Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் பேட்டி.... சில மணிநேரங்களில் 10 லட்சம் வியூஸ்களை தாண்டிய ப்ரமோ!
சென்னை : நடிகர் விஜய்யின் பீஸ்ட் மோட் தற்போது உலகளவில் ரசிகர்களை அதிகமாக ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், ரசிகர்கள் வெறித்தனத்துடன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
10
ஆண்டுகளுக்கு
பிறகு
சன்
டிவியில்
விஜய்யின்
ஸ்பெஷல்
பேட்டி..
ஒளிபரப்பு
எப்போ
தெரியுமா?

விஜய்யின் பீஸ்ட் படம்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 13ம் தேதி கோடை மற்றும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது பீஸ்ட். இந்தப் படம் சர்வதேச அளவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.

எகிறியுள்ள எதிர்பார்ப்பு
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்யின் நடிப்பில் இந்தப் படம் ரிலீசாக உள்ளதையடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப் படத்தை பீஸ்ட் திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கேற்றாற் போல நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் பட்டையை கிளப்பி வருகிறது.

பாடல்கள் வரவேற்பு
முன்னதாக படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கோடிக்கணக்கில் வியூஸ்களை பெற்றுள்ளது. ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் படத்தின் ட்ரெயிலரும் வெளியாகி 30 மில்லியன் வியூஸ்களை எட்டியுள்ளது. லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

விஜய்யின் பேட்டி
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் சன் தொலைக்காட்சியில் இந்தப் படத்திற்காக பேட்டி கொடுக்கவுள்ளார். அவரை படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரே பேட்டியெடுக்கவுள்ளார். இதுகுறித்து முன்னதாக தகவல்கள் வெளிவந்தாலும் சன் டிவி உறுதிப்படுத்தாமல் இருந்த நிலையில், நேற்று மாலை திடீரென இதற்கான ப்ரமோவை வெளியிட்டு அசத்தியது.

ரத்தான இசை வெளியீடு
வழக்கமாக விஜய் படத்தின் இசை வெளியீடுகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். ஆனால் பீஸ்ட் படத்தின் இசை வெளியீடு ரத்து செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் விஜய் கொடுக்கவுள்ள இந்த பேட்டி ரசிகர்களை உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது.

ஏப்ரல் 10ல் ஒளிபரப்பு
வரும் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு இந்தப் பேட்டி ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான ப்ரமோ நேற்று மாலை வெளியான நிலையில் சில மணிநேரங்களிலேயே 10 லட்சம் வியூஸ்களை அள்ளியுள்ளது. ப்ரமோவே இந்த அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மெயின் பிக்சருக்கு ரசிகர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை தயாரிப்புத் தரப்பு ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளது.