»   »  மெய் காட்ட பொய் தயார்

மெய் காட்ட பொய் தயார்

Subscribe to Oneindia Tamil

ஆஸ்திரேலியாவிலிருந்து பொய் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு குதித்தோடிவந்திருக்கும் அழகிய கங்காரு விமலா ராமன், கிளாமர் காட்டிக் கிளப்பவும் தயாராகஇருக்கிறாராம்.

அட்டகாசன அரபுக் குதிரை போல நெடு நெடுவென நெகுநெகுவென்று இருக்கிறார்விமலா ராமன். வாயைத் திறந்தால் முதலில் வருவது வெள்ளையன். அப்புறமாய்தொடர்வது நம்ம அன்னைத் தமிழ். இரண்டையும் படு அழகாகப் பேசுகிறார் விமலா.

குயில் பேசுவதைப் போலவே இருக்கிறது விமலா பேசுவதையும் கேட்டால்.அவ்வளவு தித்திப்பு குரலில். என்னம்மணி பொய் படத்தில் நடித்தீர்கள், தலைவர்கமல் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார், ஓடி விட்டீர்களாம் ஏனாம் என்று விமலாவிடம்குசலம் விசாரித்தோம்.

நான் நடித்த முதல் படம் பொய் தான். அது இப்போது ரிலீஸாகப் போகிறது. அதோடரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். அதன் பிறகுதான் புதிய படங்களை ஒப்புக் கொள்ளப்போகிறேன். அதுதான் காரணம், மற்றபடி கமல் படத்தை தவிர்க்க வேண்டும்என்றெல்லாம் இல்லை. அவர் எவ்வளவு பெரிய ஜீனியஸ், அவரை தவிர்க்கநினைப்பேனா?

உங்களுக்கு ஒன்று தெரியுமா? எனக்கு முதலில் வந்த வாய்ப்பே கமல்சாரோட நளதமயந்திதான். அதில் கீது மோகன்தாஸ் நடித்த வேடத்தில் நான் தான் நடிப்பதாகஇருந்தது. ஆனால் அப்போது படிப்பு குறுக்கிட்டதால் படத்தை துறக்கவேண்டியதாயிற்று. அம்மாதான் படிப்புதான் முக்கியம், அப்புறம் பார்க்கலாம் என்றுகூறி விட்டார்.

இதனால் கமலுடன் அப்போதே வாய்ப்பு நழுவிப் போய் விட்டது. மறுபடியும் ஒருவாய்ப்பு வராமலா போய் விடும் என்று நீளமாக விளக்கினார் விமலா.

அது சரி விமாலம்மா, இப்போது கோலிவுட்டில் எல்லாப் பேரும் கிளாமரில் பின்னிபெடலெடுக்கிறார்களே. நீங்க? என்று ரியாலிட்டிக்குத் தாவினோம்.

நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று யார் சொன்னது? வாய்ப்பு வரும்போதுபின்னி எடுக்கிறேனா, இல்லையா என்பதைப் பாருங்கள். ஆனால் நான் கிளாமராகநடிக்க வேண்டும் என்றால் அது வேண்டுமென்றே திணிக்கப்படும் காட்சியாகஇருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அசத்த நானும் தயார்தான் என்று நெஞ்சைநிமிர்த்திச் சொல்கிறார் விமலா.

பேசி விட்டு வந்து வெகு நேரமாகியும் நெஞ்சாங்கூட்டை விட்டு விமலா போகவேஇல்லீங்கோ.

கிளாமராக நடிப்பேன் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், தனது ஒரு போட்டைசெஷனை நடத்தி ஹாட் ஸ்டில்களையும் கோலிவுட்டில் உலாவ விட்டிருக்கிறார்விமலா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil