X
தமிழ் » திரைப்படங்கள் » தர்மபிரபு
தர்மபிரபு

தர்மபிரபு

Comedy | Drama | 28 Jun 2019 | U | 147 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

தர்மபிரபு கதை

தர்மபிரபு இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ரங்கநாதன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கதை  எமலோகத்து அரசனாக இருக்கும் ராதாரவி தனது முதுமையின் காரணமாக தன் அதிகாரத்தை மனைவி ரேகாவின் உதவியோடு தன் மகன் யோகி பாபுவிடம் ஒப்படைக்கிறார். அரியணை, ஆட்சி என இதில் பெரும் ஈடுபாடு இல்லாத யோகிபாபு அரசனாக ஆட்சி செய்கிறார். யோகிபாபு அரியணையில் அமர்ந்ததை பிடிக்காத அரண்மனையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் யோகிபாபுவுக்கு சதி வலை விரித்து அதில் சிக்க வைக்கிறார். இதன் காரணமாக யோகிபாபு பூலோகம் சென்ற போது எமதர்மர் ஒரு உயிரை காப்பாற்றிவிடுகிறார். இதனை கண்ட சிவன் (மொட்டை ராஜேந்திரன்) யோகிபாபுவின் பதவிற்கு காலக்கெடு விதிக்கிறார். சிவன் கொடுத்த காலத்திற்குள் எமனாக உள்ள யோகி பாபு தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்தாரா? விதிமுறை மீறாமல் நடந்து கொண்டாரா? ஆட்சியை மீண்டும் தக்கவைத்தாரா? என்பதே படத்தின் கதை 
Read More

தர்மபிரபு நடிகர்கள் & படக்குழுவினர்

தர்மபிரபு அணியின் தகவல்

இயக்குனர் முத்துக்குமரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜஸ்டின் பிரபாகரன்
தயாரிப்பாளர் ரங்கநாதன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தர்மபிரபு விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
யோகி பாபுவை எமலோகத்தில் அமரவைத்து, பூலோகத்தை செம கலாய் கலாய்த்திருக்கிறார் இயக்குனர் முத்துகுமரன். அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, பாஜக என அனைத்து கட்சியையும் வெச்சு செய்திருக்கிறார்கள். யோகி பாபுவை ஹீரோவாக வைத்து, அரசியல் நையாண்டி படம் எடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர் முத்துகுமரன். 'டயர் நக்கி அமைச்சர்கள்', 'கூவத்தூர் மந்திரி புத்தி' என வசனங்கள் முழுவதும் அரசியல் நெடி உச்சத்தில் இருக்கிறது. யோசிக்காமல் செம கலாய் கலாய்த்திருக்கிறார் யோகி பாபு. சத்யாநந்தா, ஜிபிஎஸ், ஐயா என கேரக்டர்களின் பெயர்களிலும் செம நக்கல் தான். வழக்கம் போல தனது பஞ்ச் வசனங்களால் தியேட்டரை அலறவிடுகிறார் யோகி பாபு. கவுண்டமணி, வினுசக்கரவர்த்திக்கு பிறகு எமன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கதையின் நாயகனாக யோகி பாபுவுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகளை நிச்சயம் ஏற்படுத்திக்கொடுக்கும் தர்மபிரபு.

தர்மபிரபு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தர்மபிரபு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+