ஜுங்கா கதை
ஜுங்கா ரௌத்திரம் புகழ் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா சைகள், மடோனா மற்றும் பலர் இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்படம். கதை : கிராமத்தில் பேருந்து நடத்துநரான விஜய் சேதுபதியும் (ஜுங்கா), அந்த பேருந்தில் பயணியாக வரும் மடோனா செபாஸ்டியனும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், மடோனாவின் பின்னால் சுற்றி அவளுக்கு தொல்லை கொடுக்கும் ஒருவரை, விஜய் சேதுபதி கண்டிக்கிறார். இதனால் கடுப்பாகும் அந்த நபர், அடியாட்களுடன் வந்து விஜய் சேதுபதியை அடித்துவிடுகிறார். தன்னை அடித்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று யோசிக்கும் விஜய் சேதுபதி, தனது நண்பன் யோகி பாபுவிடம் இதுபற்றி கூறி, யோசனை கேட்கிறார். தனக்கு ஒரு அரசியல்வாதியை தெரியும் என்று கூறி, விஜய் சேதுபதியின் சம்பள பணத்தை வாங்கி செலவு செய்துவிடுகிறார் யோகி பாபு. இதனால் கடுப்பாகும் விஜய் சேதுபதி, தன்னை அடித்தவர்களை தேடிச் சென்று புரட்டி எடுக்கிறார். விஜய் சேதுபதி அடிதடியில் ஈடுபட்டது அவரது அம்மாவான சரண்யா பொன்வண்ணனுக்கு தெரிய வருகிறது. அப்பா, தாத்தாவைப் போல நீயும் டானாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத் தான் விஜய் சேதுபதியை வேறு ஊருக்கு அழைத்து வந்ததாக கூறும் சரண்யா பொன்வண்ணன், சென்னையில் விஜய் சேதுபதியின் அப்பா, தாத்தா பெரிய டான் என்றும், அவர்களுக்கு ஒரு சொந்தமாக தியேட்டர் இருந்ததாகவும் கூறுகிறார். தனது குடும்பம் டான் குடும்பம் என்பதை அறிந்து குஷியாகும் விஜய் சேதுபதி, அவர்களது திரையரங்கை மீட்பதற்காக சென்னை வருகிறார். சென்னையில் சிறிய, சிறிய கட்டப் பஞ்சாயத்துகளை செய்து, சென்னையில் டானாகிறார். இதனால் பல்வேறு கட்டப் பஞ்சாயத்துகள் அவரைத் தேடி வருகிறது. அவரும் அவை அனைத்தையும் முடித்து வைக்கிறார். தனது தியேட்டரை மீட்கவும் பணத்தை சேர்த்து வருகிறார். இது சென்னையில் இருக்கும் மற்ற டான்களுக்கு பிடிக்காமல் போக, விஜய் சேதுபதியை கொல்ல முடிவு செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொரு டானான ராதாரவி விஜய் சேதுபதியை பழிவாங்க, தியேட்டரை இடித்து விட திட்டம் போடுகிறார். இந்த நிலையில், தியேட்டர் உரிமையாளரான சுரேஷ் மேனனை சந்தித்து, தியேட்டரை தான் வாங்கிக் கொள்வதாக விஜய் சேதுபதி கூறுகிறார். ஆனால் சுரேஷ் மேனன், விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்தி அனுப்ப, அவரை பழிவாங்க அவரது மகளான சாயிஷாவை கடத்த பாரிஸ் செல்கிறார் விஜய் சேதுபதி. பாரிஸில் சாயிஷாவை சுற்றி எப்போதும் பாதுகாப்புக்கு ஆட்கள் இருக்க, சாயிஷாவை கடத்த விஜய் சேதுபதி முயற்சி செய்கிறார். கடைசியில், விஜய் சேதுபதி, சாயிஷாவை கடத்தினாரா? தனது தியேட்டரை கைப்பற்றினாரா? தனது காதலியான மடோனாவை திருமணம் செய்தாரா? சாயிஷாவுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
Read More