twitter
    Tamil»Movies»LockUp
    லாக்கப்

    லாக்கப்

    Release Date : 14 Aug 2020
    Watch Trailer
    Critics Rating
    3.5/5
    Audience Review
    லாக்கப் இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இயக்கத்தில் வைபவ், வெங்கட் பிரபு, வாணி போஜன், பூர்ணா என தமிழ் திரைப்பட பிரபலங்கள் பலர் நடித்திருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் நித்தின் சத்யா தயாரிக்க, இசையமைப்பாளர் அரோல் கொரேலி இசையமைத்துள்ளார்.

    ஜீ 5 ஓடிடி

    குறைந்த பொருட்செலவில் உருவாகியுள்ள ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் தியேட்டர்கள் பனி நிறுத்தம் காரணமாக இப்படம்...
    • எஸ் ஜி சார்லஸ்
      எஸ் ஜி சார்லஸ்
      Director
    • நிதின் சத்யா
      நிதின் சத்யா
      Producer
    • அரோள் கரோலி
      அரோள் கரோலி
      Music Director
    லாக்கப் டிரைலர்
    • லாக்கப் ட்ரைலர்
    • பில்மிபீட்
      0/5
      சென்னையில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சம்பத் (மைம் கோபி) ஒரு அடுக்குமாடி பங்களாவில் மர்மமாக கொலை செய்யப்படுகிறார். ஒரு போலீஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டதால் போலீஸ் அதிகாரிகளுக்கு மேல் இடத்தில இருந்து அழுத்தங்கள் அதிகரிக்கிறது. இந்த வழக்கினை விசாரிக்க சென்னையில் வேறு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் இன்ஸ்பெக்டர் இளவரசி (ஈஸ்வரி ராவ்) நியமிக்கப்படுகிறார்.

      ஈஸ்வரி ராவ் கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சம்பதின் முன் விரோதத்தினை காட்டி ஒரு ரௌடியை கைது செய்து விசாரிக்க தொடங்குகிறார். பின் சம்பத் பணியாற்றிய காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்ற ஆசையில் உள்ள எஸ்.ஐ வெங்கட் பிரபுவின் மேல் சந்தேகம் தொடங்குகிறது.

      இந்நிலையில் அதே இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட இடத்தில மற்றொரு பெண் (பூர்ணா) கொலை செய்யப்படுகிறார். பின் இதற்கான சந்தேகம் எஸ்.ஐ வெங்கட் பிரபு மற்றும் அவரது உதவியாளர் வைபவ் மேல் அதிகரிக்கிறது. அவர்களை கைது செய்கின்றனர் காவலர்கள். காவலர்களிடம் இருந்து தப்பித்து பின் கொலை செய்த அந்த நபர் யார்? என்னும் விடையை தனியாக போராடி கண்டறிகிறார் வைபவ்...