»   »  குடித்து கும்மாளமடித்து, பொய் சொல்லி நஷ்டம் ஏற்படுத்தினேனா?: ஜெய் விளக்கம்

குடித்து கும்மாளமடித்து, பொய் சொல்லி நஷ்டம் ஏற்படுத்தினேனா?: ஜெய் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பலூன் பட நஷ்டம் குறித்து நடிகர் ஜெய் விளக்கம் அளித்துள்ளார்.

சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்த பலூன் படம் அண்மையில் வெளியானது. ஜெய்யின் மெத்தனத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகாரும் அளித்துள்ளனர்.

ஜெய்

ஜெய்

ஜெய் தினமும் குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்ததாகவும், எப்போது பேக்கப் செய்வார்கள் என்பதை எதிர்பார்த்தே சரியாக நடிக்கவில்லை என்றும் தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சின்சியர்

சின்சியர்

என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட தாக்குதல் ஆகும். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஜெய் விளக்கம் அளித்துள்ளார்.(ஜெய் மெத்தனமாக நடந்து கொண்டதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளது என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது).

ஆதாரம்

ஆதாரம்

நான் தினமும் சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்து நடித்துக் கொடுத்துள்ளேன். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று ஜெய் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

நான் எப்படி என்று என்னை வைத்து படம் தயாரித்த அனைவருக்கும் தெரியும். இதுவரை எந்த தயாரிப்பாளரும் என் மீது புகார் கூறியது இல்லை. பலூன் படம் இதுவரை ரூ. 7 கோடி வசூலித்துள்ளது. இது வெற்றிப் படமே என்று ஜெய் கூறியுள்ளார்.

English summary
Actor Jai has explained that he attended the shooting of Balloon in a proper manner and he is not at all the reason for any loss to the producers. It is noted that the producers of Balloon movie gave a complaint aginst Jain in the producers council.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X