோ, பாராட்டவோ இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படுகின்றன.

டயானா இறந்தவுடன் அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அப்போதுஅமெரிக்காவில் இருந்து கிஸ்ஸிங்கர் கூறினார், யாராக இருப்பினும் நினைவுச் சின்னம் எழுப்ப பத்தாண்டுகள் போகட்டும் என்று.

மாண்டவர்கள் மீண்டும் தேவைப்படுகிறார்களா என்பதை அறிய 10 ஆண்டுகள் தேவைப்படுகிறது. அதேபோல் இருக்கும்படைப்பாளிகளை மதிப்பிடவும் கால அவகாசம் தேவைப்படுகிறது.

இளையராஜாவோடு நான் வேலைபார்த்தது 5 வருடங்கள்தான். நாங்கள் பிரிந்து இப்போது 20 வருடங்கள் ஆகி விட்டது.இப்போதும் எங்கள் பிரிவு பற்றி ஊடகங்கள் கேட்பது இருவரும் உயிர்ப்போடு இருப்பதையே காட்டுகிறது.

எங்களுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. என் மீதான மதிப்பு குன்றிமணி அளவு குறைகிறது என்று நான்கருதியபோது அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

அதே நேரத்தில் என்ன செய்கிறேன் என்பது அறியாமல் நானும் அவரைக் காயப்படுத்தியிருக்கலாம். அதை இபபோதுயோசித்துப் பார்க்கிறேன்.

அவர் மீதான அன்பும் அக்கறையும் எனக்கு ஒருபோதும் குறைந்ததில்லை. இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு ஒரு சிக்கல்ஏற்பட்டது. அதற்கான தீர்வை ரஜினி மூலம் நான் சொல்லியனுப்பினேன்.

அவரது பையன் கல்யாணத்துக்கு சென்றுவந்தேன். இதெல்லாம் அவர் மீது நான் கொண்ட அன்பின் அடையாளம்.

இப்போது மனம் கனிந்திருக்கிறது. கோபம் குறைந்திருக்கிறது. இனிமேல் தொழில் ரீதியாக இல்லாவிட்டாலும், நட்புரீதியாகஇளையராஜாவுடன் அன்பு பாராட்ட வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.

ஏ.ஆர். ரஹ்மானோடு என்னுடைய உறவு புதுப்பிக்கப்பட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் அது பழையதாகவேஇல்லை. கள்ளம் கபடமில்லாத வெள்ளை உள்ளப் பிள்ளை அவர். அவரோடு பேசுவதே சுகம்.

எங்கள் கூட்டணியில் அஜீத், ஆஷின் நடிக்கும் காட்பாதர் படம் வெளிவர இருக்கிறது. நிச்சயமாக அந்தப் படத்தின் பாடல்கள்கலக்கும் என்று கூறினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil