»   »  பொய் விமலா

பொய் விமலா

Subscribe to Oneindia Tamil

எல்லாப் பெண்களுக்கும் வருவது போல எனக்கும் பருவ காலத்து ஆசைகள் வந்து போயிருக்கின்றன. ஆனாலும்நான் காதலில் சிக்கி சின்னாபின்னமாகி விடாமல் சுதாரிப்பாக இருந்ததால் தப்பினேன் என்று பட்டென்று தனதுபருவ கால பிளாஷ்பேக்கை போட்டுவுடைக்கிறார் விமலா ராமன்.

பொய் படம் மூலம் கே.பாலச்சந்தரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டு கோலிவுட்டில் படு ஸ்மார்ட்டானஸ்டார்ட் அப்புக்காக காத்து நிற்கிறார் விமலா ராமன். ஆஸ்திரேலியாவில் பிறந்த அழகிய பெண்ணாகஇருந்தாலும், பூர்வீகம் தமிழ்நாடும், பெங்களூராம் விமலாவுக்கு.

அப்பா பட்டாபிக்கு சொந்த ஊர் பெங்களூரூ. அம்மாவுக்கோ கொங்கு நகராம் கோவை. வீட்டில் தமிழ்தான்ஆட்சி மொழியாம். எனவே அழகுத் தமிழை படு அழகாக பேசுகிறார் விமலா. இந்த விண்ணுயரநெட்டையழகிக்கு (5.6 அடி உயராம்!) ஒத்த அண்ணன்தானாம்.

பார்த்தவுடனேயே பச்சக் என்று மனதில் ஒட்டிக் கொள்ளும் அம்ச விமலா, ரொம்ப வெளிப்படையாக பேசுகிறார்.ஆஸ்திரேலியாவாச்சே, காதல் கீதல் ஏதாவது வந்திருக்குமே என்று கேட்டால், புன்னகை மாறாமல்பிளாஷ்பேக்குக்குப் போகிறார்.

கண்டிப்பாக எனக்கும் அந்தந்த வயதுக்குரிய உணர்வுகள், ஆசைகள் வந்தன. அவையெல்லாம்இயற்கையானவைதான். ஆனால் நான் கொஞ்சம் சுதாரிப்பான பெண். எனவே காதல் கீதலில் சிக்கிசின்னாபின்னமாகி விடாமல் தப்பி விட்டேன்.

ஆனால் எனது தோழிகள் பலருக்கும் இந்த காதல் வைரஸ் தாக்கி சீரழிந்து போய் விட்டார்கள். அவர்களதுஅனுபவத்தைப் பார்த்து நான் இன்னும் சுதாரிப்பாக இருக்கிறேன். ஸோ, இப்போதைக்கு எனக்கு எந்தக் காதலும்இல்லை என்கிறார் விமலா.

ஆஸ்திரேலியாவின் பொறந்தவர் என்றாலும் நம்ம ஊர் கலாச்சாரத்தை ரொம்பவே மதிக்கிறார், ரசிக்கிறார் விமலா.சரோஜதேவி, சாவித்ரி என்றால் விமலாவுக்கு உயிராம். சலங்கை ஒலி, மயூரி, தில்லானா மோகனாம்பாள்படங்களை பல முறை பார்த்து ரசித்திருக்கிறாராம். கமலும, ரஜினியும் ரொம்பப் பிடிக்குமாம்.

என்ன மாதிரி நடித்து இம்சிக்க இஷ்டம் என்றோம். எல்லோரையும் கவருவது போல நடிக்க வேண்டும். அதுகிளாமராகவும் இருக்கலாம், நல்ல நடிப்பைக் கொடுப்பதாகவும் இருக்கலாம். எதாக இருந்தாலும் எல்லோரையும்அட்ராக்ட் செய்ய வேண்டும். அதுதான் எனது ஒரே குறிக்கோள் என்று படு தெளிவாக பேசுகிறார் விமலா.

பொய் நாயகியாக இருந்தாலும் விமலா சொல்வதை மெய் என்று நம்பலாம்!

Read more about: vimala ramas poi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil