X
தமிழ் » திரைப்படங்கள் » மேற்கு தொடர்ச்சி மலை
மேற்கு தொடர்ச்சி மலை

மேற்கு தொடர்ச்சி மலை

Drama | 24 Aug 2018 | 122 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

மேற்கு தொடர்ச்சி மலை கதை

மேற்கு தொடர்ச்சி மலை இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், ஆண்டனி, காயத்திரி கிருஷ்ணா நடிக்க படத்திற்கு இளையராஜா இசையமைக்க, விஜய் சேதுபதி தயாரிக்கிறார். கதை :  இது ஒரு வழக்கமான சினிமா அல்ல. ஒரு வாழ்வியல் பதிவு. தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள கிராமங்களுக்கு பொருட்களை சுமந்து செல்லும் தொழிலாளி ரங்கசாமிதான் (ஆண்டனி) படத்தின் நாயகன். மலை அடிவாரத்தில் இருந்து தினமும் பொருட்களை சுமந்து சென்று கிராமங்களில் உள்ள மக்களிடம் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து ஏலக்காய் மூட்டைகளை கீழே சுமந்து வந்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் இவரின் வாழ்க்கை வழியே, அந்த மக்களின் வாழ்வியலை பதிவு செய்கிறது படம். ரங்கசாமிக்கு சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பது தான் வாழ்நாள் கனவு. அதற்காக சிறுகசிறுக பணம் சேர்க்கிறார். இதனிடையே அவரது மாமன் மகள் ஈஸ்வரியை ('ஜோக்கர்' காயத்திரி) திருமணம் செய்துகொள்கிறார். ஒரு மகனும் பிறந்துவிடுகிறான். வாழ்க்கை இப்படியே நகர்ந்து கொண்டிருக்க, மலையடிவாரத்தில் ஒரு நிலம் விலைக்கு வருகிறது. அதை வாங்க கணவனும், மனைவியும் முயற்சி மேற்கொள்ளும் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ரங்கசாமி நிலம் வாங்கி விவசாயம் செய்தாரா இல்லையா என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது மீதிக்கதை.
Read More

மேற்கு தொடர்ச்சி மலை நடிகர்கள் & படக்குழுவினர்

மேற்கு தொடர்ச்சி மலை அணியின் தகவல்

இயக்குனர் லெனின் பாரதி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை இளையராஜா
தயாரிப்பாளர் விஜய் சேதுபதி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மேற்கு தொடர்ச்சி மலை விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
படத்தில் வரும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. கார்ப்ரேட் வாழ்க்கை பற்றி அறியாத அந்த எளிய மனிதர்களுக்கு பின்னால் நடக்கும் அரசியலை பற்றியும் படம் பேசுகிறது. விறுவிறு திரைக்கதை, ஆக்ஷன், டிவிஸ்ட், பாரின் சாங் என எவ்வித சினிமாதனமும் இல்லாமல், போகிற போக்கில் நாட்டுப்புறப் பாடலை போல கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று யோசித்ததற்காகவே இயக்குனர் லெனின் பாரதிக்கும், படத்தை தயாரித்த விஜய் சேதுபதிக்கும் பெரிய அப்ளாஸ். அதிலும் அந்த மலைமக்களையே நாயகர்களாக உலவவிட்டிருப்பதற்கு மீண்டும் ஒரு கைதட்டல். ஒரு தொழிலாளியின் வாழ்க்கை வழியாக, மேற்கு தொடர்ச்சி மலைக்கு பார்வையாளர்களை டிரக்கிங் அழைத்து செல்கிறார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும். எங்கிருந்தோ வந்து இங்கு குடியேருபவர்கள், நம்மையே எப்படி ஆட்டிப்படைக்கிறார்கள் என்பதை உரக்கடைக்காரர் கதாபாத்திரம் சைலண்டாக கடத்திப்போகிறது. உலகமயமாக்களின் தாக்கத்தால், கிராமங்களைவிட்டு விரட்டப்படும் மக்கள், நிலமற்றவர்களாக எப்படி மாறுகிறார்கள் என்பதையும் அழுத்தமாக சொல்கிறது படம். படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜாவின் இசை. அவரது பாடல்களும், பின்னணி இசையும் எப்படி இருக்கும் என புதிதாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. 'கேட்காத பாட்டு ஒண்ணு கேட்குது ஊரான ஊருக்குள்ள' பாட்டுக்கு தியேட்டரே தாளம் போடுகிறது. 'அந்தரத்தில் தொங்குதம்மா' பாடல் படத்தில் உயிர் நாடி. மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலாய் மனதுக்கு இதமளிக்கிறது இசைஞானியின் இசை. உலகமெங்கும் விரவிக்கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு இந்த படத்தை சமர்பனம் செய்திருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி. காடு, மலை, மேடு, எலக்காய் தோட்டம், யதார்த்த மனிதர்கள் என இயற்கையின் அழகை வெள்ளித்திரையில் காண போய்வாருங்கள் மேற்கு தொடர்ச்சி மலைக்கு. டிரக்கிங் அனுபவம் நிச்சயம்.

மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மேற்கு தொடர்ச்சி மலை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+