கட்சியை கலைக்க போகிறாரா விஜய்? புலியின் வாலை பிடித்துவிட்டார்.. இனிமே அது நடக்காது.. அந்தணன்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை அக்டோபர் 27 ந் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்புக்கு பின் விஜய் தனது கட்சியை கலைக்கப்போவதாக இணையத்தில் செய்திகள் பரவி வரும் நிலையில் வலைப்பேச்சு அந்தணன் இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது தமிழக வெற்றி கழகத்தை விஜய் கலைத்து விட போவதாகவும், இரவு 8 மணிக்குள் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று தகவல் பரவுகிறது. அதேபோல கரூரில் 41 பேர் உயிரிழந்த குடும்பத்தை விஜய் சென்னையில் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். அந்த சந்திப்பு முடிந்து அடுத்த அறிக்கை தனது கட்சியை கலைக்க போவதாக தான் இருக்கும். இப்படி செய்ய சொன்னது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் என்ற தகவல் பரவலாக இணையத்தில் பரவி வருகிறது.

பொய்யான செய்தி: உண்மைக்கு புறம்பாக தவறான தகவல்களை சோஷியல் மீடியாவில் எழுதுவதற்கு பதிலாக, ஒரு கதையை எழுதினால் நிச்சயமாக வருமானம் கிடைக்கும். அதை விட்டுவிட்டு உண்மைக்கு புறமான ஒரு செய்தியை எழுதி அதை உண்மையாக்க வேண்டும் என நினைப்பதை பார்க்கும்போது நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. விஜய்அரசியலுக்குள் நுழைந்துவிட்டார். இதுதான் என்னுடைய கடைசி படம் என அறிவித்துவிட்டு அரசியலில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறார். தற்போது, அவர் ஒரு பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஒரு நடிகர் கட்சியை ஆரம்பித்து விட்டு 'சிஎம் சார்' என பேசிவிட்டு அரசியலை கலைத்துவிட்டால் அவரால், நடிக்க முடியுமா? அப்படியே நடித்தாலும் அந்த திரைப்படம் வெளியாகுமா? விஜய் தெரிந்தோ தெரியாமலோ புலியின் வாலை புடித்துவிட்டார். ஒன்று புலியின் வாலை பிடித்துக்கொண்டு இவர் ஓட வேண்டும், இல்லை என்றால் புலி இவரை இழுத்துக்கொண்டு ஓட வேண்டும்.
நியாயம் இல்லை: ஒரு நடிகர் கட்சியை ஆரம்பித்து ஒரு லட்சியத்தோடு அரசியலுக்கு வருகிறார். ஒரு துரதிஷ்ட சம்பவம் நடந்துவிட்டது அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார். காட்டமைப்பு சரியில்லை, தளபதிகள் சரியில்லை, ஒரு பக்கம் டெல்லி அழுத்தம் கொடுக்கிறது. மறுபக்கம் தமிழகம் அழுத்தம் கொடுக்கிறது. இப்படி பல பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்து எப்படி அரசியல் கட்சியை நடத்தி செல்வது என்பதற்கான தடுமாற்றம் தான் தமிழக வெற்றி கழகத்திடம் இருக்கிறது. அதற்குள் விஜய் அரசியலை விட்டு விலகப் போகிறார். கட்சியை கலைத்து விட்டார் என்று சொல்வதில் நியாயம் இல்லை.
சென்னையில் சந்திக்கிறார்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், கரூர் விஷயத்தில் தவெக தலைமையோ, இரண்டாம் கட்ட தலைவர்களோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. சம்பவத்தன்று கரூரில் இருந்து அவசரமாக புறப்பட்டு, சில நாட்களுக்கு பிறகு வீடியோ வெளியிட்டார். அப்போதும், அக்டோபர் 27ஆம் தேதி விஜய் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை விஜய் சந்திக்க உள்ளார். சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சென்று பார்க்க மாட்டாரா? என்று பலர் அவரை விமர்சித்து வருகின்றனர். இந்த கேள்வியை கேட்க வேண்டியது, பாதிக்கப்பட்டவர்கள் தான், அவர் எந்த வித கருத்தையும் சொல்லாத போது எதற்கு, விஜய் கட்சியை கலைத்துவிட்டார் என்று செய்தியை பரப்ப வேண்டும் என அந்தணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











