»   »  கபாலி ஆடியோ சிடி விற்பனை எப்படி?

கபாலி ஆடியோ சிடி விற்பனை எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம் முக்கியப் படங்களின் இசைத் தட்டு - கேசட் வெளியானாலே போதும், முதல் நாளிலேயே பல ஆயிரம் விற்றுத் தீர்ந்துவிடும்.

முக்கியமாக ரஜினியின் பட ஆடியோ விற்பனை புதுப்புது உச்சங்களைத் தொடும். சிவாஜி, எந்திரன் பாடல் சிடிக்கள் விற்பனை பெரும் சாதனை நிகழ்த்தின.


Kabali audio sales update

இன்று மாற்று பொழுதுபோக்குகள் ஏராளம். அதேபோல இசை கேட்க இசைத் தட்டுக்களையோ, கேசட், சிடிக்களையோ மட்டும் நம்பியிருக்கத் தேவையில்லாத நிலை.


ஜஸ்ட் சில நொடிகளில் பதிவிறக்கிக் கேட்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டதால், ஆடியோ விற்பனை என்பதே வழக்கொழிந்த ஒன்றாகிவிட்டது.


இந்த சூழலில்தான், நிலைமை புரிந்து கபாலி இசை வெளியானது. ஆடியோ சிடி, ஐட்யூன்ஸ், மொபைல் பதிவிறக்கம் என அனைத்து வழிகளிலும் பாடல்களை வெளியிட்டனர் திங்க் மியூசிக் நிறுவனத்தினர்.


கபாலி ஆடியோ சிடியின் விற்பனை நிலவரம் எப்படி உள்ளது? பாடல்களை வெளியிட்ட திங்க் மியூசிக் நிறுவனத்தின் மூத்த மேலாளர் சந்தோஷ் குமார் ஒரு பேட்டியில் கூறியதாவது:


முதல் நாளன்று 10,000 கபாலி ஆடியோ சிடிக்களை விற்றுள்ளோம். மேலும் 5,000 சிடிக்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டன. யூடியூப் போன்ற அதிகாரபூர்வமான இணையத்தளங்கள் வழியாகவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பாடல்களைக் கேட்டுவருகிறார்கள். அதன்மூலமாகவும் வருமானம் கிடைத்துள்ளது. முறைகேடாகப் பாடல்களை வெளியிட்டுள்ள இணையத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உள்ளோம்," என்று கூறியுள்ளார்.

English summary
Think Music says that the audio CD sales and download for Kabali songs is good and overwhelming.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil