X
தமிழ் » திரைப்படங்கள் » ரஜினி முருகன்
ரஜினி முருகன்

ரஜினி முருகன்

Comedy | Romance | 14 Jan 2016 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ரஜினி முருகன் கதை

ரஜினி முருகன் தமிழ் நகைச்சுவை, காதல் மற்றும் அதிரடி கலந்த மசாலா திரைப்படம். இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்க சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சூரி, சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் துணை கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தினை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைத்துள்ளார். கதை :     ரஜினி முருகன் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் வேலையில்லாமல் ஊருக்குள் சுற்றித்திரிகின்றனர். ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ்-யை சந்திக்க பார்த்தவுடன் காதல் வருகிறது. ஆனால், கீர்த்தி சுரேஷ் அவரின் காதலை ஏற்க மறுக்கிறார். அதனால், கார்த்திகா (கீர்த்தி சுரேஷ்) வீட்டின் முன்பு சிவா கார்த்திகேயன் டீகடை போடுகின்றார்.  பின்பு டீ கடையை காலி செய்துவிட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்ய தொடங்க, அதே ஊரினை சேர்ந்த சமுத்திரகனி அதற்காக பணம் கேட்டு மிரட்டுகின்றார். இங்கு ஆரம்பிக்கின்றது மோதல்.  தன் வீட்டினை விற்றல் தான் தன்னுடைய வாழ்கையில் செட்டில் ஆகா முடியும் என்ற எண்ணத்தோடு வீட்டினை விற்க முற்சிக்கின்றார் சிவா கார்த்திகேயன். அதிலும் தனக்கு பங்கு வேண்டும் என்று நிற்கிறார் சமுத்திரகனி. இறுதியில்  அந்த வீட்டினை சிவா விற்றாரா..? அவரின் காதல் கை கூடியதா....? என்பதே மீதிகதை. 
Read More

ரஜினி முருகன் நடிகர்கள் & படக்குழுவினர்

ரஜினி முருகன் அணியின் தகவல்

இயக்குனர் பொன்ராம்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை டி இமான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ரஜினி முருகன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
கொஞ்சம் ஆக்ஷன், ஏகத்துக்கும் நகைச்சுவை, முக்கிய வில்லனே காமெடியனாக மாறுவது, துருப்புச் சீட்டு மாதிரி ஒரு சீனியர் நடிகர்... இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைத் தந்த இயக்குநர் பொன்ராமுக்கு பிடிபட்டுவிட்ட வெற்றி ஃபார்முலா! இந்த ஃபார்முலாவை வைத்து மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைத் தந்திருக்கிறார். படத்தின் தலைப்பே இது எந்த மாதிரி படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. எதிர்ப்பார்ப்போடு போகும் யாரையும் ஏமாற்றாத கலகல திரைக்கதை, படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் உட்கார வைத்து விடுகிறது. சிவகார்த்திகேயனுக்கு நடிப்புக்கு சவால் விடுவது மாதிரியான வேடமெல்லாம் இல்லை. அதே வவச -வின் நீட்சிதான் இந்த ரஜினி முருகன். பிடித்த, பழகிய வேலை என்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார் சிவா. சில பழகிய காட்சிகள், பழகிய திரைக்கதைதான் என்றாலும்... கொண்டாட்ட மனநிலையுடன் கொட்டகைக்கு வரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை ரஜினி முருகன்!

ரஜினி முருகன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ரஜினி முருகன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+