twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்ச்சுக்கும் போவேன், பிள்ளையார்பட்டிக்கும் போவேன்... விஜய்யின் செம கலகல பேட்டி

    |

    சென்னை : நான் சர்ச்சுக்கும் போவேன், பிள்ளையார்பட்டிக்கும் போவேன் என விஜய் தனது பேட்டியின் மூலம் ஹேட்டர்களுக்கு பதில் அளித்துள்ளார். விஜய்யின் இந்த கலகலப்பான அசத்தல் பேட்டி அனைவரையும் கவர்ந்துள்ளது.

    Recommended Video

    என்னமா கார் ஓட்டறாரு..நம்ம Thalapathy Vijay | Beast | Rolls Royce | Tamil Filmibeat

    பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதன் ப்ரொமோஷனுக்காக கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் டிவியில் தோன்றி பேட்டி அளித்தார். பீஸ்ட் டைரக்டர் நெல்சன் திலீப்குமார், விஜய்யை பேட்டி எடுத்தார். இவர்களின் கலகல பேட்டி சன் டிவியில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நெல்சன், விஜய் மாறி மாறி கலாய்த்துக் கொண்டு கலகலப்பாக எடுக்கப்பட்ட பேட்டியின் முழு விபரம் இதோ.

    தளபதி 66 படத்தின் கதை அப்போ அதுதானா? சன் டிவி பேட்டியில் விஜய் சொன்ன சீக்ரெட்.. வைரலாகும் புரமோ!தளபதி 66 படத்தின் கதை அப்போ அதுதானா? சன் டிவி பேட்டியில் விஜய் சொன்ன சீக்ரெட்.. வைரலாகும் புரமோ!

    ஆரம்பமே அதிரடி சரவெடி

    ஆரம்பமே அதிரடி சரவெடி

    மத உணர்வு பற்றி நெல்சன் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன விஜய். நான் சர்ச்சுக்கும் போவேன். பிள்ளையார்பட்டிக்கும் போவேன். தர்ஹாவிற்கும் போவேன். எங்கு போனாலும் தெய்வீக உணர்வு தான் ஏற்படும் என்றார் விஜய். விஜய்யை மதத்தை குறித்து கிண்டல் செய்து ஹேட்டர்ஸ்களுக்காகவே இந்த கேள்வியை நெல்சன் கேட்டது போல் இருந்தது.

    அப்பா பற்றிய விஜய் சொன்னது

    அப்பா பற்றிய விஜய் சொன்னது

    அப்பா பற்றி சொல்லுங்க என நெல்சன் கேட்டதும். தற்போது நடக்கும் பிரச்சனை பற்றி ஏதாவது வார்த்தை விடுவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், பொதுவாக பதில் கூறி முடித்து விட்டார் விஜய். ஒரு மரத்தை பார்க்கும் போது எல்லோருக்கும் பூக்கள் தான் தெரியும். வேரின் உழைப்பு தெரியாது. அது போல தான் அப்பாக்களும். நாம் மகனாக இருக்கும் போது தெரிந்ததை விட, நாம் அப்பாவாகும் போது இன்னும் அது நன்றாக தெரியும் என்றார் விஜய்.

    கதை சொன்ன அல்போன்ஸ் புத்திரன்

    கதை சொன்ன அல்போன்ஸ் புத்திரன்

    உங்கள் மகன் சஞ்சய்யை சினிமாவிற்கு கொண்டு வரும் எண்ணம் இருக்கிறதா. அவர் என்ன சொல்கிறார் என கேட்டார் நெல்சன். அதற்கு பதிலளித்த விஜய், என் மகன் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை. பிரேமம் டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன் ஒரு முறை என்னை சந்திக்க வேண்டும் என்றார். நான் என்னிடம் தான் கதை சொல்ல வருகிறார் என நினைத்தேன். ஆனால் அவர் என் மகன் சஞ்சய்யை பார்க்க வேண்டும் என தனியாக கூப்பிட்டு கதை சொன்னார். ஆனால் இரண்டு ஆண்டுகள் போகட்டும் என சொல்லி விட்டார் சஞ்சய். அவர் நடிக்க போகிறாரா அல்லது படம் இயக்க போகிறாரா என எனக்கு தெரியவில்லை. அவரது முடிவு தான் என்றார்.

    ரியல் லைஃப் கேரக்டர்

    ரியல் லைஃப் கேரக்டர்

    நீங்கள் நடித்ததில் கேரக்டர் உங்களின் ரியல் லைஃப்புடன் கனெக்ட் ஆவதாக நீங்கள் நினைக்கிறீர்கள் னெ கேட்டார் நெல்சன். ரியல் லைஃப் கூட கனெக்ட் ஆகுற படத்தின் கேரக்டர் என்றால் போக்கிரி படம் இருக்கு. பீஸ்ட் படம் கொஞ்சம் கனெக்ட் ஆகுது. இது பட ரிலீசிற்காக சொல்லவில்லை. நிஜமாகவே பீஸ்ட் கேரக்டர் நிறைய என்னுடைய கேரக்டருடன் கனெக்ட் ஆகும்.

     வெளியூர் போனால் விஜய் செய்வது

    வெளியூர் போனால் விஜய் செய்வது

    பீஸ்ட் படம் ஹிட் ஆனால் எங்களை எல்லாம் ஏதாவது ஒரு ஊருக்கு கூட்டிக் கொண்டு போக வேண்டுமானால் எங்கு கூட்டிட்ரு போவீங்க என நெல்சன் கேட்க, நான் தனியா போய்கிறேன். நீங்க தனியா போங்க என்ற விஜய்யிடம், சரி உங்களுக்கு பிடித்த ஊர் எது என்றாவது சொல்லுங்கள் என்றார் நெல்சன். அது இருக்கு என்றார் விஜய். மேலும் எனக்கு பெரிசா எதுவும் இல்லை. ஒரு நல்ல ஹோட்டலாக இருக்க வேண்டும். ரூமிற்கு போய் ஸ்கிரீனை திறந்தால் நல்ல வ்யூ இருக்கணும். அப்படி இருந்தால் சேரை போட்டு நாள் முழுவதும் கூட உட்கார்ந்து விடுவேன் என்றார் விஜய். எப்படி இங்க இருந்து அமெரிக்கா போய், ரூமிலேயே இருந்து சேர் போட்டு பார்த்துக் கொண்டிருப்பீர்களா. உங்களுடன் வந்தால் நாங்களும் பக்கத்தில் சேர் போட்டு தான் இருக்கனும் என்றார் நெல்சன்.

    100 ரூபாய் பிரியாணி சாப்பிட்ட விஜய்

    100 ரூபாய் பிரியாணி சாப்பிட்ட விஜய்

    பீஸ்ட் பட ஷுட்டிங்கின் போது நெல்சன் திலீப்குமாரும், விஜய்யும் கதை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். சாப்பாட்டு நேரம் வந்த போது சாப்பிடலாமா என விஜய் கேட்ட போது, தடபுடலான விருந்தை எதிர்த்து பார்த்து தானும் நன்றாக சாப்பிடலாம் என எதிர்பார்த்துள்ளார் நெல்சன். ஆனால் விஜய்யோ, பக்கத்தில் இருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து, அதிலிருந்து 100 ரூபாய் பிரியாணியை எடுத்து சாப்பிடலாமா என கேட்டுள்ளார். இதை பார்த்து ஷாக்கான நெல்சன், இந்த 100 ரூபாய் பிரியாணி சாப்பிடவா உங்க கூட சாப்பிட வந்தோம் என நினைத்ததாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    விஜய்யுடன் எங்கெல்லாம் போக கூடாது

    விஜய்யுடன் எங்கெல்லாம் போக கூடாது

    பீஸ்ட் டீமில் உள்ளவர்கள், படம் ஹிட் ஆனதும் விஜய் தங்களை வெளிநாட்டிற்கு கூட்டிட்டு போவாரா என கேட்டு வருவதாகவும், அப்படி போவதாக இருந்தால் எந்த நாட்டிற்கு போவீங்க என விஜய்யிடம் கேட்டார். அதற்கு விஜய், அது நிறைய நான் எப்போதுமே இப்படி தான். எளிமையாக இருப்பது தான் பிடிக்கும். எங்கு போனாலும் நம்ம கேரக்டர் ஒரே மாதிரி தான இருக்கும். சூழல் மட்டும் தான மாறும் என்றார். இதை கேட்ட நெல்லசன், ஒன்னு நல்லா தெரிஞ்சு போச்சு. உங்க கூட வெளிநாட்டுக்கு போக கூடாது. சாப்பிட போக கூடாது. ஷாப்பிங் போக கூடாது என்றார்.

     டைரக்டர்களை கலாய்த்த விஜய்

    டைரக்டர்களை கலாய்த்த விஜய்

    நான், அட்லீ, யோகேஷ் இருந்த போட்டோ ஒன்று வெளி வந்தது இல்லையா. அதை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றியது என கேட்டார் நெல்சன். அதற்கு ஃபன்னாக, நீங்க தானா அது என தோன்றியது என்றார் விஜய். நான் எடுத்த போட்டோ தான அது. மூன்று பேரும் சீரியசாக பேசிக் கொண்டிருப்பதால் என்ன பேசுகிறீர்கள் என்று கேட்க தான் அந்த பக்கம் வந்தேன். ஆனால் நீங்கள், அடுத்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என பேசிக் கொண்டிருந்தீர்கள். இவங்கள எல்லாம் வச்சுகிட்ட என்ன பண்ணுறது என்று தான் நினைத்தேன் என்றார் விஜய்.

    விஜய்யின் புத்தாண்டு தீர்மானம்

    விஜய்யின் புத்தாண்டு தீர்மானம்

    புத்தாண்டு பிறக்கும் போது இதையெல்லாம் செய்ய வேண்டும் தீர்மானம் எடுப்போம்ல. அப்படி நீங்க என்ன தீர்மானம் எடுப்பீங்க என கேட்டார் நெல்சன். அதற்கு விஜய்,
    ஒன்னாம் தேதி தீர்மானம் எடுப்பேன். இரண்டாம் தேதி பிரேக் பண்ணிடுவேன். இன்றிலிருந்து புது விஜய்யாக இருக்க வேண்டும் என நினைப்பேன். அடுத்த நாளே, வேண்டாம். பழைய விஜய்யே போதும் என்ற முடிவுக்கு வந்து விடுவேன் என்றார்.

    அடுத்த படம் பற்றிய பிளான்

    அடுத்த படம் பற்றிய பிளான்

    ஒரு படம் முடித்ததும் அடுத்த படம் இப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்த்து, அதற்கு ஏற்ற மாதிரியான கதைகளுக்கு தான் ஓகே சொல்லுவீங்களா என கேட்டார் நெல்சன். அப்படியெல்லாம் இல்லை. எதையும் எதிர்பார்க்காமல், மைண்ட் பிளாங்காக வைத்துக் கொண்டு தான் கதை கேட்பேன். சிலர் ட்விஸ்ட் சொல்லி விட்டு கதை சொல்லவா என கேட்பார்கள். இல்லை வேண்டாம் நேரடியாக கதையை சொல்லுங்கள் என்று தான் கேட்பேன். மக்களை ஈர்ப்பதாக இருக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைப்பேன் என்றார் விஜய்.

    தலைவனாகும் ஆசை இருக்கா

    தலைவனாகும் ஆசை இருக்கா

    முன்பெல்லாம் இளைய தளபதி என பெயர் வந்தது. இப்போது தளபதி என வருகிறது. அடுத்ததாக தலைவன் ஆகும் ஆசை இருக்கா என கேட்டார் நெல்சன். அதற்கு பதிலளித்த விஜய், அதை மக்கள் தான் முடிவு பண்ணணும். எனக்கு விஜய்யா இருக்க தான் பிடிச்சிருக்கு. நான் தளபதியாகவே இருக்க வேண்டுமா, தலைவனாக வேண்டும் என்பது மக்கள் கையில் தான் உள்ளது. எல்லாமே அவங்க முடிவு பண்றது தான் என்றார் விஜய்.

    விஜய், விஜய்யிடம் என்ன கேட்பார்

    விஜய், விஜய்யிடம் என்ன கேட்பார்

    விஜய், விஜய்யை பேட்டி எடுத்தால் என்ன கேட்பார் என நெல்சன் கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய், இத்தனை வருடங்களாக சினிமா உங்களை உயர்த்தி ஒரு இடத்திற்கு கொண்டு வந்து வைத்துள்ளது. அந்த சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவது போல் ஒரு படம் எப்போது செய்வீர்கள் என்றார் விஜய். சூப்பர் கேள்வி என்ற நெல்சன், எப்போ பண்ண போறீங்க என்றார். அதற்கு விஜய், கேள்வி தான் கேட்குறதா சொன்ன. கேள்விக்குள்ள கேள்வி வைத்தா எப்படி. அடுத்த கேள்விக்கு போகலாமா என்றார்.

    தேர்தலில் விஜய் போட்டோ

    தேர்தலில் விஜய் போட்டோ

    உள்ளாட்சி தேர்தலில் உங்கள் போட்டோவை சிலர் பயன்படுத்தி வெற்றி பெற்றார்களே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள். அவர்கள் நிஜமாகவே நிறைய சமூக பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர். அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்பதற்காக எனது போட்டோவை பயன்படுத்திக் கொள்ளலாமா என கேட்டனர். அது உங்களுக்கு பயன்படும் என்றால் பயன்படுத்திக் கோங்க என்றேன். அவர்களும் வெற்றி பெற்றார்கள். அதற்காக அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தேன் என்றார் விஜய்.

    சமூகம் விஷயங்கள் தெரியுமா

    சமூகம் விஷயங்கள் தெரியுமா

    சினிமாவை தாண்டி சமூகத்தில் என்ன நடக்கிறது என ஃபாலோ பண்ணுறீங்களா என நெல்சன் கேட்க, முன்னால் இருந்ததை விட இப்போது நிறைய ஃபாலோ பண்ணுறேன். முன்பெல்லாம் சினிமா சார்ந்த விஷயங்கள் மட்டும் பார்ப்பேன். இப்போது அதைத் தாண்டி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள், முன்னெச்சரிக்கையா சில நடவடிக்கைகள் பண்றது எல்லாவற்றையும் கவனிக்கிறேன். அது சம்பந்தப்பட்டவர்களிடம் பேசும் போது, நிறைய விஷயங்கள் மனதில் பதிந்து விடுகிறது என்றார் விஜய்.

     எதுக்கு சைக்களில் போனீங்க

    எதுக்கு சைக்களில் போனீங்க

    வீட்டில் நான்கு கார் இருக்கும் போது ஓட்டுப் போடுவதற்கு எதற்காக சைக்களில் போனீர்கள். இதனால் விஜய் என்ன சொல்ல வருகிறார். எதற்காக சைக்கிளில் போனார் என பலரும் கேட்டு வருகிறார்கள் என்றார் நெல்சன். அதற்கு சிரித்தபடி விஜய், பெரிதாக காரணம் ஏதும் இல்லை. ஓட்டுச்சாவடி எங்க வீட்டுக்கு பின்னால் இருந்தது. ஓட்டுப் போட போகும் போது திடீரென என் மகன் நினைவு வந்தது. அதனை அவனுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு போனேன். அது தான் அதற்கு பின்னால் உள்ள பிளாஷ்பேக் என்றார் விஜய். அன்னிக்கு தான் உங்களுக்கு உங்க மகன் நினைவு வரணுமா என கேட்டு கலாய்த்தார் நெல்சன். அதை விட ஹைலைட்டே என் மகன் போன் செய்து, என் சைக்கிள் பத்திரமா இருக்குல என கேட்டான். நான் முழுசா வீடு வந்து சேர்ந்ததே பெரிய பாடாகி விட்டது. சைக்கிள் பத்திரமானா கேட்கிற. வைடா போன என சொல்லி விட்டேன் என்றார் விஜய்.

    நெல்சனுக்கு விஜய் கொடுத்த ஷாக்

    நெல்சனுக்கு விஜய் கொடுத்த ஷாக்

    உங்க கிட்ட Rolls Royce கார் இருக்குல அதுல போக வேண்டும் என உங்களிடம் கேட்கலாம் என நினைத்தேன். சதீஷ் பல நாட்களாக கேட்டார். அதனால் பீஸ்ட் ஷுட்டிங்கின் போது எங்களை உங்களை காரில் கூட்டிக் கொண்டு ஒரு ரவுண்ட் போனீங்களே அது பற்றி சொல்லுங்க என ஆவலாக கேட்ட நெல்சனிடம், பெட்ரோல் வேஸ்ட் என விஜய் சொன்னதும் ஷாக் ஆகி விட்டார். பிறகு சமாளித்த விஜய், சும்மா சொல்னேன். நன்றாக இருந்தது. அந்த வீடியோ இருந்தா போட்டு காட்டுங்க. எல்லோரும் ஃபன்னாக என்ஜாய் பண்ணட்டும் என்றார் விஜய். விஜய் கார் ஓட்ட, அருகில் சதீஷ், பின்னால் நெல்சன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் அமர்ந்து சென்றனர். அந்த காரில் ஆண் என்ன பெண் என்ன என்ற பாடல் ஒலிக்கிறது.

    தளபதி 66 தெலுங்கு படமா

    தளபதி 66 தெலுங்கு படமா

    தளபதி 66 படம் தெலுங்கு படமா இல்லை தமிழ் படமா. பைலிங்குவல் படம் என்கிறார்களே என்றார் நெல்சன். அதற்கு பதிலளித்த விஜய், தமிழ் படம் தான்ப்பா. வழக்கமாக தமிழில் படம் எடுத்து தெலுங்கில் டப் செய்வோம் இல்லையா. அது போல் தான் இதுவும். தில் ராஜு, வம்சி தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் என்பதால் தெலுங்கு படம் என பலரும் சொல்லி வருகிறார்கள். தமிழ் படம் பண்ண வேண்டும் என்று தான் அவர்கள் சொன்னார்கள் என தெளிவுபடுத்தினார் விஜய்.

    விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி

    விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி

    வழக்கமான உங்க படங்களுக்கு ஒரு ஆடியோ விழா நடக்கும். அதுவே ஹைலைட் தான். அதை விட ஹைலைட் அதில் நீங்க சொல்லும் குட்டி ஸ்டோரி தான். ஆனால் பீஸ்ட் படத்திற்கு அப்படி இல்லை. அதை வைத்து எங்களை தான் கழுவி ஊற்றி வருகின்றனர். அதனால் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லுங்க என கேட்டார் நெல்சன். இப்போதைக்கு ஸ்டாக் இல்லையே என்றார் விஜய். நெல்சனும் விடாமல் பாக்கெட்டில் நன்றாக தேடி பாருங்க இருக்கும் என்றார். விஜய்யும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக வாழ வேண்டும் என்பதற்காக புல்லாங்குழல் மற்றும் ஃபுட்பால் பேசிக் கொள்வது போல் ஒரு கதை சொன்னார்.

    ஜாலியோ ஜிம்கானா பாடலை பாடி, அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி ஒரு மணி நேர பேட்டியை நிறைவு செய்தார் விஜய். 10 ஆண்டுகளுக்கு பிறகு டிவியில் பேட்டி கொடுக்கிறேன். வரும் போது பதற்றமாக வந்தேன். ஆனால் ஜாலியாக போனது என்றார் விஜய்.

    English summary
    After 10 years Vijay gave interview in Sun tv for Beast promotion. Director Nelson Dilipkumar interviewed Vijay. This jolly interview liked by every one. Vijay starred Beast will release on April 13th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X