மக்களிசை மகத்துவம் பெறும் தருணம் ...மார்கழி மாதம் என்றால் இனி ஒவ்வொரு ஆண்டும் மக்களிசை இருக்கும்

சென்னை: நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

Recommended Video

சென்னை: மார்கழி மாத இசை கச்சேரி திருவிழா… அசத்திய இசைக் கலைஞர்கள்!

இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை நான்காவது நாளாக சென்னை ஐஐடி-யில் கோலாகலத் திருவிழாவாக "ஜெய் பீம்" நிகழ்ச்சி என பெயரிடப்பட்டு நடந்தது.

Margaliyil makkalisai becomes trending with variety of music

மார்கழி மாதம் என்றால் கர்நாடக இசை கச்சேரிகள் மட்டுமே கோலோச்சி இருக்கும் சூழலில் இப்படிப்பட்ட மக்கள் இசை மிக மிக அவசியம் என்று பலரும் கருதி வருகின்றனர் . யார் மனதும் புண்படாத வகையில் பாடல் மக்களை சென்று அடைய வேண்டும் என்பது தான் அனைவரது நோக்கமும் .

உறுதுணையாக இருப்பேன்

உறுதுணையாக இருப்பேன்

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக விசிக துணை பொது செயலாளர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஆளூர் ஷாநவாஸ் "இது இசை நிகழ்ச்சி அல்ல போராட்டத்தின் வடிவம் என்றும் இதுபோன்ற கலைநிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தும் இயக்குனர் பா.ரஞ்சித் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என்றும் கூறி ,பின்பு உரிமையை அனைவரும் சமமாக பகிர்ந்து பயன்பட வேண்டும் என்றும் மார்கழியில் மக்களிசையை சிறப்பித்து கூறினார்".

பெரும் மகிழ்ச்சி

பெரும் மகிழ்ச்சி

நிகழ்ச்சியில் அடுத்ததாக உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் "எங்கோ இருக்கும் கலைஞர்களை ஐஐடி-யில் இருக்கும் இம்மேடையில் அரங்கேற்றியது பெரும் மகிழ்ச்சியை அளித்தது".என்றுக்கூறி மார்கழியில் மக்களிசையை சிறப்பித்தார்.தமிழச்சி தங்கப்பாண்டியன் தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்கள் இசை பாடல்களுக்கும் கிராமிய பாடல்களுக்கும் மிகவும் உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

அண்ணல் அம்பேத்கரின் அரசியல்

அண்ணல் அம்பேத்கரின் அரசியல்

சமூக செயற்பாட்டாளரான கவின் மலர் பேசியது " சமூக செயற்பாட்டாளர் மற்றும் பாடகர் தலித் சுப்பையா அவர்களின் பாடலைக் கேட்டு வளர்ந்தவள் நான்" என்றும் இம்மார்கழியில் மக்களிசையில் கலந்துக்கொண்டது மிக மகிழ்ச்சியை தந்தது என்று சிறப்பித்து கூறினார். நிகழ்ச்சியன் முடிவில் பேசிய பேராசிரியர் மற்றும் ஆலோசகர் அரங்க மல்லிகா "அண்ணல் அம்பேத்கரின் அரசியல் இன்றைக்கும் என்றென்றைக்கும் தேவை" என்று மிக உற்சாகமாக மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார்.

மக்களிசை மகத்துவம்

மக்களிசை மகத்துவம்

இம்மார்கழி மக்களிசையில் கலந்துக்கொண்ட அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களின் கரங்களால் விருது கொடுத்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேலும் 28/12/2021 கிருஷ்ணா கானா சபாவில் நடைபெறும் என்று தகவல் சொல்லி உள்ளார்கள் . அனைவரும் வாரீர் அன்போடு அழைக்கிறோம்.என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகின்றனர் இக்குழுவினர். மக்களிசை மகத்துவம் பெறும் தருணங்களை பொக்கிஷமாக அனைவரும் பார்க்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X