»   »  விஜய் சேதுபதி தயாரித்த படத்துக்கு ரிலீசுக்கு முன்பே விருது

விஜய் சேதுபதி தயாரித்த படத்துக்கு ரிலீசுக்கு முன்பே விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ள 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்துக்கு சர்வதேச அளவிலான விருது கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி 'மேற்கு தொடர்ச்சி மலை' என்ற படத்தைத் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

International award for Vijay Sethupathi production

இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 8-ந் தேதி முதல் நடந்து வந்த 'பயாஸ்கோப்' என்னும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.

இந்த திரைப்பட விழாவில்தான் 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வழங்கபட்டுள்ளது.

இந்த விழாவில் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay Sethupathy's debut production Merku Thodarchi Malai has received best cinematographer award in Bioscope film festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil