twitter
    Tamil»Movies»Balloon
    பலூன்

    பலூன்

    U/A | Horror
    Release Date : 29 Dec 2017
    Director : சினிஷ்
    3.5/5
    Critics Rating
    2.5/5
    Audience Review
    பலூன் அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், ஜெய் மற்றும் அஞ்சலி மீண்டும் இணையும் காதல் மற்றும் திரில்லர்  திரைப்படம். இத்திரைப்படத்தின் கதை 1980-ல் தொடங்கி தற்போது உள்ள காலகட்டம் வரை மூன்று காலகட்டங்களில் கதை நகர்கின்றது. 

    கதை :

    ஜெய், சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக வாய்ப்புத் தேடி அலைகிற இளைஞன். சினிமாவில் சாதிப்பதற்காக தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார். சில சிக்கல்களால் அவரது ஸ்கிரிப்ட் தயாரிப்பாளரால் நிராகரிக்கப்பட்டு, பேய்ப்படம் ஒன்றிற்கு ஸ்கிரிப்ட் தயார் செய்யச் சொல்கிறார் தயாரிப்பாளர். பேய்க் கதைகளில் தனக்கு...
    • சினிஷ்
      சினிஷ்
      Director
    • tamil.filmibeat.com
      3.5/5
      ஜெய், அஞ்சலி, யோகிபாபு, ஜனனி ஐயர் ஆகியோர் நடிப்பில் சினிஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கிற திகில் திரைப்படம் 'பலூன்'. ரொமான்ஸ் காமெடி வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த ஜெய் இந்தப் படத்தின் மூலம் ஹாரர் திரைப்படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். இவர்களின் திகில் கதையாக வெளிவந்த 'பலூன்' ரசிகர்கள் மத்தியில் பறந்ததா இல்லை புஸ்ஸானதா..? வாங்க பார்க்கலாம்.

      குழந்தை தூக்கிப் போடப்பட்ட கிணற்றில் இருந்து பலூன்கள் இரவில் பறப்பது, பொம்மையின் தலை திரும்புவது, தானாக எரியும் லைட், அசையும் சேர் என பேய்க்கதைகளின் க்ளிஷேதான். படத்தின் டைட்டில் கார்டிலேயே 'அனபெல்', 'இட்', 'ஜான்ஜூரிங்' உள்ளிட்ட சில படங்களிலிருந்து இன்ஸ்பயர் ஆனதாக நன்றி தெரிவித்திருக்கிறார்கள். படத்தின் பல காட்சிகள் பேய்ப் படங்களில் நாம் ஏற்கெனவே பார்த்த காட்சிகளாகத் தான் இருக்கிறது. படத்தின் காட்சியமைப்பிலும் ஹாலிவுட் படங்களின் சாயல் தெ..