X
துணிவு

துணிவு

Action | Drama | Thriller | 11 Jan 2023 | U/A | 146 Mins
Tamil

2.7 /5 Users

4.5 /5 Filmibeat

துணிவு கதை

துணிவு - இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இந்தியா திரைப்பட பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் ' பேவியூ ப்ராஜெக்ட் ' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதிரடி - திரில்லர் திரைக்கதையில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் குமார்  பாவனி, அமிர், சிபி, ஜான், ஜி பி முத்து, சமுத்திரக்கனி, வீரா, பிரேம் குமார், மகாநதி ஷங்கர் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். துணிவு படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்க, தமிழ் திரைப்பட நடிகர் / தயாரிப்பாளர் மற்றும் தமிழக அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் தன் ' ரெட் ஜெயன்ட் மூவீஸ் ' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ் திரையுலகில் விநியோகம் செய்துள்ளார். நடிகர் அஜித் குமாரின் 61 வது திரைப்படமான துணிவு படம், 2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளது. துணிவு திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் துணிவு திரைப்படத்தின் டிரைலர் & பாடல் வீடியோக்கள் துணிவு திரைப்படத்தின் புகைப்படங்கள் துணிவு திரைப்படத்தின் கதை கதைக்கரு ஒரு வங்கியை கொள்ளையடிக்க கும்பலாக ஒரு அணி செல்கிறது. அந்த கும்பலை கட்டுப்படுத்தி வங்கியை தனது கட்டுப்பாட்டில் எஎடுத்து வங்கியை கொள்ளையடிக்கிறார், அஜித் குமார். கதை சென்னையில் உள்ள பிரபல தனியார் வங்கியில், போலீஸ் மற்றும் அந்த வங்கியின் அதிகாரிகளின் திட்டத்தின் படி வங்கியை கொள்ளையடிக்க வீரா மற்றும் அவரின் குழு செல்கிறது. ஆனால் அந்த வங்கியில் ஒரு வாடிக்கையாளர் போல இருக்கும் அஜித் குமார், வீரா மற்றும் அவரது குழுவை கட்டுப்படுத்தி வங்கியை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருகிறார். வங்கியை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்த அஜித்குமார், போலீஸ் மற்றும் அதிகாரிகளை தூண்டி பல விஷயங்கள் செய்து வருகிறார். அஜித் குமாருக்கு மஞ்சு வாரீர் வெளியிலிருந்து உதவி வருகிறார். பின் இவர்களை பற்றி விசாரிக்கும் போலீஸ், அஜித் குமார் ஒரு சர்வதேச கொள்ளைக்காரர் என்பதை அறிகிறது. ஒரு சர்வதேச கொள்ளைக்காரன் ஏன் ஒரு தனியார் வங்கியை குறி வைத்து கொள்ளையடிக்கிறார், என்பதே படத்தின் கதை. இந்த படத்தில் ஒரு வங்கியின் வாயிலாக கிடைக்கும் கிரெடிட் கார்ட், ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட், வட்டி இல்லா கடன், லோன் போன்ற பல திட்டங்கள்  மற்றும் அந்த திட்டங்களின் மூலம் முதலாளி வர்கத்தின் தந்திரம் என பல விஷயங்களை பற்றி எளிய மக்களுக்கு புரியும் வகையில் திரைக்கதையாக வடிமைத்து இயக்கியுள்ளார், ஹச் வினோத். துணிவு திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள் துணிவு திரைப்படம், நடிகர் அஜித்குமாரின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் '61'வது திரைப்படமாகும். அஜித் குமார் - ஹச். வினோத் - போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' திரைப்படங்கள் ஏற்கனவே உருவாகி தமிழ் சினிமாவில் ஹிட் அடித்துள்ளது. இவர்கள் கூட்டணியில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உருவாகும் திரைப்படமாகும், துணிவு. இப்படத்தில் நாயகியாக நடிகர் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். 2019ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் படமான அசுரன் படத்தில் நடித்து இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு இவர் நடிக்கும் இரண்டாவது தமிழ் திரைப்படமாகும், துணிவு. துணிவு படத்தின் இயக்குனர் ஹச். வினோத், தமிழ் சினிமாவில் ' சதுரங்க வேட்டை ' படத்தினை இயக்கி தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இப்படத்திற்கு பின் ' தீரன் - அதிகாரம் ஒன்று ' என்னும் பிளாக்பஸ்டர் படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் பலரின் கவனத்தை கவர்ந்து புகழ் பெற்றார். மூன்றவது படமாக அஜித்துடன் இணைந்து ஹிந்தி சினிமாவில் சூப்பர் ஹிட் ஆன 'பிங்க்' திரைப்படத்தினை 'நேர்கொண்ட பார்வை' என்று ரீமேக் செய்துள்ளார். பின் வலிமை, துணிவு என படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் உச்சம் அடைந்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு முன்பு வலிமை படத்தில் பின்னணி இசை மட்டும் ஜிப்ரான் பணியாற்றியுள்ளார். துணிவு திரைப்படம் இசையமைப்பாளர் ஜிப்ரான் திரைவாழ்வில் இவர் இசையமைத்துள்ள 50வது படமாகும். ஹச். வினோத் - ஜிப்ரான் கூட்டணியில் தீரன், வலிமை படத்திற்கு பிறகு துணிவு படத்தின் மூலம் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர். தீனா படத்திற்கு பின் 20 வருடங்களுக்கு பிறகு, அஜித் குமார் படத்தில் மகாநதி சங்கர் நடித்துள்ளார். நடிகர் அஜித்திற்கு 'தல' என்னும் புனைப்பெயரை வைத்தவரே மகாநதி ஷங்கர் தான். மேலும் இப்படத்தில் தமிழ் பிக்பாஸ் புகழ் அமிர், பவானி ரெட்டி, அமீர், சிபி மற்றும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், 'யூ டியூப்' புகழ் ஜி பி முத்து என பலர் நடித்துள்ளனர். துணிவு ரிலீஸ் 2021 - மார்ச் மாதம் அஜித் குமார் - போனி கபூர் - ஹச் வினோத் கூட்டணி பற்றிய தகவல்கள் வெளியாகின. 2022 பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமான இப்படத்தினை அறிவித்து ' AK 61 ' தலைப்பில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியது, படக்குழு. 2022 செப்டம்பர் மாதம் துணிவு திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் பாடல்களான சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரிய அளவில் தமிழ் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளது. துணிவு திரைப்படத்தின் டிரைலர் 2022 டிசம்பர் 31ல் ஆன்லைன் யூ டியூப் சேனல் மூலம் வெளியிடப்பட்டது. 2023 பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது.
Read More

