»   »  'ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி' சிங்கிள் டிராக் விரைவில்

'ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி' சிங்கிள் டிராக் விரைவில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 'ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி' பாடலின் ஆரம்ப வரிகளை வெளியிட்டு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

தெறி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் நேற்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடலின் ஆரம்ப வரிகளை வெளியிட்டிருக்கிறார். "ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி...தொப்பியில சிங்கத்த பாரேன், தோளுல ஸ்டார வாங்கும் போலீசுகாரன்".


G.V.Prakash Released Theri Lyrics

என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலின் வரிகள் தற்போது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. மேலும் இந்தப் பாடல் மட்டும் விரைவில் வெளியாகும் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மார்ச்சிலும், படம் ஏப்ரலிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்க்கு தெறி 50 வது படமாக அமைந்துள்ளது.


இதனால் தெறி பாடல்களை ஹிட்டடிக்க வைப்பதற்கு கடுமையாக உழைத்து வருகிறாராம் ஜி.வி.பிரகாஷ்.


English summary
Yesterday Music Composer G.V.Prakash Released Theri Song Lyrics. He Tweeted "Thinking over a single soon #jithujilladi #GV50 #theri".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil