»   »  சமஸ்கிருத அனிமேஷன் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி

சமஸ்கிருத அனிமேஷன் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1000 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்த நமது இசைஞானி இளையராஜா தற்போது சமஸ்கிருத மொழியில் உருவாகும் ஒரு அனிமேஷன் படத்திற்கு இசையமைக்கிறார்.படத்தின் பெயர் "புண்யகோடி".... விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும்இடையே உள்ள சிக்கல்களை இந்தப் படம் பேசவிருக்கிறது.

படத்தின் இயக்குனர் ரவிசங்கர் இந்தப் படத்தை ஏன் சமஸ்கிருத மொழியில் எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு நம் இந்திய மொழி மற்றும் பண்பாடு தற்போது மாறிக் கொண்டே செல்கிறது. தற்போது நாம் பேசும் மொழிகளில் அந்நிய மொழிகளின் கலப்பு அதிகமாக உள்ளது.நம் இந்திய பண்பாடு மற்றும் பாரம்பரியத்துக்கு என்னால் முடிந்த ஒரு காணிக்கையாக இந்த படத்தை அர்ப்பணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Ilaiyaraja To Score The Music Of First-Ever Sanskrit Animation Film

படத்தின் கதை என்ன

காரநாடு என்ற கிராமத்தில் உண்மையை மட்டும் பேசும் ஒரு பசுமாடு உள்ளது. ஒருநாள் அது ஒரு புலியிடம் மாட்டிக் கொள்ளும். மிகுந்த பசியில் இருக்கும் புலி மாட்டை அடித்துச் சாப்பிட விரும்பும். அப்போது மாடானது எனது கன்று வீட்டில் பசியோடு எனக்காக காத்துக் கொண்டு இருக்கும் ..நான் சென்று அதற்கு பால் கொடுத்துவிட்டு வருகிறேன் என்று கூற புலியும் அதற்கு சம்மதிக்கிறது.

உயிரா அல்லது நேர்மையா

வீட்டிற்கு சென்று பாலைக் கொடுத்து விட்டு அப்பாடா தப்பித்தோம் என்று பசுமாடு நினைக்கும். ஆனால் அதன் நேர்மை மனசாட்சியை உறுத்த மீண்டும் அந்தப் புலியை நோக்கி செல்கிறது பசு... முடிவு என்ன என்பதை படத்தில் காணலாம்.

அனிமேஷன் படங்கள் குறைவது ஏன்

நமது நாட்டில் அனிமேஷன் படங்கள் ஏன் தரமாக வருவதில்லை என்றால் படம் எடுப்பதற்கு லட்சக் கணக்கான படைப்பாளிகள் இருக்கிறார்கள் ஆனால் பணம் செலவிட யாரும் தயாராக இல்லை இதுதான் உண்மை.

எல்லோரும் தயாரிப்பாளரே

இயக்குனர் ரவிசங்கர் கூறும் பொழுது இந்தப் படத்தின் கதையை நான் எழுதி முடித்து விட்டேன்.இந்தக் கதையை படமாக்குவதற்கு நிறைய ரசிகர்கள்ஆதரவு அளித்திருக்கிறார்கள் ..ஆனால் பணம் இல்லாததால் படம் தடைபடுகிறது.இந்தப் படத்திற்கு யார் வேண்டுமானாலும் பணம்
கொடுத்து உதவலாம் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இசைக்கு காப்பிரைட் படத்திற்கு அல்ல

படத்தின் உரிமையை காப்பிரைட் பண்ண நான் விரும்பவில்லை , படத்தின் இசையை காப்பி ரைட் பண்ணவிருக்கிறேன் ஏனெனில் அது பெருமைமிக்க நமது இசைஞானியின் படைப்பு என்பதால் என்று இசைஞானியை புகழ்ந்து தள்ளும் ரவிசங்கர் 2016 ம் ஆண்டில்இந்தப் படத்தை வெளியிட உள்ளார்.

மொழியானது ஒருபோதும் இசைக்கு தடையாக இருப்பதில்லை...

English summary
composer Ilaiyaraaja is to score the music of the first-ever animation film in Sanskrit titled as Punyakoti. The novel venture is directed by Ravishankar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil