"ஐத்தலக்கா" பாடலுக்காக மீண்டும் அனிருத்துடன் இணையும் பிரபலம்...யார் தெரியுமா ?

சென்னை : இசையமைப்பாளர் அனிருத், வீடியோ ஆல்பம் ஒன்றிற்காக பாடி உள்ளார். செம குத்து பாடலான இந்த வீடியோ ஆல்பம் பாடலில் பிக்பாஸ் பிரபலமான தர்ஷன் நடித்துள்ளார். இந்த பாடல் குட்டி பட்டாஸ் ஆல்பத்தில் இடம்பெற்ற முணுமுணுக்குற முத்தம்மா பாடலை விட அதிகமான இளைஞர்களை கவரும் என கூறப்படுகிறது.

Again Anirudh and Ganesh Chandrasekar combo joins for Itthalakka song

பிரபல பாடகரும் ராக்ஸ்டார் இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் Video Albumற்காக மீண்டும் ஒரு பாடலை பாடி உள்ளார். இந்த பாடலுக்கு கணேஷ் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தனக்காக அனிருத் இந்த பாடலை பாடி கொடுத்ததில் இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் உற்சாகமடைந்துள்ளார். கணேஷும் அனிருத்தும் முன்பு நடிகர் விவேக்கின் எழுமின் படத்தில் இணைந்து பணியாற்றினர். இது கணேஷின் முதல் படமாகும். Album ஃபர்ஸ்ட் லுக்கை குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆல்பம் பற்றிய கணேஷ் கூறுகையில், "ஐத்தலக்கா" ஒரு தரமான பார்ட்டி குத்து பாட்டு, இப்பாடலுக்கு தமிழ் பிக்பாஸ் புகழ் தர்ஷன் நடனமாடுகிறார் என்றார். அனிருத்துடனான அவரது ஒத்துழைப்பைப் பற்றி கேட்டதற்கு, அனி எளிமையானவர் மற்றும் எளிதில் அணுகக்கூடிய நபர் என்று கணேஷ் கூறினார். இந்தப் பாடலைப் பற்றி எனக்கு யோசனை தோன்றியபோது, நீங்கள் பாடினால் அருமையாக இருக்கும் என்று அவருக்கு மெசேஜ் அனுப்பியிருந்தேன். சிறிதும் யோசிக்காமல் அந்தப் பாடலைப் பாட ஒப்புக்கொண்டார்.

சில நாட்களுக்குப் பிறகு, அனியிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் எனது இமெயிலை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். அதில் அவர் அப்பாடலின் பதிவுகளை அனுப்பினார். நான் ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால் நான் அவருடைய ஸ்டுடியோவில் அவரது குரலைப் பதிவு செய்ய காத்திருந்தேன். ஆனால் தொற்றுநோய் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனிருத் தானே பதிவுசெய்து மெயிலில் அனுப்புவதன் மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வுக்காகவும், பணியை எளிதில் முடித்துவிட்டார். இறுதிக் கலவையை முடிக்க சில நாட்களுக்குப் பிறகு சந்தித்தோம் என்றார்.

கணேஷ் சந்திரசேகரன் முதன்முதலாக மியூசிக் வீடியோவில் தோன்றுவதால் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார். தான் வரும் போகும் காட்சியை மிகவும் பில்டப் செய்து வரிசைப்படுத்தியதற்கு டைரக்டர் லோகேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்தார். நான் தர்ஷன் உடனும் ஸ்ரீதர் மாஸ்டர் உடனும் சேர்ந்து நடனமாடும் காட்சியை ரசிப்பீர்கள் என்று மேலும் கூறினார்.

இப்பாடலுக்கு நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் எளிமையான மற்றும் தனித்துவமான சிக்னேச்சர் ஸ்டெப்பை இயற்றியுள்ளார். இது இன்ஸ்டா ரீல்கள் மற்றும் சமூக வலைதளங்களை உலுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜா குருசாமி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.மாயோன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மியூசிக் வீடியோவை லஹரி மியூசிக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் பாடலை மிகவும் எதிர்பார்ப்புடன் இக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X