Don't Miss!
- News
ஷோகேஷில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகை மாயம்.. திருடன் என சிசிடிவி காட்சிகளை பார்த்தால்.. ட்விஸ்ட்!
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சத்தமில்லாமல் சாதனை படைத்த சூர்யா பட பாடல் !
சென்னை: நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப் போற்று
சுதா கொங்கரா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் தயாராகி வந்த சூரரைப் போற்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது
ரசிகர்களின் பெரும் ஆதரவை தொடர்ந்து ஆஸ்கர் கதவை தட்டிய சூரரைப்போற்று படத்தில் இடம்பெறும் காட்டுப் பயலே பாடல் இப்பொழுது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
வெள்ளித்திரைக்கு
தாவும்
சின்னத்திரை
பிரபலம்...
வெப்
தொடரிலும்
நடிக்கிறார்

சூரரைப்போற்று
நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் என்றாலே தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களும் விரும்பிப் பார்க்கக் கூடிய படங்களாக இருந்து வருகிறது அந்த அளவிற்கு சூர்யாவின் திரை படங்கள் ஒவ்வொன்றும் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இறுதிச்சுற்று வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த சூரரைப்போற்று திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசானது

சுதா கொங்கரா செதுக்கியா
எந்த ஒரு இடத்திலும் திகட்டாத அளவிற்கு பார்த்து பார்த்து இந்த படத்தை சுதா கொங்கரா செதுக்கி இருந்தார். விறுவிறுப்பான திரைக்கதை,காதல் சென்டிமென்ட், போராட்டம் என தாறுமாறாக வெளியான சூரரை போற்று அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது மேலும் சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கிக் குவித்த இந்த திரைப்படம் ஆஸ்கர் கதவுகளையும் பலமாக தட்டியது

கல்யாண பாடலாக
இயக்கம் நடிப்பு என ஒருபுறம் அனைவரது பாராட்டுகளை பெற்று இருந்தாலும் மற்றொருபுறம் சூரரைப்போற்று படத்தின் வெற்றிக்கு ஜிவி பிரகாஷ் குமாரின் இசை மிகப் பெரிய பக்கபலமாக இருந்துள்ளது. பேக்ரவுண்ட் மியூசிக் மட்டுமல்லாமல் பாடல்களும் இந்த படத்தில் ஒவ்வொன்றும் அட்டகாசம். அந்த வகையில் கல்யாண பாடலாக உருவான காட்டு பயலே பாடல் இணையதளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தது இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் ரசித்த இந்த பாடல் இணையதளத்தில் அதிக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

100 மில்லியன் பார்வையாளர்களை
ஏன் இன்றுவரை காட்டுப் பயலே பாடலுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது கவிஞர் சினேகன் வரிகளில் உருவான இந்த பாடல் ஜிவி பிரகாஷின் இசையில் முழுமை பெற்று பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் காட்டுப் பயலே பாடல் யூட்யூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது . ஏற்கனவே சூரரைப்போற்று பல விருதுகளை குவித்து வரும் சூழலில் இப்பொழுது காட்டு பயலே பாடல் நூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்து தாறுமாறாக சாதனை செய்து வருவது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.