மார்கழியில் மக்களிசை...கானா பாட்டுக்கு கலைமாமணி பா.ரஞ்சித் அரசுக்கு விடுத்த வேண்டுகோள்

சென்னை : நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

Recommended Video

Director Pa.Ranjith Speech in Margazhi Makkal Isai Chennai

இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை ஐந்தாவது நாளாக சென்னை கிருஷ்ணா கானா சபாவில் கோலாகலத் திருவிழாவாக "கானா பாடல்கள்" என பெயரிடப்பட்டு நடந்தது.

Margaliyil makkalisai becomes trending every day

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா "இந்நிகழ்ச்சியில் பாடிய கானா கலைஞர்களை அரசாங்கத்தின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்வேன்" என்றும் கவிஞர் கபிலன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

கானாவுக்கு கலைமாமணி

கானாவுக்கு கலைமாமணி

பின்பு கவிஞர் கபிலன் பேசியபோது... "இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி முதன் முறையாக கிருஷ்ணா கானா சபாவில் நடத்தியதற்க்காக பாராட்டுகளை தெரிவித்தார்.இதனை தொடர்ந்து பேசிய பா.ரஞ்சித் மற்ற இசைக்கலைஞர்களை போல இக்கானா இசைக் கலைஞர்களுக்கும் கலை மாமணி விருது வழங்குவதற்கான முயற்சியை தமிழக அரசிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறி மற்றும் கவிஞர் கபிலன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார்.

தமிழ் இசை சங்கத்தில்

தமிழ் இசை சங்கத்தில்

இம்மார்கழி மக்களிசையில் கலந்துக்கொண்ட அனைத்து கானா மக்களிசை கலைஞர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களின் கரங்களால் விருது கொடுத்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேலும் இன்று 29/12/2021 தமிழ் இசை சங்கத்தில் நடைபெறும். அனைவரும் வாரீர் அன்போடு அழைக்கிறோம் என்று மார்கழியில் மக்களிசை நடத்தும் குழுவினர் அன்போடு ஒருவருக்கு ஒருவர் தெரிவித்து கொண்டனர் .

அம்பேத்கர் என்ற தலைப்பில்

அம்பேத்கர் என்ற தலைப்பில்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பு என்று எடுத்துக்கொண்டு மார்கழியில் மக்கள் இசை மக்களை மகிழ்விக்க பல்வேறு புதுவிதமான எண்ணங்களுடன் செயல்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அம்பேத்கர் என்ற தலைப்பில் ஒரு மாலை பொழுது முழுவதுமாக அம்பேத்கரை போற்றி அவருடைய சிந்தனைகளை பாடல்களாக ஊற்றி மக்களை ஆச்சிரியத்தில் கொண்டு வந்தது மார்கழியில் மக்கள் இசை.

ஒரு தனி மேடை அமைத்து

ஒரு தனி மேடை அமைத்து

டிசம்பர் மாதம் ஒவ்வொரு ஆண்டும் வரும்பொழுது பல மயிலாப்பூர் சபாக்களில் கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய கலைகளை போற்றிப் புகழ்ந்து அதற்கென்று ஒரு தனி ரசனையுடன் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வந்தனர். இதற்கு இடையில் மக்கள் இசை என்பதற்கு ஒரு தனி மேடை அமைத்து இந்த இசையையும் மக்கள் ரசிக்க வேண்டும் இந்த இசைக் கலைஞர்கள் அங்கீகாரம் பெற வேண்டும் என்று எடுக்கப்பட்ட இந்த மாபெரும் முயற்சி ஒவ்வொரு ஆண்டும் விஸ்வரூபமாக வளர்ந்து வரும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. கலை என்று எடுத்துக்கொண்டால் அதில் இருக்கும் ஜீவன் சரியான முறையில் ஒரு ரசிகனை ஆழ்மனதில் தொட்டுவிட்டால் அந்தக் கலையும் கலைஞனும் வெற்றி பெறுகிறார். மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியை பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். டிசம்பர் 31 வரை இந்த இசை முழக்கம் தொடரும்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X