Just In
- 34 min ago
'தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்க' ரேஞ்சுக்கு கோபத்தில் கத்திய அப்பா.. பயத்தில் உறைந்த பிரபல நடிகை
- 1 hr ago
காதலனுடன் பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பிரபல நடிகை.. அப்போ விரைவில் டும்டும்டும்?
- 1 hr ago
சென்னையில் வீடு வாங்கி பால் காய்ச்சிய விஜய் சேதுபதி!
- 1 hr ago
குண்டு படத்திற்குக் குவியும் பாராட்டுகள்.. சேரன் பாராட்டு!
Don't Miss!
- News
ஜேடியூவில் பிரசாந்த் கிஷோர் பற்ற வைத்த நெருப்பு- குடியுரிமை மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
- Automobiles
ஜனவரி முதல் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது
- Sports
ஆம் அவர் சூதாட்டம் செய்தது உண்மைதான்.. மாட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. நிரூபணம் ஆனது!
- Finance
தங்கம் விலை தொடர்ந்து ஐந்து நாட்களாக வீழ்ச்சி.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா..!
- Lifestyle
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- Technology
அதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது?
- Education
8-ம் வகுப்பு தேர்ச்சியா? தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டீசருக்கு கிடைத்த வரவேற்பு, படத்திற்கு கிடைக்குமா? - ‘லாக்கப்’ பை நம்பியிருக்கும் நித்தின் சத்யா
சென்னை: நடிகராக வேண்டும் என்று முயற்சித்து தமிழ் சினிமாவில் காணாமல் போனவர்கள் ஏராளாம். ஆனால், அவர்களின் பட்டியலில் இணையாமல் தொடர்ந்து போராடி எதாவது ஒரு துறையின் மூலம் தொடர்ந்து சினிமாத்துறையில் சிலர் மட்டுமே பயணிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் நித்தின் சத்யா.
படிபை முடித்ததுமே நடிகராக வேண்டும் என்ற கனவோடு இருந்த நித்தின் சத்யா, படித்தது லண்டனில் என்பதனாலயே, முதல் படமே ஆங்கிலப் படமாக அமைந்தது. அதன் மூலம் 'பென்டிக் லைக் பெக்கம்' என்ற படத்தில் நடித்தார். அதற்கு பிறகு தமிழில் 'காலாட்படை' எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

2004 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்த 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அஜித்துடன் 'ஜி', விக்ரமுடன் 'மஜா' போன்ற படங்களில் நடித்தார்.
2007ல் வெங்கட் பிரபு இயகத்தில் வெளியான 'சென்னை 28' படத்தில் பழனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து அந்த படத்தில் நடித்த அனைவருக்கும் பெரிய பெரிய வாய்ப்புகள் கிடைக்க செய்தது. .இந்த படத்திற்கு பிறகு நித்தின் சத்யா 'சத்தம் போடதே' படத்தில் வில்லனாக நடித்திருப்பார், இந்த படத்தில் நாம் அது வரை கானாத நித்தின் சத்யாவை பாத்திருப்போம். அந்த படத்தில் ப்ரித்விராஜ் ஹீரோவாக நடித்திருப்பார்.

அதற்கு பிறகு சரோஜா, பந்தயம், ராமன் தேடிய சீதை, முத்திரை, பாலைவனச்சோலை, மயங்கினேன் தயங்கினேன், என்ன சத்தம் இந்த நேரம், அரண்மனை, திருடன் போலீஸ், அம்மனி, சிங்கம் 3, சென்னை28 -2 ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், சோலோ ஹீரோவாக நித்தின் சத்யாவுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. மேலும், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் சாதாரணமானதாகவே இருந்தது.

நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்தாலும் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க நினைத்த நித்தின் சத்யா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதன்படி, ஜெய்யை ஹீரோவாக வைத்து 'ஜருகண்டி' என்ற படத்தை தயாரித்தார். ஆனால், அப்படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததோடு, நித்தின் சத்யா தயாரிப்பாளாராக நஷ்ட்டத்தையும் சந்தித்தார்.

முதல் படம் தோல்வியடைந்தாலும் துவண்டு போகாமல் தொடர்ந்து படம் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நித்தின் சத்யா, இரண்டாவது படமாக 'லாக்கப்' படத்தை தயாரித்திருக்கிறார். இதில் வைபவ் ஹீரோவாகவும், சீரியல் நடிகை வாணி போஜன் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வெங்கட் பிரபு வில்லனாக நடித்திருக்கிறார்.

'லாக்கப்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து நித்தின் சத்யா உற்சாகமடைந்திருக்கிறார். டீசரை போல படத்திற்கும் வரவேற்பு கிடைத்தால், எதிர்காலத்தில் நித்தின் சத்யா தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவராக உருவெடுக்க வாய்ப்பியிருக்கிறது. அதனால், நித்தின் சத்யா 'லாக்கப்' படத்தை அதிகமாக நம்பியிருக்கிறார்.