உலக அளவில் சாதனை படைத்த ‘’அரபிக்குத்து’’ … கொண்டாடும் ரசிகர்கள் !

சென்னை : அரபிக்குத்து பாடல் உலக அளவில் புதிய சாதனை படைத்துள்ளது.

இதனை விஜய்யின் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக்குகளை தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

யூடியூபிலும் இதுவரை 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 50 மில்லியனை தொட உள்ளது.

பீஸ்ட்

பீஸ்ட்

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படத்தை வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின.

அரபிக்குத்து

அரபிக்குத்து

பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு, பீஸ்ட் படத்தில் இருந்து முதல் சிங்கிள் லிரிக் வீடியோ வெளியானது.அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான அரபிக்குத்து பாடல், சில மணி நேரங்களிலேயே யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. ஹலமதி ஹபிபோ பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்தனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் இணைந்து பாடிய செல்லம்மா செல்லம்மா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.

40 மில்லியன் பார்வையாளர்கள்

அரபிக்குத்து பாடல் வெளியான 24 மணி நேரத்திலேயே 25 மில்லியன் பார்வையாளர்கள் யூடியூப்பில் கண்டு ரசித்தனர். மேலும் 24 மணி நேரத்தில் 2.2 மில்லியன் லைக்குகளை பெற்று 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது. பாடல் வெளியான 3 நாளில் யூட்யூப்பில் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Recommended Video

அரபிக்குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட சமந்தா.. அட.. இவங்களையே ஹீரோயினா போட்டு இருக்கலாம்!
உலக அளவில் சாதனை

உலக அளவில் சாதனை

இந்நிலையில், அரபிக்குத்துப்பாடல் ஸ்பாட்டிஃபை தளத்தில் உலக அளவில் ட்ரெண்டாகி உள்ள 200 பாடல்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஹலமித்தி ஹபிபோ பாடல் வெறும் 48 மணி நேரத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த தகவலை சன்பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளது. இதனை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X