»   »  சுகன்யா தி மியூசிக் டைரக்டர் - புதிய அவதாரம் எடுக்கும் நடிகை!

சுகன்யா தி மியூசிக் டைரக்டர் - புதிய அவதாரம் எடுக்கும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சுகன்யா புது அவதாரம் எடுக்கப் போகிறாராம்.

இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகமாகி தமிழ்த் திரையுலகுக்கு வந்தவர் நடிகை சுகன்யா.

புது நெல்லு புது நாத்து தொடங்கி பல படங்களில் நடித்துள்ளார்.

சின்னக் கவுண்டர், மகாநதி, இந்தியன் போன்ற படங்கள் சுகன்யாவின் நடிப்புத் திறமையை பட்டொளி வீசிப் பறக்க உதவியவை.

கொடி கட்டி பறந்த சுகன்யா:

கொடி கட்டி பறந்த சுகன்யா:

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவரான சுகன்யா பின்னர் அம்மா, அக்கா, அண்ணி கேரக்டர்களுக்கு நோ சொல்லியபடியே சிலகாலமாய் தலைமறைவாய் இருந்து வந்தார்.

தீவிரமாக சான்ஸ் வேட்டை:

தீவிரமாக சான்ஸ் வேட்டை:

இந்நிலையில் நடிகை சுகன்யா தற்போது மிகத்தீவிரமாக சான்ஸ் தேடி வருகிறாராம். நடிகையாக அல்ல, மியூசிக் டைரக்டராக.

இசை ஆல்பம் வேறு:

இசை ஆல்பம் வேறு:

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு சுகன்யா ஒரு இசை ஆல்பம் வெளியிட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.

கடுமையான பயிற்சிகள்:

கடுமையான பயிற்சிகள்:

இதுகுறித்து அவர், "கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு நன்றாகத்தேறிவிட்டேன் என்று உணர்ந்தபிறகே இம்முடிவை எடுத்திருக்கிறேன்.

தமிழ்ப் படத்தில் விருப்பம்:

தமிழ்ப் படத்தில் விருப்பம்:

ஒரு நல்ல இயக்குநரின் படத்தில், குறிப்பாக தமிழ்ப்படத்தில் இசையமைப்பாளராகவே விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார் சுகன்யா.

அதுக்கும் சான்ஸ் இருக்கு:

அதுக்கும் சான்ஸ் இருக்கு:

நடிகையாக மட்டுமல்லாமல் அருமையான பரதநாட்டிய டான்ஸராகவும் இருப்பவர் சுகன்யா என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இசையிலும் கை வைக்கும் அவர் அப்படியே இயக்குநர் அவதாரம் எடுத்தாலும் எடுப்பார் போல.

English summary
Actress Suganya trying for music director chance in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil