twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமீர் கான் என்ன சொன்னார் தெரியுமா?...மனம் விட்டு பேசிய டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கார்த்திக்...

    |

    சென்னை: நடிகர் கமல்ஹாசன் தான் மிகப்பெரிய டப்பிங் ஆர்ட்டிஸ்ட். என்னுடைய ஹீரோ, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், எல்லாமே அவர் தான் என்று டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கார்த்திக் கூறியுள்ளார்.

    கார்ட்டூன் படங்களுக்கு டப்பிங் கொடுப்பது மிகவும் சிரமம் என்றும், டப்பிங் தொழில் என்பது கூடு விட்டு கூடு மாறுவது போன்றது என்றும் தெரிவித்தார்.

    அமீர்கான் தன்னிடம் வந்து சொன்ன விஷயத்தை இந்த வீடியோ பேட்டியில் பகிந்து உள்ளார் . அந்த சந்திப்பை மறக்க முடியாது என்று பூரிப்புடன் பகிர்ந்து கொண்டார் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கார்த்திக்.

    போதையை விட்டு வாலே... அரைக்கூவல் விடும் நடிகர் அருண் விஜய் போதையை விட்டு வாலே... அரைக்கூவல் விடும் நடிகர் அருண் விஜய்

     ஆங்கில படங்களுக்கு அங்கீகாரம்

    ஆங்கில படங்களுக்கு அங்கீகாரம்

    கேள்வி: உங்களது 25 வருட பயணத்தில், ஹாலிவுட் படங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளீர்கள். ஹாலிவுட் நடிகர்கள் யாராவது உங்களை அழைத்து பாராட்டியுள்ளார்களா?

    பதில்: இல்லை. திரையரங்குகளில் தான் எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. சோசியல் மீடியாவும், ரசிகர்களும் என்னை ஆதரிக்கிறார்கள். பொதுவாக ஸ்கிரீன் முன்னால் பேசுவது வேறு.. எதார்த்தமாக பேசுவது வேறு... ஆங்கில மொழியில் உள்ள உணர்வுகளை புரிந்து கொண்டு பேச வேண்டும். ஒரு சில படங்களில் மெட்ராஸ் பாஷை பயன்படுத்தப்படும். ஏனெனில் ஒரு சில படங்களில் ஆங்கிலத்திற்கு இணையாக தமிழ்சொற்களை அப்படியே பயன்படுத்த முடியாது. அப்போது ஒரு மாற்றத்திற்கு மெட்ராஸ் பாஷை பயன்படுத்துவார்கள். இதை முடிவு செய்வது எழுத்தாளரும், தயாரிப்பாளரும் தான். திரைப்படத்தில் எழுத்தாளர்களின் கிரியேட்டிவிட்டி தான் முக்கியம். எனக்கு கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில் சிவில் வாரின்போது பேசிய வசனம் - "உனக்கு எப்பவாவது எங்களோடு உதவி தேவைப்பட்ட கண்டிப்பாக அங்க இருப்போம்" என்ற வசனம் ரொம்ப பிடிக்கும். அவென்ஞர் அசெம்பள் என்று நான் டப்பிங் கொடுக்கும்பொழுது பிரமிப்பாக இருந்தது. ஸ்பைடர் மேன் 1 & 2, நோ வே ஹோம் போன்ற படங்களுக்கும் டப்பிங் கொடுத்துள்ளேன்.

     இவங்கள ரொம்ப பிடிக்கும்

    இவங்கள ரொம்ப பிடிக்கும்

    கேள்வி: ஆங்கிலப்படங்களில் உங்களுக்கு பிடித்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யார்?

    பதில்: எல்லோரையும் பிடிக்கும். டோனி ஸ்டாக் வாய்ஸ் கொடுத்த ரவிசங்கர், ஹல்க் வாய்ஸ் கொடுத்த ஆதித்யா, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வினோத், ப்ளாக் விடோ ரோலுக்கு பேசிய ப்ரியா, அயர்ன்மேன் வாய்ஸ் கொடுத்த ரவிசங்கர் போன்றவர்களை எனக்கும் ரொம்ப பிடிக்கும். லயன்கிங் படத்திற்கு நடிகர்கள் ரோபோசங்கர், மனோபாலா ஆகியோர் டப்பிங் செய்தனர். அவர்கள் நடித்துக் கொண்டு டப்பிங் செய்கிறார்கள். இது ஒரு நல்ல விஷயம். ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கும் .

     சுழற்சி முறையில் வேலை

    சுழற்சி முறையில் வேலை

    கேள்வி: டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன் எப்படி சென்று கொண்டிருக்கிறது?

    பதில்: நடிகர் ராதாரவி தலைமையில் பல நல்ல திட்டங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. அதாவது எங்கள் யூனியனில் உள்ள 2300 பேருக்கு சுழற்சி முறையில் வேலை கிடைக்க வேண்டும் என்பது தான் முக்கியம் . வேறு எந்த வித பிரச்னையும் இல்லை. சம்பளம் தாமதம் இல்லாமல் கிடைக்கிறது. இதில் ஏதாவது பிரச்னை என்றால் நிர்வாகிகள் உடனே தலையிட்டு எங்களுக்கு பெற்று தருகிறார்கள். இது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

     சவாலான விஷயம்

    சவாலான விஷயம்

    கேள்வி: பாலிவுட் படத்திற்கு நீங்கள் டப்பிங் கொடுத்தது குறித்து...

    பதில்: நான் அமீர்கான் தயாரிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பான "சத்யமே வ ஜெயதே " நிகழ்ச்சிக்கு முதன்முதலில் டப்பிங் கொடுத்தேன். பின்பு 2013ல் தூம் 3 படத்திற்கு வாய்ஸ் டெஸ்ட்டிங் முடிந்த பிறகு மும்பைக்கு அழைத்தார்கள். அங்கு சென்றேன். அப்போது அமீர்கான் என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது பிரமிப்பாக இருந்தது. "வணக்கம் i am amir khan" என்று மிகவும் எளிய மனிதராக அமர்ந்து பேசி கொண்டு இருந்தார். அவர் வந்து தன்னை தானே அறிமுக படுத்தி கொண்ட விஷயம் மறக்கவே முடியாது. தூம் 3 படத்தில் அமீர்கான் இரட்டை வேடம். ஒரு கதாபாத்திரம் சாதாரண மனிதர். மற்றொரு கதாபாத்திரம் குழந்தை போன்ற மனிதன் கதாபாத்திரம். இருவருக்கும் நான் டப்பிங் கொடுத்தது மிக சவாலான விஷயமாக இருந்தது. 2019ல் அமீர்கான் நடிப்பில் தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படத்திற்கும் டப்பிங் கொடுத்துள்ளேன்.

     தனுஷிற்கு டப்பிங்

    தனுஷிற்கு டப்பிங்

    கேள்வி: தமிழ் திரைப்படங்களில் உங்களது டப்பிங் அனுபவம் எப்படி? உங்களுக்கு பிடித்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யார்?

    பதில்: நேரடியான தமிழ் திரைப்படங்களில் ஹீரோவிற்கு டப்பிங் கொடுப்பது என்பது ஒரு சீன் முழுவதும் மாறி மாறி வரும் சந்தோஷம், துக்கம் போன்றவற்றை உள்வாங்கி கொண்டு கொடுக்க வேண்டும். நான் அறிந்தும் அறியாமாலும் படத்தில் நடிகர் நவ்தீப், சண்டக்கோழியில் மீராஜாஸ்மின் தம்பிக்கும், மீகாமன், ஜெகமே தந்திரம் ஆங்கில மொழி படத்தில் தனுஷிற்கு டப்பிங் கொடுத்துள்ளேன். தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரிலும், ஜீ தமிழிலில் வித்யா நெ.1 தொடரிலும் மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, தென்றல் வந்து என்னை தொடும் போன்ற தொடர்களுக்கும் டப்பிங் கொடுத்துள்ளேன்.

     ஃபேவரட் நடிகர்

    ஃபேவரட் நடிகர்

    கேள்வி: 25 வருட டப்பிங் பயணம் குறித்து..

    பதில்: எனது அம்மா மாலா தான் எனது ஏணிப்படி. எங்களது துறையில் எனது அம்மாவை மாலா மாமி என்று தான் அழைப்பார்கள். நானும், எனது இரண்டு சகோதர்களும் இதே டப்பிங் துறையில் தான் இருக்கிறோம். என்னை பொறுத்தவரை நடிகர் கமலஹாசன் தான் மிகப்பெரிய டப்பிங் ஆர்ட்டிஸ்ட். தசாவதாரம் படத்தில் 10 கதாபாத்திரத்திற்கும் அவரே டப்பிங் செய்திருப்பார். அதனால் தான் அவரை உலகநாயகன் என்று அழைக்கிறோம். அவர் தான் என்னுடைய பேவரைட். நடிகர் மோகனுக்கு நீண்ட காலமாக டப்பிங் கொடுத்த எஸ்.என்.சுரேந்தரை ரொம்ப பிடிக்கும்.

     கார்ட்டூன் படங்களுக்கு டப்பிங் சிரமம்

    கார்ட்டூன் படங்களுக்கு டப்பிங் சிரமம்

    கேள்வி: கார்ட்டூன் திரைப்படங்களில் டப்பிங் குறித்து...

    பதில்: டப்பிங் கொடுப்பதிலேயே மிகவும் சிரமமானது கார்ட்டூன் படங்களுக்கு தான். ஏனெனில் திடீரென்று கார்ட்டடூன் கேரக்டர் அழும், கத்தும். அதுக்கு ஏற்றாற்போல் கொடுக்க வேண்டும். நான் டிஸ்க்கவரி, நேஷனல் ஜியோகெரபி, சுட்டி டிவி போன்ற சேனல்களிலும், போகிமான், பென் 10 போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கும் டப்பிங் கொடுத்துள்ளேன்.

    புகழ்ந்து பேசினால் கேட்கக்கூடாது

    கேள்வி: இந்த டப்பிங் துறைக்கு வர நினைப்பவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக வருபவர்களுக்கு நன்றாக வாய்ஸ் இருக்க வேண்டும். மொழி குறித்த அறிவு இருக்க வேண்டும். உணர்வுகளை புரிந்து கொண்டு பேச வேண்டும். நம்மை சுற்றியிருப்பவர்கள் புகழ்ந்து பேசினால் கண்டிப்பாக கேட்கக்கூடாது. இந்த துறையானது கூடு விட்டு கூடு பாயுற மாதிரி. ரொம்ப உழைக்கணும். உழைத்தால் மரியாதை கிடைக்கும் என்று பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனல் சென்று காணலாம்.

    English summary
    What Amir Khan Told to me Dubbing Artist Karthik Revelaing the Truth
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X