twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படமெடுக்காத தயாரிப்பாளர்கள்தான் பிரச்சினை பண்ணுகிறார்கள்! - அமீர் பரபரப்பு பேச்சு

    By Shankar
    |

    Ameer
    சென்னை: தயாரிப்பாளர்கள் - பெப்சி தொழிலாளர் இடையே பிரச்சினையைப் பெரிதாக்குபவர்கள், சினிமா தயாரிக்காமல் சும்மா இருக்கும் தயாரிப்பாளர்கள்தான், என்று இயக்குநர் அமீர் கூறினார்.

    சினிமா உலகில் அனைவருக்கும் தெரிந்த, ஆனால் யாரும் வெளியில் பேசத் தயங்கும் இந்த உண்மையை ஒரு விழாவில் பளிச்சென்று போட்டுடைத்துவிட்டார் அமீர்.

    புதுமுகங்கள் ஆரி-சுபா ஜோடியாக நடித்து, நாராயண் நாகேந்திரராவ் டைரக்டு செய்துள்ள படம், 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே.' இந்த படத்தை ஸ்ரீலட்சுமி நரசிம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சி.எச்.மயூரி சேகர் தயாரித்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

    இயக்குநர்கள் சேரன், அமீர், மிஷ்கின், பிரபு சாலமன், பிரபாகர், அறிவழகன், தாமிரா, பாலாஜி மோகன் ஆகிய 8 டைரக்டர்கள் சேர்ந்து பாடல்களை வெளியிட, அவர்களிடம் உதவி டைரக்டர்களாக இருந்தவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

    விழாவில், அமீர் பேச்சுதான் ஹைலைட். அவர் கூறுகையில், "சிறு பட தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம், இந்த படத்தின் தயாரிப்பாளர். அவர் பேசும்போது மிகவும் சந்தோஷமாக பேசினார். படம் தயாரிப்பவர்களும், வேலை செய்பவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

    படம் தயாரிப்பவர்கள், படம் தயாரிக்க தயாராக இருக்கிறார்கள். தொழிலாளர்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். படமே தயாரிக்காமல் சும்மா இருப்பவர்கள்தான் பிரச்சினை செய்கிறார்கள்.

    ஒரு மணி நேரத்தில்...

    ஒரு மணி நேரத்தில் பேசி, முடிய வேண்டிய பிரச்சினை. படம் எடுக்காதவர்கள் பிரச்சினையை பெரிதாக்கி, அதை தீர்க்கவிடாமல் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்,'' என்றார்.

    இயக்குநர் சேரன் கூறுகையில், "நான் சாமி கும்பிட மாட்டேன். என் முன்னோர்களை மனசுக்குள் நினைத்துக் கொள்வேன். அது, எங்க அம்மாச்சியாகக் கூட இருக்கலாம். தயாரிப்பாளர்கள்-தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சினை தீர வேண்டும் என்று மனசுக்குள் பிரார்த்திக்கிறேன்.

    இந்த பிரச்சினையை சீக்கிரம் பேசி முடிக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களுக்கு நட்சத்திர கிரிக்கெட் மீது மோகம் வந்துவிடும். அமீர்கானும், சல்மான்கானும் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தால், அதைத்தான் பார்ப்பார்கள். அப்படி கிரிக்கெட் மீது மோகம் ஏற்படாமல் இருக்க, பட அதிபர்கள்-பெப்சி பிரச்சினையை உடனே தீர்க்க வேண்டும்,'' என்றார்.

    தயாரிப்பாளர் மயூரி சேகர் வரவேற்றுப் பேசினார். இயக்குநர் நாராயண் நாகேந்திரராவ் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை, பிஆர்ஓ நிகில் முருகன் தொகுத்து வழங்கினார்.

    English summary
    Director Ameer blasted producers for not solving the FEFSI issue in time. He told that some of the producers who are not producing films creating issues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X