துணிவு நடிகர்கள் & படக்குழுவினர்

துணிவு அணியின் தகவல்

இயக்குனர் ஹச் வினோத்
கதை ஹச் வினோத்
ஒளிப்பதிவாளர் நிரவ் ஷஹ்
தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி
இசை ஜிப்ரான்
தயாரிப்பாளர் போனி கபூர்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

துணிவு விமர்சகர்களின் விமர்சனம்

மாலைமலர்
மொத்தத்தில் துணிவு - வெற்றி.
தினமலர் - சினிமா
துணிவு - துணிவே துணை
சினிஉலகம்
மொத்தத்தில் லாஜிக் இல்லை என்றாலும் அஜித்தின் மேஜிக் படத்தை தூக்கி நிறுத்துகிறது.
தமிழ் சமயம்
துணிவு படத்தின் ஹைலைட்டே அதன் வேகம் தான். ஒரு காட்சியில் இருந்து மற்றொரு காட்சிக்கு படுவேகமாக செல்கிறது கதை.
பில்மிபீட்
இந்த படத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கும் அளவுக்கும் தரமான சம்பவத்தை செய்துள்ளனர்.

துணிவு ட்ரெய்லர்

Video Thumbnail

துணிவு பாடல்கள்

Music Director: ஜிப்ரான்

துணிவு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Once again a good movie from vamsy with his style of making and perticulary the songs. Experts rating to be little more i think.

  • Excellent No body has caught the sessence of Konaseema & River Godaavari like him & never before him. The satires, the local flavour of 2nd line love affairs very imaginative. Tempting. The canoe, boat travel in Konaseema canals made him a..

  • Good movies very interesting especially music is extraordinary both songs n bg recommended to wiew

  • good screenplay, songs picturisation is wonderful.Village backdrop.Feel good movie.Yet another penning and direction from Vamshy.

  • I dont know what is the fate of movie, Manasa is iron leg and all the movies where Manasa acted are big disasters be it Romance,Katamrayudu, Devuduchesina Manushulu,I wish good luck to the team and i hope this iron leg will not have impact on this ..

  • please change the title&geners

×
2.7 /5 Your Rating

துணிவு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+